தேவனுக்கே மகிமையுண்டாவதாக

அப்போஸ்தலர்10: 44

இந்த வார்த்தைகளைப் பேதுரு பேசிக்கொண்டிருக்கையில் வசனத்தைக் கேட்டவர்கள் யாவர்மேலும் பரிசுத்தஆவியானவர் இறங்கினார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.     அல்லேலுயா.

ஆவிக்குரிய ஆராதனை நம் உள்ளத்தில் நடைப்பெற வேண்டும்

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், நம்முடையக்  கர்த்தராகிய இயேசு கிறிஸ்து  மோசே மூலம் தேவன் செய்த மரணத்துக்கேதுவான ஊழியத்தை சிலுவையின் கடைசி பரியந்தம் வெற்றிசிறந்தவராகி, மரணத்தையும்  பதாளத்தையும் ஜெயித்தவராக உயிர்த்தெழுந்தார். கிறிஸ்து எப்படி வெற்றிச்சிறக்கிறார் என்று பார்ப்போமானால்

1 கொரி 15 : 50-56 

சகோதரரே, நான் சொல்லுகிறதென்னவெனில், மாம்சமும் இரத்தமும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிக்கமாட்டாது. அழிவுள்ளது அழியாமையைச் சுதந்தரிப்பதுமில்லை. 

இதோ, ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன். நாமெல்லாரும் நித்தியரையடைவதில்லை. ஆகிலும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம். 

எக்காளம் தொனிக்கும், அப்பொழுது மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பார்கள். நாமும் மறுரூபமாக்கப்படுவோம். 

அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளவேண்டும். 

அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளும்போது, மரணம் ஜெயமாக விழுங்கப்பட்டது என்று எழுதியிருக்கிற வார்த்தை நிறைவேறும். 

மரணமே! உன் கூர் எங்கே? பாதாளமே! உன் ஜெயம் எங்கே? 

மரணத்தின் கூர் பாவம், பாவத்தின் பெலன்       நியாயப்பிரமாணம். 

மேற்க்கூறிய வசனங்களை நாம் தியானிக்கும் போது,  நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு, பின்பு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து, உயிர்த்தெழுந்தப்பின்பு சொன்னது என்னவென்றால்  தேவனுடைய ராஜ்யத்தை குறித்து அப்போஸ்தலரோடு பேசி அநேக திருஷ்டாங்களினால் தம்மை உயிரோடு இருக்கிறவராக காண்ப்பிக்கிறதை பார்க்கிறோம்.  பின்பு கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சொல்கிறார் யோவான் ஜலத்தினால் ஞானஸ்நானம் கொடுத்தான் சில நாட்களுக்குள்ளே பரிசுத்த ஆவியினாலே ஞானஸ்நானம் பெறுவீர்கள்.

பின்பு எருசலேமை விட்டு போகாதபடி பிதாவின் வாக்குதத்தம் நிறைவேறும்படி காத்திருங்கள் என்று சொல்கிறார்.  தேவனுடைய ராஜ்யம் ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் இறங்கி வருவதை குறித்து உயிர்த்தெழுந்த கிறிஸ்து சொல்கிறார் 

அப்போஸ்தலர் 1:3-11

அவர் பாடுபட்டபின்பு, நாற்பது நாளளவும் அப்போஸ்தலருக்குத் தரிசனமாகி, தேவனுடைய ராஜ்யத்துக்குரியவைகளை அவர்களுடனே பேசி, அநேகம் தெளிவான திருஷ்டாந்தங்களினாலே அவர்களுக்குத் தம்மை உயிரோடிருக்கிறவராகக் காண்பித்தார்.

அன்றியும், அவர் அவர்களுடனே கூடிவந்திருக்கும்போது, அவர்களை நோக்கி: யோவான் ஜலத்தினாலே ஞானஸ்நானங்கொடுத்தான்; நீங்கள் சில நாளுக்குள்ளே பரிசுத்தஆவியினாலே ஞானஸ்நானம் பெறுவீர்கள்.

ஆகையால் நீங்கள் எருசலேமை விட்டுப் போகாமல் என்னிடத்தில் கேள்விப்பட்ட பிதாவின் வாக்குத்தத்தம் நிறைவேறக் காத்திருங்கள் என்று கட்டளையிட்டார்.

அப்பொழுது கூடிவந்திருந்தவர்கள் அவரை நோக்கி: ஆண்டவரே, இக்காலத்திலா ராஜ்யத்தை இஸ்ரவேலுக்குத் திரும்பக் கொடுப்பீர் என்று கேட்டார்கள்.

அதற்கு அவர்: பிதாவானவர் தம்முடைய ஆதீனத்திலே வைத்திருக்கிற காலங்களையும் வேளைகளையும் அறிகிறது உங்களுக்கு அடுத்ததல்ல.

பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.

இவைகளை அவர் சொன்னபின்பு, அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கையில், உயர எடுத்துக்கொள்ளப்பட்டார்; அவர்கள் கண்களுக்கு மறைவாக ஒரு மேகம் அவரை எடுத்துக்கொண்டது.

அவர் போகிறபோது அவர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்கையில், இதோ, வெண்மையான வஸ்திரந்தரித்தவர்கள் இரண்டுபேர் அவர்களருகே நின்று:

கலிலேயராகிய மனுஷரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்துபார்த்து நிற்கிறீர்கள்? உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ, அப்படியே மறுபடியும் வருவார் என்றார்கள்.

மேற்க்கூறிய வசனங்களை நாம் தியானிக்கும் போது  தேவனுடைய ராஜ்யம் என்பது பரிசுத்த ஆவியின் பெலனைப் பெற்றுக்கொள்வதை குறித்து உயிர்த்த கிறிஸ்து கூறுகிறதை பார்க்கிறோம்.   பின்பு அவர் உயர எடுத்துக்கொள்ளப்படுகிறார். அவர்கள் கண்களுக்கு  மறைவாக ஒரு மேகம் அவரை எடுத்துக்கொண்டது.  அப்படி அவர் போகும் போது இதோ வெண்மையான வஸ்திரம் தரித்த இரண்டு  பேர் அவர்களருகே நின்று கலிலேயராகிய மனுஷரே, உங்கள் கண்களுக்கு முன்பாக எப்படி வானத்திற்கு எழுந்தருளிப்போனாரோ அப்படியே மீண்டும் வருவார். இவ்விதமாக உயிர்த்தெழுந்த கிறிஸ்து பதாளத்தையும், மரணத்தையும், ஜெயித்தெழும்பினார். மரணம் ஜெயமாக விழுங்கப்பட்டது என்ற வார்த்தை நிறைவேறுகிறது. இதனை தேவன் முன்க்கூட்டி திருஷ்டாந்தப்படுத்தியது என்னவென்றால்,  சீனாய் மலையின் மேல் கர்த்தர் மோசேயை அழைத்தார்,  ஆனால், மோசே மலையிலிருந்து இறங்கி வர தாமதிக்கிறதைப் பார்க்கிறோம். 

யாத்திராகமம் 34: 27-30  

பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: இந்த வார்த்தைகளை நீ எழுது; இந்த வார்த்தைகளின்படியே உன்னோடும் இஸ்ரவேலோடும் உடன்படிக்கைபண்ணினேன் என்றார்.

அங்கே அவன் அப்பம் புசியாமலும் தண்ணீர் குடியாமலும் இரவும் பகலும் நாற்பதுநாள் கர்த்தரோடே இருந்தான்; அவன் பத்துக் கற்பனைகளாகிய உடன்படிக்கையின் வார்த்தைகளைப் பலகைகளில் எழுதினான்.

மோசே சாட்சிப் பலகைகள் இரண்டையும் தன் கையில் எடுத்துக்கொண்டு, சீனாய் மலையிலிருந்து இறங்குகிறபோது, தன்னோடே அவர் பேசினதினாலே தன் முகம் பிரகாசித்திருப்பதை அவன் அறியாதிருந்தான்.

ஆரோனும் இஸ்ரவேல் புத்திரர் எல்லாரும் மோசேயைப் பார்க்கும்போது, அவன் முகம் பிரகாசித்திருப்பதைக் கண்டு, அவன் சமீபத்தில் சேரப்பயந்தார்கள்.

மேற்க்கூறப்பட்ட வசனங்களை நாம் தியானிக்கும் போது, மோசே கர்த்தரோடு நாற்பது நாள் புசியாமலும் குடியாமலும் மலையின் மேல் இருந்ததை வாசிக்கிறோம். மேலும் மோசே மலையிலிருந்து இறங்கி வரும்போது, ஜனங்கள் பின்வாங்கி போனார்கள். அங்குப் பார்க்கும் போது ஜனங்கள் செத்த ஆராதனை செய்தார்கள. அதனால்  தேவன் இது மரணத்துக்கேதுவான ஆராதனை என்றுச்சொல்லி கிறிஸ்துவை நம்  உள்ளத்தில் உயிர்ப்பித்து நாம் ஜீவனோடு ஆராதிக்கும்படியாக நம் ஆத்துமாவை எழுப்புகிறார். 

உயிர்த்தெழுந்த கிறிஸ்து தேவனுடைய ராஜ்யம் வர  காத்திருங்கள் என்று நம்மோடு சொல்கிறதின் கருத்து என்னவென்றால் நம் ஆத்தமா பரிசத்த ஆவியின் பெலனை பெற்றுக்கொண்டு தேவனை ஆராதிக்கவேண்டும் அப்போதுதான் நம் உள்ளம் ஆவியில் ஆராதிக்கும்  அவைத்தான் ஆவிக்குரிய ஆராதனை  ஆதலால் இவ்வித ஆராதனை நாம் யாவரும் செய்யும்படியாக ஒப்புக்கொடுப்போம். 

ஜெபிப்போம். கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

 -தொடர்ச்சி நாளை.