Nov 06, 2020

தேவனுக்கே மகிமையுண்டாவதாக

நீதிமொழிகள் 9: 2

தன் கொழுத்த ஜந்துக்களை அடித்து, திராட்சரசத்தை வார்த்துவைத்து, தன் போஜனபந்தியை ஆயத்தப்படுத்தி,

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.     அல்லேலுயா.

பூரண ஆத்மாவின் பலன்களை பெற்றுகொள்ளுதல்

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே , கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் நம்மை தேவன் அழைத்து எடுத்து அவருடைய வேலைக்காக பிரித்து தேவ ஆவியினால் நிரப்பிக்கொண்டிருக்கும்போது நாம் நம்முடைய ஆத்துமாவுக்கு விரோதமான உலக , மாமிச இச்சைகளில் விழும்போது , நாம் தேவனிடத்தில் எடுத்த தீர்மானம் விடுகிறோம்.  அப்போது பல தடவை தேவன் நம்மை எச்சரித்தும் நாம் , நம்முடைய மனம்போன போக்கில் மாம்சமும் , மனதும் விரும்புகிறபடி செய்வதினால் நாம் பெற்றுக்கொண்ட ஆத்மாவின் பலனை இழந்து விடுகிறோம். அதனை முழுமையும் பெற்றுக்கொள்ளும்படியாக கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சொல்கிறார் 

வெளி 2:25  

 உங்களுக்குள்ளதை நான் வருமளவும் பற்றிக்கொண்டிருங்கள். மேலும் இயேசு கிறிஸ்து சொல்கிறார் நீ எங்கே விழுந்தாய் என்று சிந்தித்து மனந்திரும்பு என்று சொல்கிறதையும், கடிந்துகொண்டு சிட்சித்து பேசுகிறதயும் பார்க்கமுடிகிறது.

வெளி 3:19   

நான் நேசிக்கிறவர்களெவர்களோ அவர்களைக் கடிந்துகொண்டு சிட்சிக்கிறேன்; ஆகையால் நீ ஜாக்கிரதையாயிருந்து, மனந்திரும்பு,  என்று கர்த்தர் சொல்கிறார்

ஆதலால் நாம் ஒவ்வொரு நாளிலும் தேவனுடைய சத்தம் கேட்டு அவருடைய சித்தத்துக்கு ஒப்புக்கொடுத்து தாழ்மையாக நடப்போமானால் தேவனிடத்திலிருந்து பெற்றுக்கொண்ட ஆசீர்வாதம் இழந்து போகாமல் காத்துக்கொள்ளமுடியும். 

1 பேதுரு 1:4,5 

அவர், இயேசுகிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்ததினாலே, அழியாததும் மாசற்றதும் வாடாததுமாகிய சுதந்தரத்திற்கேதுவாக, ஜீவனுள்ள நம்பிக்கை உண்டாகும்படி, தமது மிகுந்த இரக்கத்தின்படியே நம்மை மறுபடியும் ஜெநிப்பித்தார்.

கடைசிக்காலத்திலே வெளிப்பட ஆயத்தமாக்கப்பட்டிருக்கிற இரட்சிப்புக்கு ஏதுவாக விசுவாசத்தைக் கொண்டு தேவனுடைய பலத்தினாலே காக்கப்பட்டிருக்கிற உங்களுக்கு அந்தச் சுதந்தரம் பரலோகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.

1பேதுரு1:13-16 

ஆகையால், நீங்கள் உங்கள் மனதின் அரையைக் கட்டிக்கொண்டு, தெளிந்தபுத்தியுள்ளவர்களாயிருந்து, இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்கு அளிக்கப்படுங் கிருபையின்மேல் பூரண நம்பிக்கையுள்ளவர்களாயிருங்கள்.

நீங்கள் முன்னே உங்கள் அறியாமையினாலே கொண்டிருந்த இச்சைகளின்படி இனி நடவாமல், கீழ்ப்படிகிற பிள்ளைகளாயிருந்து,

உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறதுபோல, நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள்.

நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள் என்று எழுதியிருக்கிறதே.

 இவ்விதம் மேற்கூறிய தேவனுடைய வார்த்தை பிரகாரம் நாம் நடந்தால் தேவக் கட்டளையை நிறைவேற்றுகிறோம். அவ்விதம் நாம் பூர்ணமாக நிறைவடையும்போது நம் ஆவி ஆத்தும சரீரம் பரிசுத்தமாக்கப்படுகிறது. அதற்காக திருஷ்டாந்தப்படுத்தியதுதான் யூதக் கோத்திரத்தில் பெசலெயேலை பெயர்ச்சொல்லி அழைத்து தேவ ஆவியினால் நிரப்பி தாண் கோத்திரத்தானை அவனுக்கு துணையாக கூட்டிவிடுகிறார். தாண் கோத்திரத்தினைக்கூட்டி விடுகிற காரணம் என்னவெனில் ஆத்மீக வாழ்க்கையில் வீழ்ச்சி எப்படி நமக்கு வருகிறது என்பதை காட்டும்படியாகவே திருஷ்டாந்தப்படுத்துகிறார். தாண் கோத்திரத்தை பற்றி சில நாட்களுக்கு முன்புதான் தியானித்தோம.

அன்பானவர்களே நீங்கள் அடிக்கடி முந்தின பகுதியையும் வாசித்து நினைவுக்குள் கொண்டு வாருங்கள். அப்பொழுது நம்மை சீர்படுத்திக்கொண்டு நாம் விழாதபடி நம்முடைய ஆத்ம பலனை பூர்ணமாக பெற்றுக் கொண்டு நாம் பரிசுத்தமாக வாழ முடியும். இதற்காகவே தான் தேவன் பெசாலெயேலை ஆசரிப்பு கூடார விசித்திர வேலை செய்யும்படியாக அழைத்து எடுக்கிறார். மேலும் ஆசரிப்பு கூடாரத்தின் உள்ளால் உள்ள வேலைகளையும் அவர் சரிவர செய்ய கட்டளையிட்டு நமக்கு திருஷ்டாந்தப்படுத்துவது என்னவெனில் நம்முடைய உள்ளான மனிதன் எப்படி பரிசுத்தமாக காக்கப்பட வேண்டும் என்பதை காட்டும் படியாக தேவன் கட்டளையிடுகிறார். 

யாத்திராகமம்31:7-11 

ஆசரிப்புக் கூடாரத்தையும் சாட்சிப்பெட்டியையும் அதின்மேலுள்ள கிருபாசனத்தையும், கூடாரத்திலுள்ள சகல பணிமுட்டுகளையும்,

மேஜையையும் அதின் பணிமுட்டுகளையும், சுத்தமான குத்துவிளக்கையும் அதின் சகல கருவிகளையும், தூபபீடத்தையும்,

தகனபலிபீடத்தையும் அதின் சகல பணிமுட்டுகளையும், தொட்டியையும் அதின் பாதத்தையும்,

ஆராதனை வஸ்திரங்களையும், ஆசாரிய ஊழியம் செய்வதற்கான ஆசாரியனாகிய ஆரோனின் பரிசுத்த வஸ்திரங்களையும், அவன் குமாரரின் வஸ்திரங்களையும்,

அபிஷேக தைலத்தையும், பரிசுத்த ஸ்தலத்துக்குச் சுகந்தவர்க்கங்களாகிய தூபவர்க்கத்தையும், நான் உனக்குக் கட்டளையிட்டபடியே, அவர்கள் செய்யவேண்டும் என்றார்.

             இவை உள்ளான மனுஷன் சரீரம் எவ்விதம் பரிசுத்தம் ஆக வேண்டும் என்பதை தேவன் திருஷ்டாந்தப்படுத்துகிறார். நம்முடைய உள்ளான மனுஷன் பரிசுத்தப்படுகிறதை நம்முடைய தேவன் கவனித்து

வெளி3:20,21

இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்.

நான் ஜெயங்கொண்டு என் பிதாவினுடைய சிங்காசனத்திலே அவரோடேகூட உட்கார்ந்ததுபோல, ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடேகூட உட்காரும்படிக்கு அருள்செய்வேன் என்று சொல்கிறார். 

பிரியமானவர்களே நாம் கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து நடந்து பரிசுத்தப்பட்டால் மாத்திரமே நமக்குள் பிரவேசித்து நம்மோடு போஜனம் பண்ணுவார். நாமும் அவரோடு போஜனம் பண்ணுவோம். அவர் ஜெயித்தது போல நாமும் உலகம் மாமிசம் பிசாசு இவைகளை ஜெயித்தால் மட்டுமே , கிறிஸ்து பிதாவின் வலது பாரிசத்தில் உட்க்கார்ந்தது போல நம்மையும் அவரோடு உட்க்காரும்படி அருள்செய்வார்.

  பிரியமானவர்களே இவ்விதமாக ஏழு குத்துவிளக்காகிய ஏழு சபைகளும் தேவனுடைய ஆத்ம பலனாகிய பரலோக ஈவை பெற்று அணையாதபடி பிரகாசித்தால் மாத்திரமே பரலோக ராஜ்யம் நம் உள்ளத்தில் திறக்கப்படுகிறது. அதைத்தான்

வெளி 4:1- 5

இவைகளுக்குப்பின்பு, இதோ, பரலோகத்தில் திறக்கப்பட்டிருந்த ஒரு வாசலைக் கண்டேன். முன்னே எக்காளசத்தம்போல என்னுடனே பேச நான் கேட்டிருந்த சத்தமானது: இங்கே ஏறிவா, இவைகளுக்குப்பின்பு சம்பவிக்கவேண்டியவைகளை உனக்குக் காண்பிப்பேன் என்று விளம்பினது.

உடனே ஆவிக்குள்ளானேன்; அப்பொழுது, இதோ, வானத்தில் ஒரு சிங்காசனம் வைக்கப்பட்டிருந்தது, அந்தச் சிங்காசனத்தின்மேல் ஒருவர் வீற்றிருந்தார்.

வீற்றிருந்தவர், பார்வைக்கு வச்சிரக்கல்லுக்கும் பதுமராகத்துக்கும் ஒப்பாயிருந்தார்; அந்தச் சிங்காசனத்தைச்சுற்றி ஒரு வானவில்லிருந்தது; அது பார்வைக்கு மரகதம்போல தோன்றிற்று.

அந்தச் சிங்காசனத்தைச் சூழ இருபத்துநான்கு சிங்காசனங்களிருந்தன; இருபத்துநான்கு மூப்பர்கள் வெண்வஸ்திரந்தரித்து, தங்கள் சிரசுகளில் பொன்முடி சூடி, அந்தச் சிங்காசனங்களின்மேல் உட்கார்ந்திருக்கக்கண்டேன்.

அந்தச் சிங்காசனத்திலிருந்து மின்னல்களும் இடிமுழக்கங்களும் சத்தங்களும் புறப்பட்டன; தேவனுடைய ஏழு ஆவிகளாகிய ஏழு அக்கினி தீபங்கள் சிங்காசனத்திற்கு முன்பாக எரிந்துகொண்டிருந்தன.

இவ்விதமாக நம் உள்ளம் ஆத்மாவின் அத்தனை பலனை பெற்று , நாம் பரிசுத்தப்படுவோம். அப்போது நாம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்குள் பிரவேசித்து நம்மோடு போஜனம் பண்ணி நாமும் அவரோடு போஜனம் பண்ணி. தேவனுடைய சித்தம் நிறைவேற்றி நாம் அவரோடு மகிழ்ந்திருந்து சந்தோஷமாக ஜீவிக்க முடியும். அதைத்தான்

யாத்திராகமம் 31: 16

ஆகையால், இஸ்ரவேல் புத்திரர் தங்கள் தலைமுறைதோறும் ஓய்வுநாளை நித்திய உடன்படிக்கையாக ஆசரிக்கும்படி, அதைக் கைக்கொள்ளக்கடவர்கள். 

ஆகையால் பிரியமானவர்களே இந்தவிதமான ஆசீர்வாதங்களோடு நாம் வாழ வேண்டும் என்ற எண்ணத்தோடு நம் தேவனாகிய கர்த்தர் நமக்கு திருஷ்டாந்ததுக்காகவே மோசேயிடம் இஸ்ரவேல் புத்திரருக்கு இக்கட்டளை கொடுக்கிறார். இது நித்திய கட்டளையாக கொடுக்கிறார். மேலும் போஜனம் என்ன என்பதை அடுத்த நாளில் தியானிப்போம்.  இதனை வாசிக்கிற அன்பானவர்களே நாம் யாவரும் பூரண ஆத்மாவின் பலன்களை பெற்று கொண்டு தேவனுடைய கிருபையின் மேல் பூரண நம்பிக்கையுள்ளவர்களாகும்படிக்கு           யாவரும் ஒப்புக்கொடுப்போம். ஜெபிப்போம்.     கர்த்தர் ஆசிர்வதிப்பார். கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசிர்வதிப்பார்.

 -தொடர்ச்சி நாளை.