தேவனுக்கே மகிமையுண்டாவதாக

நீதிமொழிகள் 9: 1

ஞானம் தன் வீட்டைக் கட்டி, தன் ஏழு தூண்களையும் சித்திரந்தீர்த்து,

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.     அல்லேலுயா.

நம்முடைய குறைகளை கண்டுபிடித்து தேவ சமூகத்தில் சமர்ப்பித்தல்

II பகுதி

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே , கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் நாம் மணவாட்டி சபையாகிய ஆத்துமாவின் பலன்களாகிய ஐந்து ஆசீர்வாதங்களை குறித்து நாம் தியானித்தோம். ஆனால் ஏழு குத்து விளக்குகளாகிய ஏழு சபையை குறித்து நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சொல்கிறார். அடுத்ததாக ஆறாம் சபை பிலதெல்பியா. இந்த சபையை குறித்து தேவன் சொல்கிறார்.

வெளி 3: 8-12

உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்; உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும், நீ என் நாமத்தை மறுதலியாமல், என் வசனத்தைக் கைக்கொண்டபடியினாலே, இதோ, திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன், அதை ஒருவனும் பூட்டமாட்டான்.

இதோ, யூதரல்லாதிருந்தும் தங்களை யூதரென்று பொய் சொல்லுகிறவர்களாகிய சாத்தானுடைய கூட்டத்தாரில் சிலரை உனக்குக் கொடுப்பேன்; இதோ, அவர்கள் உன் பாதங்களுக்கு முன்பாக வந்து பணிந்து, நான் உன்மேல் அன்பாயிருக்கிறதை அறிந்துகொள்ளும்படி செய்வேன்.

என் பொறுமையைக்குறித்துச் சொல்லிய வசனத்தை நீ காத்துக்கொண்டபடியினால், பூமியில் குடியிருக்கிறவர்களைச் சோதிக்கும்படியாகப் பூச்சக்கரத்தின்மேலெங்கும் வரப்போகிற சோதனைக்காலத்திற்குத் தப்பும்படி நானும் உன்னைக் காப்பேன்.

இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; ஒருவனும் உன் கிரீடத்தை எடுத்துக்கொள்ளாதபடிக்கு உனக்குள்ளதைப் பற்றிக்கொண்டிரு.

  ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனை என் தேவனுடைய ஆலயத்திலே தூணாக்குவேன், அதினின்று அவன் ஒருக்காலும் நீங்குவதில்லை; என் தேவனுடைய நாமத்தையும் என் தேவனால் பரலோகத்திலிருந்திறங்கிவருகிற புதிய எருசலேமாகிய என் தேவனுடைய நகரத்தின் நாமத்தையும், என் புதிய நாமத்தையும் அவன்மேல் எழுதுவேன்.

மேற்கூறிய வசனங்களை தியானிக்கும்போது நம்முடைய கிரியைகளை எல்லாம் கவனித்த கிறிஸ்து சொல்கிறார்,  உன் கிரியைகளை அறிந்த்திருக்கிறேன் , நமக்கு தேவன் கிறிஸ்துவினால் கொஞ்சம் பெலன் தந்துவிட்டால், நிச்சயமாகவே நம் ஆத்துமா சந்தோஷப்படும். அப்படி நம் ஆத்துமா சந்தோஷமும் சமாதானமும் அடையும்.   அப்படியானால், நாம் தேவனுடைய வசனத்தை கைக்கொள்ளுவோம்.  அப்படியானால் இதோ திறந்த வாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன் அதை ஒருவனாலும் பூட்டமுடியாது என்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சொல்கிறதை பார்க்கிறோம்.  

இவை என்னவெனில் நமக்கு இருக்கிற விசுவாச பெலத்தால் நாம் வசனம் ஏற்றுக்கொண்டால், நாம் ஜெபிக்கிற ஜெபம் கேட்கப்படுகிறது. இதற்க்கு கரணம் என்னவெனில் திறந்தவாசல் என்பது, நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, வசனமாகிய கிறிஸ்து நமக்காக வேண்டுதல் செய்கிறார்.  அதனை யாரும் எதுவும் செய்யமுடியாது என்பதை கர்த்தர்  சொல்கிறார்.

அதைப்பற்றி நியாயாதிபதி 6:14 

அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கிப்பார்த்து: உனக்கு இருக்கிற இந்தப் பலத்தோடே போ; நீ இஸ்ரவேலை மீதியானியரின் கைக்கு நீங்கலாக்கி ரட்சிப்பாய்; உன்னை அனுப்புகிறவர் நான் அல்லவா என்றார்.

கர்த்தர் இஸ்ரவேலரை மீதியானியரின் கைக்கு தப்புவிப்பதற்க்காக கிதியோனை எழுப்புகிறார். அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கி உனக்கு இருக்கிற பலத்தோடேயே போ; நீ இஸ்ரவேலை மீதியானியரின் கைக்கு நீங்கலாக்கி ரட்சிப்பாய்; உன்னை அனுப்புகிறவர் நான் அல்லவா என்றார். அதற்க்கு கிதியோன் என் தகப்பன் குடும்பத்தில் நான் எல்லாரிலும் சிறியவன் என்று சொல்ல 

நியாயாதிபதி 6:16 

அதற்குக் கர்த்தர்: நான் உன்னோடேகூட இருப்பேன்; ஒரே மனுஷனை முறிய அடிப்பதுபோல நீ மீதியானியரை முறிய அடிப்பாய் என்றார்.

இவ்விதமாக கிதியோன் கர்த்தர் கொடுத்திருந்த சிறிய பலத்தோடயே போனான், கர்த்தர் அவனோடு கூட இருந்தார். இவ்விதமாக தேவன் நமக்கு தருகிற விசுவாசத்தை உறுதிப்படுத்த வேண்டும். அவ்விதம் உறுதிப்படுத்திக்கொண்டால் இவ்விதம் விசுவாசம் நம் உள்ளில் வளர்ந்து உறுதிப்படும்போது அவற்றில் கிறிஸ்துவின் கிரியை வெளிப்படுகிறது. மேற்கூறிய வசனங்கள் நம் ஆத்துமாவில்  

வெளிப்படுகிறது அவர்களை குறித்து கிறிஸ்து சொல்கிறார் இதோ சீக்கிரமாய் வருகிறேன்; ஒருவனும் உன் கீரீடத்தை எடுத்துக்கொள்ளாதபடி உனக்குள்ளதை பற்றிக் கொள் என்று கர்த்தர் சொல்கிறார்.

அடுத்தபடியாக கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சொல்கிறது என்னவெனில் ஏழாம் சபை லவோதிக்கேயா , இதனை பரிசோதித்த தேவன் வெளி:3:15,16, நம்முடைய ஆத்மாவில் வளர்ச்சியில்லாததை கண்டு , குளிருமில்லை அனலுமில்லை , ஆதலால் என் வாயினின்று வாந்திபண்ணிபோடுவேன். ஏனென்றால் நம் கர்த்தராகிய இயேசுவை ஏற்றுக்கொண்டதிலிருந்து எந்த மாற்றமும் காணப்படாதவர்கள் குறித்து கர்த்தர் சொல்கிறார், நம்முடைய வாழ்க்கையில் ஆத்மாவுக்குள் ஒரு இளைப்பாறுதல் இல்லாமலிருக்கும். அவ்விதம் வளர்ச்சியில்லாமல் இருக்கிறவர்களை வாயினின்று வாந்திபண்ணி போடுவேன் என்று கர்த்தர் சொல்கிறார் என்னத்தினாலெனில் தாங்கள் வளரவில்லை என்பது அவர்களுக்கு தெரியாமல் இருக்கும். ஆனால் அவர்கள் ஏதோ தன்னை குறித்து தான் சரியாத்தான் இருக்கிறேன் என்று நினைப்பார்கள் , அவர்களை குறித்து தேவன் சொல்கிறார் 

வெளி 3:17-19 

நீ நிர்ப்பாக்கியமுள்ளவனும், பரிதபிக்கப்படத்தக்கவனும், தரித்திரனும், குருடனும், நிர்வாணியுமாயிருக்கிறதை அறியாமல், நான் ஐசுவரியவானென்றும், திரவியசம்பன்னனென்றும், எனக்கு ஒரு குறைவுமில்லையென்றும் சொல்லுகிறபடியால்;

நான்: நீ ஐசுவரியவானாகும்படிக்கு நெருப்பிலே புடமிடப்பட்ட பொன்னையும், உன் நிர்வாணமாகிய அவலட்சணம் தோன்றாதபடிக்கு நீ உடுத்திக்கொள்வதற்கு வெண்வஸ்திரங்களையும் என்னிடத்திலே வாங்கிக்கொள்ளவும், நீ பார்வையடையும்படிக்கு உன் கண்களுக்குக் கலிக்கம்போடவும் வேண்டுமென்று உனக்கு ஆலோசனை சொல்லுகிறேன்.

நான் நேசிக்கிறவர்களெவர்களோ அவர்களைக் கடிந்துகொண்டு சிட்சிக்கிறேன்; ஆகையால் நீ ஜாக்கிரதையாயிருந்து, மனந்திரும்பு.

ஆனால் இப்படிப்பட்டவர்களிடம் ஜாக்கிரதையாயிருந்து மனந்திரும்பு என்று சொல்கிறார். ஆதலால் அன்பானவர்களே நாம் யாவரும் ஏழு வித ஆசீர்வாதங்கள் பெற்று நாம் யாவரும் வளரும்படியாக ஒப்புக்கொடுப்போம்.

யாவரும் ஜெபிப்போம்.     கர்த்தர் ஆசிர்வதிப்பார்.      

 -தொடர்ச்சி நாளை.