தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 139: 23,24

தேவனே, என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்துகொள்ளும்; என்னைச் சோதித்து, என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும்.

வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து, நித்திய வழியிலே என்னை நடத்தும்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.     அல்லேலுயா.

நம்முடைய குறைகளை கண்டுபிடித்து தேவ சமூகத்தில் சமர்ப்பித்தல்

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே , கழிந்த நாட்களில் நாம் தியானித்த வேதப்பகுதியில் தேவன் நம் நடுவில் உலாவுகிறதையும் அவருடைய வார் த்தையாகிய அக்கினியை அனுப்பி நம் உள்ளத்தை பரிசோதித்து பின்பு நம்மிடத்தில் இருக்கிற குறைகளை கண்டறிந்து நம் ஆத்துமா எந்த காரியத்தில் விழுந்து கிடக்கிறது என்பதை ஆராய்ந்து அறிந்து, தேவனோடு நாம் உடன்படிக்கை எடுத்த நாட்களில் இருந்த ஐக்கியத்திலிருந்து எங்கே நம் இருதயம் தூரம் போனது என்பதை நாம் உணர்ந்து மீண்டும் மனந்திரும்பி தேவனிடத்தில் சேரவேண்டும் என்பதை குறித்து தேவன் சொல்வது, நீ ஆதி அன்பை இழந்தாய் அதனால் மீண்டும் நீ எங்கே விழுந்தாயோ அதை நினைத்து மீண்டும் மனம்திரும்பினால், தேவனுடைய பரதீசியின் மத்தியிலுருக்கிற ஜீவ விருட்சத்தின் கனியை புசிக்க கொடுப்பேன் என்பதை தியானித்தோம்.

  அடுத்ததாக நாம் தியானிக்கப்போகிறது என்னவெனில் இரண்டாவது சிமிர்னா சபைக்கு கர்த்தர் நம்மிடம் சொல்வது தங்களை யூதரென்று சொல்லியும் யூதராயிராமல் சாத்தனுடைய கூட்டமாயிருக்கிறவர்கள் நம்மை தூஷிக்கிறதை கர்த்தர் சொல்கிறார்; பாடுகள் உண்டு, ஆனால், பயப்படாதே யுங்கள் நாம் உண்மையாக இருந்தால் ஜீவ கீரிடம் நமக்கு தேவன் தருகிறார் ஜீவ கீரிடம் பெற்று கொள்ள வேண்டுமானால் நாம் சோதனை எல்லாம் சகிச்சு இருந்தால் மாத்திரமே முடியும் அப்படியானால் இரண்டாம் மரணம் நம்மை சேதப்படுத்துவதில்லை. மூன்றாவதாக பெர்கமு சபையோடு கர்த்தர் சொல்வது நாம் அனேக காரியங்களில் உண்மையாக இருந்தும் நம்மளில் எதோ சில குறைகள் நமக்கு தெரியாதபடி இருந்தால் அதைக் குறித்து தேவன் சொல்வது உன் பேரில் எனக்கு குறை உண்டு நாம் விக்கிரங்களுக்கு படைத்தவைகளை புசித்தாலும் பிலேயாம் போதகம் கைக்கொண்டால் அவை நாம் தேவனுக்கு விரோதமாக அக்கிரமம் செய்கிறோம்.   அதைப்போல் நிக்கொலாய் மதஸ்தரின் போதகம் நம்மிடத்திலுண்டு என்று சொல்கிறார் ஆனால் இவ்விதமான கிரியை நாம் விட்டுவிட்டு உண்மையாக நாம் தேவனுக்கு கீழ்ப்படிந்து அவருடைய சத்தத்துக்கு செவிகொடுப்போமானால் மறைவான மன்னாவை புசிக்க தந்து வெண்மையான குறிக்கல்லையும் புதிய நாமத்தையும் தருகிறார் அதை குறித்து 

வெளி 2:17 

ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவனுக்கு நான் மறைவான மன்னாவைப் புசிக்கக்கொடுத்து, அவனுக்கு வெண்மையான குறிக்கல்லையும், அந்தக் கல்லின்மேல் எழுதப்பட்டதும் அதைப் பெறுகிறவனேயன்றி வேறொருவனும் அறியக்கூடாததுமாகிய புதிய நாமத்தையும் கொடுப்பேன் என்றெழுது.

நான்காவது சபை தியத்தீராவிற்கு கர்த்தர் சொல்கிறது என்னவென்றால் நம்முடைய கிரியைகளை சோதித்த தேவன் முன்பு செய்ததை காட்டிலும் அதிகமான கிரியைகளை அறிந்திருக்கிறேன் 

வெளி 2:19-23  

 உன் கிரியைகளையும், உன் அன்பையும், உன் ஊழியத்தையும், உன் விசுவாசத்தையும், உன் பொறுமையையும், நீ முன்பு செய்த கிரியைகளிலும் பின்புசெய்த கிரியைகள் அதிகமாயிருக்கிறதையும் அறிந்திருக்கிறேன் என்று கூறுகிறார்.

ஆகிலும், உன்பேரில் எனக்குக் குறை உண்டு; என்னவெனில், தன்னைத் தீர்க்கதரிசியென்று சொல்லுகிற யேசபேல் என்னும் ஸ்திரீயானவள் என்னுடைய ஊழியக்காரர் வேசித்தனம்பண்ணவும் விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிக்கவும் அவர்களுக்குப் போதித்து, அவர்களை வஞ்சிக்கும்படி நீ அவளுக்கு இடங்கொடுக்கிறாய்.

அவள் மனந்திரும்பும்படியாய் அவளுக்குத் தவணைகொடுத்தேன்; தன் வேசிமார்க்கத்தை விட்டு மனந்திரும்ப அவளுக்கு விருப்பமில்லை.

 இதோ, நான் அவளைக் கட்டில்கிடையாக்கி, அவளுடனே விபசாரஞ்செய்தவர்கள் தங்களுடைய கிரியைகளைவிட்டு மனந்திரும்பாவிட்டால் அவர்களையும் மிகுந்த உபத்திரவத்திலே தள்ளி,

அவளுடைய பிள்ளைகளையும் கொல்லவே கொல்லுவேன்; அப்பொழுது நானே உள்ளிந்திரியங்களையும் இருதயங்களையும் ஆராய்கிறவரென்று எல்லாச் சபைகளும் அறிந்துகொள்ளும்; அன்றியும் உங்களில் ஒவ்வொருவனுக்கும் உங்கள் கிரியைகளின்படியே பலனளிப்பேன்.

தன்னைத்தான் உயர்த்துகிற வாழ்க்கை நம்முடைய ஆவிக்குரிய அனுபவத்தில் தன்னைத்தான் மெச்சிக்கொள்ளுகிற ஒரு மேன்மையான எண்ணம் எதோ தேவன் நமக்கு சில கிருபைகள் தந்தாலும் மற்றும் நாம் ஜெபிக்கிற ஜெபத்தை தேவன் கேட்டு அதற்க்கு ஆசீர்வாதமான பதில் கிடைத்தால்,  மேலும் சில காரியங்கள் தேவன் நமக்கு வெளிப்படுத்தினால்,  நமக்குள் உடனே பிசாசானவன் நுழைந்து பெருமையை கொண்டு போடுவான். அதனால் நமக்குள் பெருமை வராதபடி நம்மை பாதுகாக்கவேண்டும் பெருமை வந்தாலோ வேசியின் கிரியை நமக்குள் இருக்கிறது என்று நாம் நினைத்து கொள்ள வேண்டும்.   எப்படியென்னால் ஆகாப் மனைவியாகிய யேசபேல் நாபோத்தை கொலை செய்வதற்கு காரணமாயிருந்தாள் அவளுடைய அலங்காரம் என்னவெனில் யேசபேல் தன் கண்களுக்கு மையிட்டு தன் தலையை சிங்காரித்துக்கொண்டு தேவனுக்கு விரோதமாக அவருடைய திராட்சை தோட்டம் கீரை தோட்டம் ஆக்கும்படியாக செயல்படுகிறதை நாம் வாசிக்கமுடிகிறது.     இதனை நாம் தியனிக்கும்போது இந்நாட்களில் அநேக தேவனுடைய பிள்ளைகள் தங்களை அலங்கரித்து கொள்ளுகிறார்கள். அவ்விதமான அலங்கரிப்பை தேவன் விரும்புவதில்லை.    அவ்விதம் அலங்கரிக்கிறவர்கள் பாதாளத்தின் வாசல்களை அவர்கள் மேற்கொள்ளவில்லை என்பது தெரிகிறது.   அதனால் தேவ வசனம் சொல்கிறது 

மத்தேயு 5: 3

 ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது.

               கர்த்தராகிய கிறிஸ்துவின் உபதேசத்தின் முதலாம் உபதேசம் மலையின்மேல்.   அதனால் தேவன் யேசபேலின் கிரியையை அழிக்கும் படியாக யெகூவை வைத்து தேவன் யேசபேலை அழிக்கிறார்

II இராஜாக்கள் 9: 33-37

அப்பொழுது அவன்: அவளைக் கீழே தள்ளுங்கள் என்றான்; அப்படியே அவளைக் கீழே தள்ளினதினால், அவளுடைய இரத்தம் சுவரிலும் குதிரைகளிலும் தெறித்தது; அவன் அவளை மிதித்துக்கொண்டு,

 உள்ளேபோய், புசித்துக் குடித்தபின்பு: நீங்கள் போய் சபிக்கப்பட்ட அந்த ஸ்திரீயைப் பார்த்து, அவளை அடக்கம்பண்ணுங்கள்; அவள் ஒரு ராஜகுமாரத்தி என்றான்.

 அவர்கள் அவளை அடக்கம்பண்ணப் போகிறபோது, அவளுடைய தலையோட்டையும் கால்களையும் உள்ளங்கைகளையுமே அல்லாமல் வேறொன்றையும் காணவில்லை.

ஆகையால் அவர்கள் திரும்பவந்து அவனுக்கு அறிவித்தார்கள்; அப்பொழுது அவன்: இது கர்த்தர் திஸ்பியனாகிய எலியா என்னும் தம்முடைய ஊழியக்காரனைக்கொண்டு சொன்ன வார்த்தை; யெஸ்ரயேலின் நிலத்திலே நாய்கள் யேசபேலின் மாம்சத்தைத் தின்னும் என்றும்,

இன்னது யேசபேலென்று சொல்லக் கூடாதபடிக்கு, யேசபேலின் பிரேதம் யெஸ்ரயேலின் நிலத்திலே வயல்வெளியின்மேல் போடும் எருவைப்போல் ஆகும் என்றும் சொன்னாரே என்றான்.

பிரியமானவர்களே யேசபேலின் கிரியைகளை நாம் விட்டு, மனம்திரும்பும்படியாக தேவன் நம்மிடத்தில் சொல்கிறார். அவ்விதம் மனம்திரும்புவோமானால் , மேலும் தேவன் தந்த கிருபையாகிய ஆசீர்வாதத்தை நான் வருமளவும் பற்றிக்கொண்டிருங்கள் என்று சொல்கிறார். அவ்விதம் நாம் உண்மையாக நடந்தால் 

வெளி: 2: 28

விடிவெள்ளி நட்சத்திரத்தையும் அவனுக்குக் கொடுப்பேன்.

மேற்க்கூறிய பிரகாரம் நடந்தால் தேவன் நம்மை ஆசீர்வதிப்பார். ஐந்தாவது சபை சர்தை. இந்த சபையை குறித்து தேவன் சொல்கிறது என்னவெனில்; நம்முடைய உள்ளான சகல கிரியைகளையும் பரிசோதித்த தேவன் 

வெளி 3:2,3

நீ விழித்துக்கொண்டு, சாகிறதற்கேதுவாயிருக்கிறவைகளை ஸ்திரப்படுத்து; உன் கிரியைகள் தேவனுக்குமுன் நிறைவுள்ளவைகளாக நான் காணவில்லை.

ஆகையால் நீ கேட்டுப் பெற்றுக்கொண்ட வகையை நினைவுகூர்ந்து, அதைக் கைக்கொண்டு மனந்திரும்பு. 

நீ விழித்திராவிட்டால்,  திருடனைப்போல் உன்மேல் வருவேன்; நான் உன்மேல் வரும்வேளையை அறியாதிருப்பாய்.

            கர்த்தர் சொல்கிறது என்னவென்றால் மேற்கூறிய அனைத்து வார்த்தைகளை கேட்ட நாம் அந்த வார்த்தைகளை நினைவு கூர்ந்து நடந்து கொள்ளும்படியாகவும், அதனை கைக்கொண்டு மனம்திரும்பி நம்மை சீர்திருத்தி கொள்ளவேண்டும். அவ்விதம் நம் ஆத்துமா ஜீவனோடு விழித்திராவிட்டால் திருடனை போல் உன்மேல் வருவேன் என்று கர்த்தர் சொல்கிறார் நான் உன்மேல் வரும் வேளையை அறியாதிருப்பாய். ஆதலால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம் உள்ளத்தில் வருகிற நேரத்தை நாம் அறியாததினால் நம்முடைய வஸ்திரம் எப்போதும் பரிசுத்தமாக இருக்க வேண்டும். அது எப்படியெனில் தேவனுடைய கட்டளை கற்பனை , நியாயப்பிரமாணம் சரியாக காத்துக் கொள்ளவேண்டும். அவற்றை குறித்து

வெளி 3:4,5 

ஆனாலும் தங்கள் வஸ்திரங்களை அசுசிப்படுத்தாத சிலபேர் சர்தையிலும் உனக்குண்டு; அவர்கள் பாத்திரவான்களானபடியால் வெண்வஸ்திரந்தரித்து என்னோடேகூட நடப்பார்கள்.

 ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு வெண்வஸ்திரம் தரிப்பிக்கப்படும்; ஜீவபுஸ்தகத்திலிருந்து அவனுடைய நாமத்தை நான் கிறுக்கிப்போடாமல், என் பிதா முன்பாகவும் அவருடைய தூதர் முன்பாகவும் அவன் நாமத்தை அறிக்கையிடுவேன்.

பிரியமானவர்களே, இதிலிருந்து நாம் தெரிந்துக்கொள்ளவேண்டியது, நாம் தேவனுக்கு கீழ்ப்படியாமல் இருந்தால் நம்முடைய வஸ்திரம் (இரட்சிப்பு) அழுக்காகும் இரட்சிப்பு இல்லாமல் போகும். எப்படியெனில் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஜீவ புஸ்தகத்திலிருந்து நம் பெயர் கிறுக்கி போடுகிறார் என்பதும் நம் நாமம் பிதா முன்பாக .அறிக்கைபண்ணுவதில்லை என்பது தெரியவருகிறது. இதுவரை நாம் பார்த்த ஐந்து சபைகளில் தேவன் நம்முடைய ஆத்மாவின் பலனை காட்டுகிறார். இதில் நாம் ஒன்றும் குறைவில்லாமல் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதை நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கூறுகிறதைப் பார்க்கிறோம். ஆதலால் நாம் யாவரும் மேற்கூறிய ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்ள ஒப்புக்கொடுப்போம்.   

யாவரும் ஜெபிப்போம்.     கர்த்தர் ஆசிர்வதிப்பார்.      

 -தொடர்ச்சி நாளை.