கிறிஸ்துவின் போஜனம் - விளக்கங்கள்

Sis. பி. கிறிஸ்டோபர் வாசினி
Nov 07, 2020

தேவனுக்கே மகிமையுண்டாவதாக

ஓசியா 6: 11

யூதாவே, உனக்கு ஒரு அறுப்புக்காலம் நியமிக்கப்பட்டிருக்கிறது.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.     அல்லேலுயா.

கிறிஸ்துவின் போஜனம் - விளக்கங்கள்

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், நாம்  ஆத்துமாவின் பலனை பூரணமாக பெற்றுக்கொள்ள வேண்டுமென்றும், அவவிதம்ப் பெற்றுக்கொள்ளவேண்டுமானால் தேவ வசனப்பிரகாரம் நாம் நடக்கிறோமா என்று நம்மை நாமேச் சோதித்து, நம்முடைய குறைகளை கண்டறிந்து, நாம் மீண்டும் மனந்திரும்பி, நம்மை புதுப்பித்துக்கொண்டு, தேவ வசனம் கைக்கொள்வோமானால், கர்த்தர் நம்முடைய ஆத்துமாவின் பூரண பலன்களை நமக்கு தந்து, நம்மை ஆசீர்வதித்து, நமக்குள்ளாக அவர்  பிரவேசித்து, நம்மோடு அவர் போஜனம் பண்ணுவார். நாமும் அவரோடு போஜனம் பண்ணுவோம்.  அந்த போஜனம் என்ன என்று நாம் தியானிப்போமாகில்,

யோவான் 4:31 – 36

இப்படி நடக்கையில் சீஷர்கள் அவரை நோக்கி: ரபீ, போஜனம்பண்ணும் என்று வேண்டிக்கொண்டார்கள்.

அதற்கு அவர்: நான் புசிப்பதற்கு நீங்கள் அறியாத ஒரு போஜனம் எனக்கு உண்டு என்றார்.

அப்பொழுது சீஷர்கள் ஒருவரையொருவர் பார்த்து: யாராவது அவருக்குப் போஜனம் கொண்டுவந்திருப்பானோ என்றார்கள்.

இயேசு அவர்களை நோக்கி: நான் என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது.

அறுப்புக்காலம் வருகிறதற்கு இன்னும் நாலுமாதம் செல்லும் என்று நீங்கள் சொல்லுகிறதில்லையா? இதோ, வயல்நிலங்கள் இப்பொழுதே அறுப்புக்கு விளைந்திருக்கிறதென்று உங்கள் கண்களை ஏறெடுத்துப்பாருங்கள் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.

விதைக்கிறவனும் அறுக்கிறவனுமாகிய இருவரும் ஒருமித்துச் சந்தோஷப்படத்தக்கதாக, அறுக்கிறவன் கூலியை வாங்கி, நித்திய ஜீவனுக்காகப் பலனைச் சேர்த்துக்கொள்ளுகிறான்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் போஜனம் என்ன என்பது; மேற்க்கூறப்பட்ட வசனங்கள் தியானிக்கும் போது நமக்கு தெளிவாக தெரியவரும்.  அதனை குறித்து நாம் தியானிக்கும் போது கிறிஸ்து சொல்கிறார்; பிதாவின் சித்தம் செய்து அவருடைய கிரியை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது என்று சொல்கிறதை பார்க்கமுடிகிறது. அவருடைய கிரியை என்னவென்றால், நம்முடைய ஆத்துமாவில் முழுமையான பலனை அடைந்து அதனை அறுவடை செய்து தம்முடைய களத்தில் நாம் செய்த நீதியின் கிரியைகளை அவர் கண்டறிந்து, பதரை வேறுப்படுத்தி, பதரை மட்டும் அவியாத அக்கினியால் சுட்டெரிப்பார். பதர் என்பது அநீதியாகிய பாவ உலகம். 

அநீதியாகிய பாவ உலகம் நம் ஆத்துமாவில் இடம் பெறாதபடி  பாதுகாத்துக்கொண்டு தேவ வசனத்தின் கிரியைகளால் நாம் நிறைந்துக்கொண்டிருப்போமானால் நியாயத்தீர்ப்பின் அக்கினியிலிருந்து  தப்பித்துக்கொள்ள முடியும்.  அதனால் நாம் எப்பொழுதும் ஜாக்கிரதையாகயிருக்க வேண்டும்.  அப்படி நாம் இருப்போமானால் மட்டுமே கழிந்த நாளில் தியானித்தப் பிரகாரம் நம் உள்ளம் பரலோகராஜ்யமாக, கிறிஸ்து நம்  உள்ளத்தில் என்றென்றும் தங்கியிருக்கற பரிசுத்த ஆலயமாக விளங்கிக்கொண்டிருக்கும். அந்த ஆலயம் தான் நம்முடைய ஆத்துமாவில் தேவன் எழுப்புகிறார்.  அதனை குறித்து  தான் கழிந்த நாளில் வெளிப்படுத்துதல் விசேஷத்தில் நாம் வாசித்தோம். நாம் வாசித்தப்பகுதியில் பரலோக ராஜ்யத்தில் திறக்கப்பட்டிருந்த ஒரு வாசலைப் பார்க்கிறோம்.  அந்த வாசல் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து.   

மேலும் பத்மு தீவில் தேவன் யோவானுக்கு வெளிப்படுத்தின தரிசனத்தில் ஏழு வித ஆசீர்வாதங்களைப் பெற்றப்பிறகு சம்பவிக்கிறவைகளை காண்ப்பிக்கிறேன் என்று சத்தம் கேட்கிறதைப் பார்க்கிறோம்.   அப்போது  வானத்தில் சிங்காசனம் வைக்கப்பட்டிருந்தது.  அதில் ஒருவர் வீற்றிருக்கிறதும் அந்த சிங்காசனத்தை சுற்றிலும் ஒரு வானவில் இருக்கிறதும் அந்த வானவில் பார்வைக்கு மரகதம் போல் காணப்படுகிறது. 

இவ்விதம் தேவன் காண்பிக்கிற தரிசனம் ஆலயத்தின் மகிமையை குறித்து,  நம் ஆத்துமா இவ்வித மகிமையை அடைந்தால் மட்டுமே மணவாளனுடைய அனுபவத்தைக்காட்டுகிறது. இதைக்குறித்து  கர்த்தர் மோசேயிடம்; ஆசரிப்பு கூடாரம் செய்ய சொன்னது  இஸ்ரவேல் புத்திரருக்காக நமக்கு திருஷ்டாந்தப்படுத்தும்படியாக  நம்முடைய சரீரம் ஆலயமாக விளங்கும் என்பதை முன் குறித்த தேவன் அது எவ்வளவு மகிமையாக இருக்க வேண்டும் என்பதை விளக்கிக் காட்டுகிறார்.  அவற்றைக் குறித்து கர்த்தர் மோசேயிடம் சொல்கிறது என்னவென்றால், நீங்கள் என் ஓய்வு நாட்களை ஆசரிக்க வேண்டும். உங்களை பரிசுத்தப் படுத்துகிற கர்த்தர் என்பதை நீங்கள் அறியும்படிக்கு உங்கள் தலைமுறை தோறும் எனக்கும் உங்களுக்கும் அடையாளமாயிருக்கும் என்கிறார். 

மேலும் ஓய்வு நாட்களை பரிசுத்தமாய் ஆசரிக்க வேண்டும் என்றும்  அவ்விதம் ஆசரிக்காதவன்  கொலைச்செய்யபட கடவன் என்று கர்த்தர் சொல்கிறார். என்னவென்றால் நம்முடைய தேவனாகிய கர்த்தர் அவ்விதம் சொன்னதின் கருத்து ஆறு நாட்களும் தேவன் சிருஷ்டித்து ஆறாம் நாளில் மனுஷனை தேவசாயலாக சிருஷ்டித்து, ஏழாம் நாளில் ஓய்ந்திருந்து பரிசுத்தப்படுத்தினார்.  

மேலும் நாம் தியானிக்கும் போது தேவன் ஏழாம் நாளை ஆசீர்வதித்து பரிசுத்தமாக்கினார் என்று எழுதப்பட்டிருக்கிறது. என்னவென்றால் நாள் என்பது கர்த்தர். அதைத்தான் 

ஏசாயா 43:11-15

நான், நானே கர்த்தர், என்னையல்லாமல் ரட்சகர் இல்லை. 

நானே அறிவித்து, இரட்சித்து, விளங்கப்பண்ணினேன், உங்களில் இப்படிச் செய்யத்தக்க அந்நிய தேவன்இல்லை, நானே தேவன் என்பதற்கு நீங்கள் எனக்குச் சாட்சிகள் என்று கர்த்தர் சொல்லுகிறார். 

நாள் உண்டாகாததற்குமுன்னும் நானே இருக்கிறேன், என் கைக்குத் தப்புவிக்கத்தக்கவன் இல்லை, நான் செய்கிறதைத் தடுப்பவன் யார்? 

நான் உங்களுக்காக அரண்களெல்லாம் இடிந்துவிழவும், கல்தேயர் படவுகளிலிருந்து அலறவும் செய்யத்தக்கவர்களைப் பாபிலோனுக்கு அனுப்பினேனென்று, உங்கள் மீட்பரும் இஸ்ரவேலின் பரிசுத்தருமாகிய கர்த்தர் சொல்லுகிறார். 

நானே உங்கள் பரிசுத்தராகிய கர்த்தரும், இஸ்ரவேலின் சிருஷ்டிகரும், உங்கள் ராஜாவுமானவர்.

I பேதுரு 3: 15

கர்த்தராகிய தேவனை உங்கள் இருதயங்களில் பரிசுத்தம்பண்ணுங்கள்; உங்களிலிருக்கிற நம்பிக்கையைக்குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் உத்தரவுசொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள்.

மேற்க்கூறப்பட்ட தேவவசனம் நாம் தியானிக்கும் போது நம்முடைய இருதயங்களில் கர்த்தரை பரிசுத்தப்படுத்த வேண்டும் என்று கர்த்தர் சொல்கிறார். அதனால் எல்லா நாட்களும் கர்த்தர் என்பது தான் நமக்கு தேவன் சொல்லுகிறார். மேலும்  இதன் விளக்கத்தை நமக்கு திருஷ்டாந்தப்டுத்தவே கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, அநேக ஓய்வு நாட்களில் அற்புதங்களை செய்து காட்டுகிறதை பார்க்கிறோம்.

லூக்கா 6: 1 – 9

பஸ்கா பண்டிகையின் இரண்டாம் நாளைக்குப் பின்வந்த முதலாம் ஓய்வுநாளிலே, அவர் பயிர்வழியே நடந்துபோகையில், அவருடைய சீஷர்கள் கதிர்களைக் கொய்து, கைகளினால் நிமிட்டித் தின்றார்கள்.

பரிசேயரில் சிலர் அவர்களை நோக்கி: ஓய்வுநாளில் செய்யத்தகாததை நீங்கள் ஏன் செய்கிறீர்கள் என்று கேட்டார்கள்.

இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: தாவீதும் அவனோடிருந்தவர்களும் பசியாயிருந்தபோது செய்ததை நீங்கள் வாசிக்கவில்லையா? அவன் தேவனுடைய வீட்டில் பிரவேசித்து, ஆசாரியர்மாத்திரமே தவிர வேறொருவரும் புசிக்கத்தகாத தேவசமுகத்து அப்பங்களைக்கேட்டு வாங்கி,

தான் புசித்ததுமன்றி, தன்னுடனேகூட இருந்தவர்களுக்கும் கொடுத்தானே என்று சொன்னார்.

மேலும் மனுஷகுமாரன் ஓய்வுநாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறார் என்றார்.

வேறொரு ஓய்வுநாளிலே, அவர் ஜெபஆலயத்தில் பிரவேசித்து உபதேசித்தார். அங்கே சூம்பின வலதுகையையுடைய ஒரு மனுஷன் இருந்தான்.

அப்பொழுது வேதபாரகரும் பரிசேயரும் அவரிடத்தில் குற்றம் பிடிக்கும்படி, ஓய்வுநாளில் சொஸ்தமாக்குவாரோ என்று அவர்மேல் நோக்கமாயிருந்தார்கள்.

அவர்களுடைய சிந்தனைகளை அவர் அறிந்து, சூம்பின கையையுடைய மனுஷனை நோக்கி: நீ எழுந்து, நடுவே நில் என்றார். அவன் எழுந்து நின்றான்.

அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: நான் உங்களிடத்தில் ஒன்று கேட்கிறேன்; ஓய்வுநாட்களில் நன்மை செய்வதோ, தீமை செய்வதோ, ஜீவனைக் காப்பதோ, அழிப்பதோ, எது நியாயம் என்று கேட்டு,

மேலும் மேறக்கூறிய வசனங்களை நாம் தியானிக்கும் போது கர்த்தராகிய  கிறிஸ்து சொல்கிறார் மனுஷகுமாரன் ஓய்வுநாளுக்கும் ஆண்டவராயிருக்கிறார்.  இதிலிருந்து நாம் எல்லாரும் முக்கியமாக அறிந்துக்கொள்ளவேண்டுவது மனுஷகுமாரன் நம் உள்ளத்தில் வெளிப்படுகிறாரென்றால் எல்லா நாளும் பரிசுத்த நாள். அவ்விதம் கிறிஸ்து நமக்கு காட்டி தந்த மாதிரி நாம் ஒவ்வொருவரும் கைக்கொண்டு ஓய்வு நாள் என்று ஒரு நாளை மட்டும் பரிசுத்தம் என்று சொல்லாமல் எல்லா நாட்களும் பரிசுத்தமாக ஆசரிக்க வேண்டும். அதை குறித்து,

ஏசாயா 58: 13, 14

என் பரிசுத்த நாளாகிய ஓய்வுநாளிலே உனக்கு இஷ்டமானதைச் செய்யாதபடி, உன் காலை விலக்கி, உன் வழிகளின்படி நடவாமலும், உனக்கு இஷ்டமானதைச் செய்யாமலும், உன் சொந்தப்பேச்சைப் பேசாமலிருந்து, ஓய்வுநாளை மனமகிழ்ச்சியின் நாளென்றும், கர்த்தருடைய பரிசுத்த நாளை மகிமையுள்ள நாளென்றும் சொல்லி, அதை மகிமையாக எண்ணுவாயானால்,

அப்பொழுது கர்த்தரில் மனமகிழ்ச்சியாயிருப்பாய், பூமியின் உயர்ந்த இடங்களில் உன்னை ஏறியிருக்கும்டி பண்ணி, உன் தகப்பனாகிய யாக்கோபுடைய சுதந்தரத்தால் உன்னைப் போஷிப்பேன்; கர்த்தருடைய வாய் இதைச் சொல்லிற்று.

மேலும் மேறக்கூறிய தேவ வார்த்தைகள் பிரகாரம் யாவரும் ஒப்புக்கொடுப்போம். ஜெபிப்போம். கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசிர்வதிப்பார்.

 -தொடர்ச்சி நாளை.