தேவனுடைய ராஜ்யம் நம் உள்ளத்தில்

Sis. பி. கிறிஸ்டோபர் வாசினி
Nov 12, 2020

தேவனுக்கே மகிமையுண்டாவதாக

லூக்கா12: 32

பயப்படாதே சிறுமந்தையே, உங்களுக்கு ராஜ்யத்தைக் கொடுக்க உங்கள் பிதா பிரியமாயிருக்கிறார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.    அல்லேலுயா.

தேவனுடைய ராஜ்யம் நம் உள்ளத்தில்

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், ஆவிக்குரிய ஆராதனை நம்மொருவருடைய உள்ளத்திலும் நடைப்பெற வேண்டும் என்பதைக் குறித்துத் தியானித்தோம்.   நியாயப்பிரமாணம்  மட்டும்  உள்ள காலத்தில் மோசே மூலம் தேவன் நடப்பித்த ஊழியத்தில் மோசே சீனாய் மலையிலிருந்து கீழே இறங்கி  வர தாமதித்தப்போது, இஸ்ரவேல் ஜனங்கள் செத்த ஆராதனை செய்துக்கொண்டிருந்ததை வாசிக்க முடிகிறது. இவ்வித ஜீவனற்ற ஆராதனை என்னவெனில் விக்கிரகராதனை. இஸ்ரவேல் ஜனங்களுக்கு, மனதில் பொறுமை இல்லாததால் இவ்விதம் நடைப்பெறுகிறது.  நம்முடைய தேவன் சொல்கிறார், வாக்குதத்தம் பெற்றதை பொறுமையோடு காத்திருந்து சுதந்தரித்துக்கொள்ளும்படி சொல்கிறார். 

எபிரெயர் l0:35-39

ஆகையால், மிகுந்த பலனுக்கேதுவான உங்கள் தைரியத்தை விட்டுவிடாதிருங்கள்.

நீங்கள் தேவனுடைய சித்தத்தின்படி செய்து, வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதைப் பெறும்படிக்குப் பொறுமை உங்களுக்கு வேண்டியதாயிருக்கிறது.

வருகிறவர் இன்னுங் கொஞ்சக்காலத்தில் வருவார், தாமதம்பண்ணார்.

விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான், பின்வாங்கிப்போவானானால் அவன்மேல் என் ஆத்துமா பிரியமாயிராது என்கிறார்.

நாமோ கெட்டுப்போகப் பின்வாங்குகிறவர்களாயிராமல், ஆத்துமா ஈடேற விசுவாசிக்கிறவர்களாயிருக்கிறோம்.

இந்த தேவவசனம் தியானிக்கும் போது, நமக்குள்ளாக ஒரு காரியம் சிந்திக்க வேண்டும். என்னவென்றால், நம் முந்தின நாட்களை நினைக்க வேண்டும். எப்படியெனில், நாம் தேவனால் சந்திக்கப்பட்டு மிகுந்த போராட்டத்தினால் வந்த உபத்திரவத்தை சகிததோம்.  பல நிந்தைகளாலும் உபத்திரவங்களினாலும் வேடிக்கையாக்கப்பட்டு, அதற்கு பங்காளிகளுமாயிருந்தோம்.  ஆனால் அப்போஸ்தலனாகிய பவுல்எபிரெய சபைக்கு தேவனுடைய வார்த்தை எழுதுகிறார்.

 எபிரெயர் 10:34  

நான் கட்டப்பட்டிருக்கையில் நீங்கள் என்னைக்குறித்துப் பரிதபித்ததுமன்றி, பரலோகத்தில் அதிக மேன்மையும் நிலையுள்ளதுமான சுதந்தரம் உங்களுக்கு உண்டென்று அறிந்து, உங்கள் ஆஸ்திகளையும் சந்தோஷமாய்க் கொள்ளையிடக்கொடுத்தீர்கள்.

இந்த வசனம் நாம் தியானிக்கும் போது, பவுல் கட்டப்பட்டிருக்கையில் எபிரெய சபை மக்கள் பரிதபிக்கவும் அவர்கள் ஆஸ்தியைக்கொடுத்தார்கள்.  நாம் தேவனால் சந்திக்கப்பட்டால், மிகுந்தப் பொறுமையோடு காத்திருந்து நம்முடைய பலனுக்கேதுவான தைரியத்தை, விட்டுவிடாதபடி நம்மை காத்துக்கொணடு, வாக்குத்தத்தத்தை சுதந்தரிக்க வேண்டும். ஆனால் இஸ்ரவேல் ஜனங்கள் தங்கள் பொறுமையை இழந்து விட்டார்கள்.   அதனால் அவர்கள் மரணத்திற்க்கு ஏதுவான காரியங்கள் செய்தார்கள். இஸ்ரவேலர் இவ்விதமாக தகாதக் காரிங்களைச் செய்து பின் வாங்கிப்போனார்கள். விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான், பின் வாங்கி போவானானால் அவன் மேல் என் ஆத்துமா பிரியமாயிராது என்று கர்த்தர் சொல்கிறார். 

பிரியமானவர்களே, இஸ்ரவேலர் பின்வாங்கி நடப்பித்தது என்னவென்றால் 

யாத் 32:1-10

மோசே மலையிலிருந்து இறங்கிவரத் தாமதிக்கிறதை ஜனங்கள் கண்டபோது, அவர்கள் ஆரோனிடத்தில் கூட்டங்கூடி, அவனை நோக்கி: எகிப்துதேசத்திலிருந்து எங்களை அழைத்துக்கொண்டுவந்த அந்த மோசேக்கு என்ன சம்பவித்ததோ அறியோம்; ஆதலால் நீர் எழுந்து, எங்களுக்கு முன்செல்லும் தெய்வங்களை எங்களுக்காக உண்டுபண்ணும் என்றார்கள்.

அதற்கு ஆரோன்: உங்கள் மனைவிகள் குமாரர் குமாரத்திகளுடைய காதுகளில் இருக்கிற பொன்னணிகளைக் கழற்றி, என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றான்.

ஜனங்கள் எல்லாரும் தங்கள் காதுகளில் இருந்த பொன்னணிகளைக் கழற்றி, ஆரோனிடத்தில் கொண்டுவந்தார்கள்.

அவர்கள் கையிலிருந்து அவன் அந்தப் பொன்னை வாங்கி, சிற்பக்கருவியினால் கருப்பிடித்து, ஒரு கன்றுக்குட்டியை வார்ப்பித்தான். அப்பொழுது அவர்கள்: இஸ்ரவேலரே, உங்களை எகிப்துதேசத்திலிருந்து அழைத்துக்கொண்டுவந்த உங்கள் தெய்வங்கள் இவைகளே என்றார்கள்.

ஆரோன் அதைப் பார்த்து, அதற்கு முன்பாக ஒரு பலிபீடத்தைக் கட்டி, நாளைக்குக் கர்த்தருக்குப் பண்டிகை என்று கூறினான்.

மறுநாள் அவர்கள் அதிகாலையில் எழுந்து, சர்வாங்க தகனபலிகளையிட்டு, சமாதானபலிகளைச் செலுத்தினார்கள்; பின்பு, ஜனங்கள் புசிக்கவும் குடிக்கவும் உட்கார்ந்து, விளையாட எழுந்தார்கள்.

அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ இறங்கிப்போ; எகிப்துதேசத்திலிருந்து நீ நடத்திக்கொண்டுவந்த உன் ஜனங்கள் தங்களைக் கெடுத்துக்கொண்டார்கள்.

அவர்களுக்கு நான் விதித்த வழியை அவர்கள் சீக்கிரமாய் விட்டு விலகினார்கள்; அவர்கள் தங்களுக்கு ஒரு கன்றுக்குட்டியை வார்ப்பித்து, அதைப் பணிந்துகொண்டு, அதற்குப் பலியிட்டு: இஸ்ரவேலரே, உங்களை எகிப்துதேசத்திலிருந்து அழைத்துக்கொண்டுவந்த உங்கள் தெய்வங்கள் இவைகளே என்று சொன்னார்கள் என்றார்.

பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: இந்த ஜனங்களைப் பார்த்தேன்; இவர்கள் வணங்காக்கழுத்துள்ள ஜனங்கள்.

ஆகையால் என் கோபம் இவர்கள்மேல் மூளவும், நான் இவர்களை அழித்துப்போடவும் நீ என்னை விட்டுவிடு; உன்னை ஒரு பெரிய ஜாதியாக்குவேன் என்றார்.

மேற்கூறப்பட்ட வசனங்கள் மோசே வர தாமதித்ததால் ஜனங்கள் ஆரோனிடம் எங்களுக்கு முன் செல்லும் தெய்வங்களை எங்களுக்கு உண்டு பண்ணவேண்டும் என்று கேட்டுக்கொண்டதால், ஆரோன் ஜனங்களிடம் தங்கள் காதுகளில் கிடக்கிற பொன்னணிகளை கழற்றி என்னிடத்தில், கொண்டுவாருங்கள் என்று சொல்ல, எல்லாரும் தங்கள் பொன்னணிகளை கழற்றி ஆரோனிடத்தில் கொடுத்தார்கள். 

அதனை ஆரோன் கையில் வாங்கி சிற்பக்கருவியினால் கருப்பிடித்து,  ஒரு கன்றுக்குட்டியை வார்ப்பித்தான். அப்பொழுது அவர்கள்: இஸ்ரவேலரே, உங்களை எகிப்திலிருந்து அழைத்துக் கொண்டு வந்த தெய்வங்கள் இவைகளே என்றுச் சொல்ல, ஆரோன் அதைப் பார்த்து நாளைக்கு பண்டிகை என்று கூறுகிறான்.   மறுநாள் அதிகாலை வேளையிலே ஜனங்கள் சர்வாங்க தகனபலிகளையும், சமாதானபலிகளையிட்டு ஜனங்கள் புசிக்கவும் குடிக்கவும் உட்கார்ந்து விளையாடவும் எழுந்திருந்தார்கள். அப்பொழுது கர்த்தர் மோசேயிடம் நீ எகிப்திலிருந்து நடத்திக் கொண்டு வந்த ஜனங்கள் தங்களை கெடுத்துக்கொண்டார்கள்.  இவர்கள் வணங்கா கழுத்துள்ள ஜனங்கள்.  அதனால் என் கோபம் இவர்கள் மேல் மூளவும்: நான் இவர்களை அழித்துப்போடவும்  நீ  என்னை விட்டுவிடு,  உன்னை ஒரு பெரிய ஜாதியாக்குவேன் என்றார்.  மோசேயினுடைய கையில்  இரண்டு சாட்சி பலகைகள் இருந்தது.

யாத்  32:15-20  

பின்பு மோசே மலையிலிருந்து இறங்கினான்; சாட்சிப்பலகைகள் இரண்டும் அவன் கையில் இருந்தது; அந்தப் பலகைகள் இருபுறமும் எழுதப்பட்டிருந்தது, அவைகள் இந்தப் பக்கத்திலும் அந்தப் பக்கத்திலும் எழுதப்பட்டிருந்தது.

அந்தப் பலகைகள் தேவனால் செய்யப்பட்டதாயும், அவைகளிலே பதிந்த எழுத்து தேவனால் எழுதப்பட்ட எழுத்துமாயிருந்தது.

ஜனங்கள் ஆரவாரம் பண்ணுகிறதை யோசுவா கேட்டு, மோசேயை நோக்கி: பாளயத்தில் யுத்தத்தின் இரைச்சல் உண்டாயிருக்கிறது என்றான்.

அதற்கு மோசே: அது ஜெயதொனியாகிய சத்தமும் அல்ல, அபஜெயதொனியாகிய சத்தமும் அல்ல; பாடலின் சத்தம் எனக்குக் கேட்கிறது என்றான்.

அவன் பாளயத்துக்குச் சமீபித்து, அந்தக் கன்றுக்குட்டியையும் நடனத்தையும் கண்டபோது, மோசே கோபம் மூண்டவனாகி, தன் கையிலே இருந்த பலகைகளை மலையின் அடியிலே எறிந்து உடைத்துப்போட்டு;

அவர்கள் உண்டுபண்ணின கன்றுக்குட்டியை எடுத்து, அக்கினியில் சுட்டெரித்து, அதைப் பொடியாக அரைத்து, தண்ணீரின்மேல் தூவி, அதை இஸ்ரவேல் புத்திரர் குடிக்கும்படி செய்தான்.

இவ்வித நடக்கும் என்பதை முன்கூட்டி எல்லாவற்றையும் தெரிந்த தேவன் தம்முடைய  கரத்தினால் எழுத்தை பதித்திருந்தார்.   தேவன் தம்முடைய கரத்தினால் பதித்த கற்பலகையை மோசே உடைக்கிறான். அதில் பதிந்திருந்த எழுத்து கிறிஸ்து. இதின் திருஷ்டாந்தம் என்னவென்றால் கல்லான இருதயம் உடைக்கப்பட்டு கிறிஸ்துவால் சதையான இருதயமாக மாற்றுகிறார் என்பதைக் காட்டுகிறது.  

ஏனென்றால். இஸ்ரவேல் ஜனங்கள் விக்கரகஙகளை செய்தார்கள், சேவித்தாரகள்.  இன்று நம்மளிலும் அனேகம் பேர் பொறுமையை இழந்து தவறான பாதையில் போய், தாங்கள் நடக்கிற பாதை என்னவென்று தெரியாமல் தேவக் கோபத்திற்கு ஆளாகி விடுகிறார்கள். அதனால் நமக்கு நல்ல பாதைக் காட்டவே, கழிந்த நாளில் நாம் தியானித்தோம், நம்மை பாதாளம், மரணம் என்பவற்றிலிருந்து விடுவித்து இரட்சிக்கும்படியாகவே  தேவனுடைய ராஜ்யமாகிய பரிசுத்த ஆவியானவர் நம் உள்ளத்தில் வெளிப்பட்டு மாம்சமும், இரத்தமும் தேவனுடைய ராஜ்யத்தை சுதந்தரிக்க முடியாது என்பதை நிரூபித்து காட்டுகிறார். 

ஆதலால் நாம் யாவரும் பொறுமையோடு காத்திருந்து தேவ ராஜ்யம்  பெற்றுக்கொள்வோம். ஒப்புக்கொடுப்போம். 

ஜெபிப்போம். கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

 -தொடர்ச்சி நாளை.