தேவனுக்கே மகிமையுண்டாவதாக

I கொரிந்தியர் 10: 14

ஆகையால் எனக்குப் பிரியமானவர்களே, விக்கிரகாராதனைக்கு விலகி ஓடுங்கள்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.     அல்லேலுயா.

விக்கிரகராதனை என்பது மரணத்துக்கேதுவான ஆராதனை - விளக்கம்

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், தேவனுடைய ராஜ்யம் பெற்றுக்கொள்பவர்கள் எந்த போராட்டம், நிந்தை, கட்டுகள் வந்தாலும் பொறுமையோடு காத்திருந்து அதனைப்பெற்றுக் கொள்ள வேண்டும். இஸ்ரவேல் ஜனங்கள் பொறுமை இல்லாமல் இருந்ததால் விககிரகங்களை செய்து,  அதை வணங்கினார்கள்.  அதனால் கர்த்தர் அவர்களை வணங்கா கழுத்துள்ள ஜனங்கள் என்று சொல்கிறார். அதனால் அது மரணத்துக்கேதுவான  ஆராதனையாயிருந்தது. மரணத்திற்கேதுவான ஆராதனையை குறித்து தேவன் சொல்கிறது என்னவென்றால் 

ஓசியா 13:13-16  

பிரசவஸ்திரீயின் வேதனை அவனுக்கு வரும்; அவன் விவேகமில்லாத பிள்ளை; பேறுகாலமட்டும் அவன் நிற்கவில்லை.

அவர்களை நான் பாதாளத்தின் வல்லமைக்கு நீங்கலாக்கி மீட்பேன்; அவர்களை மரணத்துக்கு நீங்கலாக்கி விடுவிப்பேன்; மரணமே, உன் வாதைகள் எங்கே? பாதாளமே, உன் சங்காரம் எங்கே? மனமாறுதல் என் கண்களுக்கு மறைவானதாயிருக்கும்.

இவன் சகோதரருக்குள்ளே ஜனம்பெருத்தவனாயிருந்தாலும், கர்த்தருடைய காற்றாகிய கீழ்க்காற்று வனாந்தரத்திலிருந்து எழும்பிவரும்; அதனால் அவனுடைய ஊற்றுகள் வற்றிப்போகும்; அவனுடைய துரவு சுவறிப்போகும்; அது இச்சிக்கப்படத்தக்க சகல பதார்த்தங்களுள்ள உத்தம பதார்த்தங்களையும் வாரிக்கொண்டுபோகும்.

சமாரியா தன் தேவனுக்கு விரோதமாகக் கலகம்பண்ணினபடியால், குற்றஞ் சுமத்தப்பட்டதாயிருக்கும்; அவர்கள் பட்டயத்தால் விழுவார்கள்; அவர்களுடைய குழந்தைகள் மோதியடிக்கப்படும்; அவர்களுடைய கர்ப்பவதிகள் கீறப்பட்டுப்போவார்கள்.

மேற்க்கூற்பட்ட வசனங்களில் எப்பிராயீமை குறித்து சொல்கிறார், எப்பிராயீம் என்பது திருப்பிப் போடாத அப்பம், இவர்கள் திடப்படாதவர்கள், இவர்கள்அக்கிரமம் கட்டி வைத்திருக்கிறேன் என்று கர்த்தர் சொல்கிறார். இவர்களிலிருக்கிற மாம்ச சிந்தையை குறித்து தேவன் அவர்களை பாதாளத்தின் வல்லமைக்கும், மரணத்திற்கும்  நீங்கலாக்கி விடுவிப்பேன் என்கிறார். மாம்ச சிந்தை மரணம், ஆவியின் சிந்தையோ ஜீவனும், சமாதானமும். 

ஓசியா13: 1-6

எப்பிராயீம் பேசினபோது நடுக்கமுண்டாயிற்று; அவன் இஸ்ரவேலிலே மேன்மைபெற்றான்; அவன் பாகால் விஷயத்தில் குற்றஞ்செய்து மடிந்துபோனான்.

இப்போதும் அவர்கள் அதிகமதிகமாய்ப் பாவஞ்செய்து, தங்கள் வெள்ளியினால் வார்ப்பித்த சுரூபங்களையும், தங்கள் புத்திக்கேற்க விக்கிரகங்களையும் தங்களுக்கு உண்டுபண்ணுகிறார்கள்; இவைகளெல்லாம் தட்டாருடைய வேலை; மனுஷரில் பலியிடுகிறவர்கள் கன்றுக்குட்டிகளை முத்தமிடலாமென்று இவைகளைக்குறித்துச் சொல்லுகிறார்கள்.

ஆகையால் அவர்கள் காலையில் காணும் மேகத்தைப்போலவும், விடியற்காலையில் ஒழிந்துபோகிற பனியைப்போலவும், பெருங்காற்று களத்திலிருந்து பறக்கடிக்கிற பதரைப்போலவும், புகைக்கூண்டில் ஏறிப்போகிற புகையைப்போலவும் இருப்பார்கள்.

நான் உன்னை எகிப்து தேசத்திலிருந்து அழைத்துவந்ததுமுதல் உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிறேன்; ஆகையால் நீ என்னையன்றி வேறே தேவனை அறியவேண்டாம்; என்னையன்றி இரட்சகர் ஒருவரும் இல்லை.

நான் உன்னை மகா வறட்சியான தேசமாகிய வனாந்தரத்திலே அறிந்துகொண்டேன்.

தங்களுக்கு இருந்த மேய்ச்சலினால் திருப்தியானார்கள்; திருப்தியானபின்பு அவர்கள் இருதயம் மேட்டிமையாயிற்று; அதினால் என்னை மறந்தார்கள்.

இஸ்ரவேல் ஜனங்களைக் குறித்து தேவன் சொல்கிறது என்னவெனறால் மகா வறட்சியான தேசத்தில் அறிந்தேன், தங்களுக்கு இருந்த மேய்ச்சலினால் திருப்தியானார்கள். பின்பு இருதயம் மேட்டிமையாகி, என்னை மறந்தார்கள் என்கிறார். எப்பிராயீம் இஸ்ரவேலிலே மேன்மைப் பெற்றான். ஆனால் அதிகமதிகமாக பாவஞ்செய்து வெள்ளியினால் வார்ப்பித்த சுரூபங்களையும், விக்கிரகங்களையும் தங்களுக்கென்று உண்டுபண்ணினார்கள். இவ்விதம் இஸ்ரவேலாகிய எப்பராயீம் பாகால் விஷயத்தில் குற்றஞ்செய்து மடிந்து போனான். பிரியமானவர்களே, நாம் தேவனுடைய வார்த்தைகள் தியானிக்கும் போது, தட்டான் வெள்ளியாலோ,  பொன்னினாலோ  வார்த்து செய்கிற அத்தனையும் விக்கிரகம் என்பதையும் அவற்றை கர்த்தர் கன்றுகுட்டி என்றும் சொல்கிறதை பார்க்கிறோம். அதற்க்கு தேவன் திருஷ்டாந்தப்படுத்தியதின் காரியம் என்னவென்றால் இஸ்ரவேல் ஜனங்கள் ஆரோன் மூலம் கன்றுக்கட்டியை செய்து ஆராதித்தார்கள். 

அப்பொழுது யாத் 32:17-21

ஜனங்கள் ஆரவாரம் பண்ணுகிறதை யோசுவா கேட்டு, மோசேயை நோக்கி: பாளயத்தில் யுத்தத்தின் இரைச்சல் உண்டாயிருக்கிறது என்றான்.

அதற்கு மோசே: அது ஜெயதொனியாகிய சத்தமும் அல்ல, அபஜெயதொனியாகிய சத்தமும் அல்ல; பாடலின் சத்தம் எனக்குக் கேட்கிறது என்றான்.

அவன் பாளயத்துக்குச் சமீபித்து, அந்தக் கன்றுக்குட்டியையும் நடனத்தையும் கண்டபோது, மோசே கோபம் மூண்டவனாகி, தன் கையிலே இருந்த பலகைகளை மலையின் அடியிலே எறிந்து உடைத்துப்போட்டு;

அவர்கள் உண்டுபண்ணின கன்றுக்குட்டியை எடுத்து, அக்கினியில் சுட்டெரித்து, அதைப் பொடியாக அரைத்து, தண்ணீரின்மேல் தூவி, அதை இஸ்ரவேல் புத்திரர் குடிக்கும்படி செய்தான்.

பின்பு, மோசே ஆரோனை நோக்கி: நீ இந்த ஜனங்கள்மேல் இந்தப் பெரும்பாதகத்தைச் சுமத்துகிறதற்கு, இவர்கள் உனக்கு என்ன செய்தார்கள் என்றான்.

இவைஎன்னவென்றால் யோசுவா,  மோசேயிடம் பாளயத்தில் யுத்தத்தின் இரைச்சல் உண்டாயிருக்கிறது என்ற போது மோசே அது ஜெயதொனியின் சத்தம் அல்ல,  அபஜெயதொனியின் சத்தமும் அல்ல; பாடலின் சத்தம் என்று சொல்லி அருகில் போகும்போது கன்றுக்குட்டியையும் நடனத்தையும் கண்டு, கோபமடைந்து கையில் இருந்த பலகையை மலையின் அடியில் எறிந்து, உடைத்து, பின்பு அக்கினியில் சுட்டெரித்து, அதை தண்ணீரின் மேல் தூவி இஸ்ரவேல் புத்திரர் குடிக்கும்படி செய்தான். இஸ்ரவேல் புத்திரர் விக்கிரகங்களை ஆராதித்தது தேவனுக்கு பெரும்பாதகமாகி விட்டது,   தேவனுக்கு பொல்லாப்பு செய்து பொல்லாத ஜனங்களாகி விட்டார்கள். மேலும் ஆரோன் நடந்த எல்லா காரியங்களையும்  மோசேயிடம் சொல்கிறதைப் பார்க்கிறோம். 

யாத் 32:24,25

அப்பொழுது நான்: பொன்னுடைமை உடையவர்கள் எவர்களோ அவர்கள் அதைக் கழற்றித் தரக்கடவர்கள் என்றேன்; அவர்கள் அப்படியே செய்தார்கள்; அதை அக்கினியிலே போட்டேன், அதிலிருந்து இந்தக் கன்றுக்குட்டி வந்தது என்றான்.

ஜனங்கள் தங்கள் பகைவருக்குள் அவமானப்படத்தக்கதாக ஆரோன் அவர்களை நிர்வாணமாக்கியிருந்தான். அவர்கள் நிர்வாணமாயிருக்கிறதை மோசே கண்டு,

மேற்க்கூறிய வசனங்கள் ஆரோன் இஸ்ரவேல் ஜனங்களை தங்கள் பகைவருக்குள்ளாக அவமானப்படுத்தும் படியாகவே நிர்வாணமாக்கியிருந்தான்.   பின்பு  நிர்வாணமாயிருக்கிறதை மோசேக்கொண்டு கர்த்தருடைய பட்சத்திலிருக்கிறவர்கள் யார் யாரெல்லாம் என்று கேட்டு அவர்களையெல்லாம் பாளயத்தின் வாசலில் வரச்சொல்லும் போது, லேவிக்கோத்திரத்தாரில் எல்லாரும் வந்து நின்றார்கள்.   அப்பொழுது மோசே எல்லாரும்  தன் தன் பட்டயத்தை  அரையிலே கட்டிக்கொண்டு  வாசலுக்கு வாசல் உள்ளும் புறம்பும் போய்,  தன் தன் அயலானையும், தன் தன் சிநேகிதனையும்,  தன் தன் சகோதரனையும் கொன்று போடக்கடவன் என்று சொல்ல அப்படியே  செய்தார்கள். அந்நாளில் ஏறக்குறைய மூவாயிரம் பேர் விழுந்தார்கள்.  இவை மரணத்திற்க்கேதுவான ஆராதனை என்பதை தேவன் திருஷ்டாந்தப்படுத்துகிறார். இவ்விதம் அநேகம் பேர் விக்கிரகம் என்று தெரியாமல் வெள்ளியாலும், பொன்னினாலும் அலங்கரித்து தங்களைக்  கெடுத்துக்கொள்கிறார்கள்.  

இதனை வாசிக்கிற, அன்பானவர்களே, விக்கிரங்களால் தங்களை அலங்கரித்தும், மற்றும் விக்கரங்களுக்கு முன், நின்று சேவித்தும்  மரணத்துக்கேதுவான  ஆராதனை செய்து, தங்களை கெடுத்துக்கொள்ளாதபடி தேவனுக்கு பிரியமான ஆராதனை செய்ய ஒப்புக்கொடுப்போம்

ஜெபிப்போம். கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

 -தொடர்ச்சி நாளை.