Nov 08, 2020

தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 96: 9 

பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள்; பூலோகத்தாரே, நீங்கள் யாவரும் அவருக்கு முன்பாக நடுங்குங்கள்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.     அல்லேலுயா.

தினந்தோறும் பரிசுத்த ஆராதனை செய்ய வேண்டும்

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் போஜனம் என்ன என்பதையும் அவர் அதை எவ்விதத்தில் புசிக்கிறாரென்றும் சில காரியங்கள் குறித்து தியானித்தோம். அது நம்முடைய ஆத்துமாவின் அறுவடை. அந்த ஆத்துமா அறுவடையின் நாட்களில் கர்த்தர் தம்முடைய களத்தில் நம்மை நன்றாக விளக்கி நம்மை பரிசுத்தப்படுத்தி நம்மை தேவனுடைய ஆலயமாக்குகிறதையும்,  ஒருநாள் மட்டுமல்ல எல்லா நாட்களும் பரிசுத்தமாக ஆசரிக்க வேண்டும் என்றும் தியானித்தோம். மேலும் நாம் பரிசுத்தமாக ஆசரிக்க வேண்டுமானால் முந்தின நாட்களில் தியானித்ததான வார்த்தைகள் பிரகாரம் ஆத்துமாவில் நாம் ஏழுவித பலன்களைப் பெற்றுக்கொணடு, தேலவசனத்தின் நிறைவால் நம்முடைய கிறிஸ்து மகிமையடைந்து, மணவாளனாக  வெளிப்பட்டு, பின்பு நம்முடைய ஆத்துமாவின் நல்ல கனிகளாகிய, நற்கிரியைகளினால் பரிசுத்த ஆவியனாவராகிய மணவாட்டியானவர் மகிமையான சபையாக வெளிப்படுகிறார்.  நாம் நல்ல கனிகளாகிய நற்கிரியைகளை செய்யாவிட்டால் பரஸ்திரீயாகிய பாபிலோன் வேசியானவள் அவளுடைய துர்கிரியைகளினால் வஞ்சகமாக வெளிப்ட்டு, நம்மை மரண அறைகளுக்கு கொண்டு சென்று விடுவாள். அதனால் நாம் எப்போதும் ஜாக்கிரதையாக காணப்படவேணடும். ஆனால் நாம் எப்பொழுதும் தேவனுக்கு முன்பாக உத்தம இருதயத்தோடும் கபடற்ற உள்ளத்தோடும் காணப்படுவோமாகில் தேவன் நம்முடைய நற்கிரியைகளை காண்கிறார். அப்போது நம் உள்ளம் பரிசுத்தமாயிருக்கும்.  அப்போது நம்மளில் வெளிப்படுகிற பரிசுத்த ஆவியானவரை குறித்து -  

வெளி 21:1-3

பின்பு, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் கண்டேன்; முந்தின வானமும் முந்தின பூமியும் ஒழிந்துபோயின; சமுத்திரமும் இல்லாமற்போயிற்று.

யோவானாகிய நான், புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரத்தை தேவனிடத்தினின்று பரலோகத்தைவிட்டு இறங்கிவரக்கண்டேன்; அது தன் புருஷனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டியைப்போல ஆயத்தமாக்கப்பட்டிருந்தது.

மேலும், பரலோகத்திலிருந்து உண்டான ஒரு பெருஞ்சத்தத்தைக் கேட்டேன்; அது: இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்; அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார்.  

பின்னும் தேவன் மணவாட்டியின் மகிமையை குறித்து 

வெளி 21:9-11  

பின்பு, கடைசியான ஏழு வாதைகளால் நிறைந்த ஏழு கலசங்களையுடைய அந்த ஏழு தூதரில் ஒருவன் என்னிடத்தில் வந்து: நீ இங்கே வா, ஆட்டுக்குட்டியானவருடைய மனைவியாகிய மணவாட்டியை உனக்குக் காண்பிக்கிறேன் என்று சொல்லி,

பெரிதும் உயரமுமான ஒரு பர்வதத்தின்மேல் என்னை ஆவியில் கொண்டுபோய், தேவனுடைய மகிமையை அடைந்த எருசலேமாகிய பரிசுத்த நகரம் பரலோகத்தைவிட்டு தேவனிடத்திலிருந்து இறங்கிவருகிறதை எனக்குக் காண்பித்தான்.

அதின் பிரகாசம் மிகவும் விலையுயர்ந்த இரத்தினக்கல்லைப்போலவும், பளிங்கினொளியுள்ள வச்சிரக்கல்லைப்போலவும் இருந்தது.

மேற்க்கூறப்பட்ட தேவனுடய வசனம்  பரிசுத்த ஆவியானவர் நம்மளில் மகிமை அடைந்து நாம் பரிசுத்த ஆவியின்  நிறைவோடு தேவனுக்கு ஆராதனை செய்ய வேண்டும். இவ்வித ஆராதனையில் தேவன் பிரியமாயிருக்கிறார். அதற்க்காகவே  தேவன் நமக்கு திருஷ்டாந்தப்படுத்தும்படியாகவே கர்த்தர் மோசேயிடம் ஆசரிப்பு கூடாரமும், அதில் விசேஷித்த வேலைப்பாடுகளும், வாசனைதிரவியங்களும், மற்றும் பரிசுத்த வஸ்திரங்களும், மற்றும்  பல காரியங்கள்  தேவன் நமக்கு திருஷ்டாந்தப்படுத்தி பரிசுத்த ஆசரிப்பு செய்ய சொல்கிறதை பார்க்கிறோம்.  

அதைத்தான் கர்த்தர் 

யாத்  31: 17             

அது என்றைக்கும்  எனக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் அடையாளமாயிருக்கும்  மேலும் கர்த்தர் வானத்தையும் பூமியையும உண்டாக்கி ஏழாம் நாழிலே ஒய்ந்திருந்து பூரித்தார் என்று  எழுதப்பட்டிருக்கிறது.  பிரியமானவர்களே  வானத்தையும் பூமியையும் உண்டாக்கி ஏழாம் நாளிலே ஒய்ந்திருந்து பூரித்தார் என்பதை மணவாட்டி சபையோடு மணவாளன் மகிழ்கிறார் என்பதை திருஷ்டாந்தப்படுத்துகிறார்.

பிரியமானவர்களே ஆறு நாளைக்குள்ளே கர்த்தர் வானத்தையும் பூமியையும் உண்டாக்கி, என்று எழுதப்பட்டிருப்பது கர்த்தர் ஏதேன் தோட்டத்தில் ஆறு நாளைக்குள்ளே அனைத்தும் சிருஷ்டித்து, ஆறாம் நாளில்மனுஷனை தேவ சாயலாக சிருஷ்டித்து, ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தது. அந்த நாளை பரிசுத்தப்டுத்தினார். இதுதான் பழைய மனுஷனாகிய ஆதாம். அதைத்தான் பழைய வானமும் பழைய பூமியும் அதனை  பார்த்து மகிழ்ந்த தேவன் அவர்கள் பிசாசின் துர் உபதேசத்தினால் இச்சையுள்ளவர்களாகி மாம்ச கணகள் திறந்ததினால், அவர்கள் நிர்வாணிகளாகினார்கள். அதனால் அவர்கள் தோட்டததிலிருந்து துரத்தப்பட்டார்கள். சந்தோஷம் இல்லாமற் போகிறது. மீண்டும் தேவன் இழந்து போன சந்தோஷம் பெற்றுக்கொள்ளும்படியாகவே தன்னுடைய குமாரனை சிலுவையில் ஒப்புக்கொடுத்து, பின்பு பிதாவின் ஆவியினால் மரித்தோரிலிருந்தெழுப்பி, இழந்து போன தேவசாயலை நமக்கு தந்து,  நாம் தேவனுடைய வசனம் உட்க்கொண்டு நற்கிரியைகளை செய்வதினால் தேவனுடைய மகிமையை அடைந்த புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரம் பரலோகத்தை விட்டு இறங்கி வருகிறதை தேவன் பத்மு தீவில் வெளிபபடுத்துகிறார்.   இவ்விதமாக மணவாட்டி சபையோடு களிகூருகிறார். அதைத்தான் 

நீதிமொழிகள் 8:30-35

நான் அவர் அருகே செல்லப்பிள்ளையாயிருந்தேன்; நித்தம் அவருடைய மனமகிழ்ச்சியாயிருந்து, எப்பொழுதும் அவர் சமுகத்தில் களிகூர்ந்தேன்.

அவருடைய பூவுலகத்தில் சந்தோஷப்பட்டு, மனுமக்களுடனே மகிழ்ந்துகொண்டிருந்தேன்.

ஆதலால் பிள்ளைகளே, எனக்குச் செவிகொடுங்கள்; என் வழிகளைக் காத்து நடக்கிறவர்கள் பாக்கியவான்கள்.

நீங்கள் புத்தியைக் கேட்டு, ஞானமடையுங்கள்; அதை விட்டு விலகாதிருங்கள்.

என் வாசற்படியில் நித்தம் விழித்திருந்து, என் கதவு நிலையருகே காத்திருந்து, எனக்குச் செவிகொடுக்கிற மனுஷன் பாக்கியவான்.

என்னைக் கண்டடைகிறவன் ஜீவனைக் கண்டடைகிறான்; கர்த்தரிடத்தில் தயவையும் பெறுவான்.

இவ்விதமாக நாம் தேவ சத்தத்திற்கு கீழ்படிந்து, நடந்து, தேவனை மகிமைப்படுத்தினால் தேவன் நம்மளில் மகிழுகிறார். 

நீதி 23: 24

நீதிமானுடைய தகப்பன் மிகவும் களிகூருவான்; ஞானமுள்ள பிள்ளையைப் பெற்றவன் அவனால் மகிழுவான்.

இவ்விதமாக நாம் யாவரும் பரிசுத்தமாக வாழ்ந்து மணவாட்டியின் பாக்கியத்தைப்பெற்றுக்கொண்டு நம்முடைய தேவனை ஆராதிக்கும்படியாக  ஒப்புக்கொடுப்போம். 

ஜெபிப்போம். கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசிர்வதிப்பார்.

 -தொடர்ச்சி நாளை.