Nov 14, 2020

தேவனுக்கே மகிமையுண்டாவதாக

ஏசாயா 44: 22

உன் மீறுதல்களை மேகத்தைப்போலவும், உன் பாவங்களைக் கார்மேகத்தைப்போலவும் அகற்றிவிட்டேன்; என்னிடத்தில் திரும்பு; உன்னை நான் மீட்டுக்கொண்டேன்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.     அல்லேலுயா.

தேவனுக்கு  விரோதமான பாதகம் விக்கிரகராதனை 


கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், விக்கிரகராதனை என்பது மரணத்துக்கேதுவானதும் வார்க்கப்ப்ட்ட அத்தனையும் குறிப்பாக பொன்னாலும், வெள்ளியாலும் தங்கள் சரீரத்தை அலங்கரித்தால் அது விக்கிரகராதனை என்பதை திருஷ்டாந்தத்தோடு தேவன் நமக்கு  விளக்குகிறதை நாம் பார்க்கிறோம்.  மேலும் அநேகர் தங்களைக் கெடுத்துக்கொள்வதுக்குறித்து  

ஏசாயா 42: 17-22

சித்திரவேலையான விக்கிரகங்களை நம்பி, வார்ப்பிக்கப்பட்ட சுரூபங்களை நோக்கி: நீங்கள் எங்கள் தேவர்கள் என்று சொல்லுகிறவர்கள் பின்னிடைந்து மிகவும் வெட்கப்படுவார்கள்.

செவிடரே, கேளுங்கள்; குருடரே, நீங்கள் காணும்படி நோக்கிப் பாருங்கள்.

என் தாசனையல்லாமல் குருடன் யார்? நான் அனுப்பிய தூதனையல்லாமல் செவிடன் யார்? உத்தமனையல்லாமல் குருடன் யார்? கர்த்தருடைய ஊழியக்காரனையல்லாமல் அந்தகன் யார்?

நீ அநேக காரியங்களைக் கண்டும் கவனியாதிருக்கிறாய்; அவனுக்குச் செவிகளைத் திறந்தாலும் கேளாதே போகிறான்.

கர்த்தர் தமது நீதியினிமித்தம் அவன்மேல் பிரியம் வைத்திருந்தார்; அவர் வேதத்தை முக்கியப்படுத்தி அதை மகிமையுள்ளதாக்குவார்.

இந்த ஜனமோ கொள்ளையிடப்பட்டும், சூறையாடப்பட்டும் இருக்கிறார்கள்; அவர்கள் அனைவரும் கெபிகளிலே அகப்பட்டு, காவலறைகளிலே அடைக்கப்பட்டிருக்கிறார்கள், தப்புவிப்பார் இல்லாமல் கொள்ளையாகி, விட்டுவிடு என்பார் இல்லாமல் சூறையாவார்கள்.

இதனை நாம் வாசிக்கும் போது கர்த்தரின தாசன்மார்த்தான் கர்த்தர் தம்முடைய ஊழியக்காரர்களையையும்,  தாசன்களை குருடர்கள் என்றும்,  அந்தகன் என்றும் கூறுகிறதை பார்க்கிறோம். அவர்கள் ஜனங்களை  தங்கள் விருப்பம் போல உலகத்தாருக்கு ஒத்த  வேஷத்தோடு ஐக்கியப்படுத்தியும  நடத்தி செல்லுவார்கள். ஆதலால்  அநேகம் பேருடைய ஆத்துமா மரணத்திற்கேதுவாகி பாதாளத்தில் கிடந்து வேதனைப்படுகிறார்கள்.  ஏனென்றால் விக்கிரகராதனைச் செய்வது தேவனுக்கு நாம் செய்கிற பெரும்பாதகம். அதனால் தேவன் மிகுந்த கோபம் உடையவராக காணப்படுகிறார்.  

ஏசாயா 45:16

விக்கிரகங்களை உண்டுபண்ணுகிற அனைவரும் வெட்கப்பட்டு இலச்சையடைந்து, ஏகமாய்க் கலங்கிப்போவார்கள்.

கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால் என்னைத் தவிரத் தேவனுண்டோ? வேறொரு கன்மலையும் இல்லையே, ஒருவனையும் அறியேன். 

ஏசாயா 44: 9-11

விக்கிரகங்களை உருவாக்குகிற யாவரும் வீணர்; அவர்களால் இச்சிக்கப்பட்டவைகள் ஒன்றுக்கும் உதவாது; அவைகள் ஒன்றும் காணாமலும், ஒன்றும் அறியாமலும் இருக்கிறதென்று தங்களுக்கு வெட்கமுண்டாக அவைகளுக்குத் தாங்களே சாட்சிகளாயிருக்கிறார்கள்.

ஒன்றுக்கும் உதவாத தெய்வத்தை உருவாக்கி, விக்கிரகத்தை வார்ப்பிக்கிறவன் எப்படிப்பட்டவன்?

இதோ, அவனுடைய கூட்டாளிகளெல்லாரும் வெட்கமடைவார்கள்; தொழிலாளிகள் நரஜீவன்கள்தானே; அவர்கள் எல்லாரும் கூடிவந்து நிற்கட்டும்; அவர்கள் ஏகமாய்த் திகைத்துவெட்கப்படுவார்கள்.

பிரியமானவர்களே, விக்கிரகத்தை உருவாக்கி,  அதை வார்க்கிறவனும், அவர்களுடைய கூட்டாளிகளும் நரஜீவன்கள் என்றும் அவர்கள் எல்லாரும் ஏகமாய் திகைத்து வெட்கப்படுவார்கள்.  மேலும் விக்கிரகங்கள் செய்வதைக் குறித்து கர்த்தர் சொல்லுகிறது, என்னவென்றால் 

ஏசாயா 44:12-19

கொல்லன் இரும்பைக் குறட்டால் இடுக்கி, உலையிலே காயவைத்து, சுத்திகளால் அதை உருவாக்கி, தன் புயபலத்தினால் அதைப் பண்படுத்துகிறான்; பட்டினியாயிருந்து பெலனற்றுப்போகிறான்; தண்ணீர் குடியாமல் களைத்துப்போகிறான்.

தச்சன் நூல்பிடித்து, மட்டப்பலகையால் மரத்துக்குக் குறிபோட்டு, உளிகளினால் உருப்படுத்தி, கவராசத்தினால் அதை வகுத்து, மனுஷ சாயலாக மனுஷரூபத்தின்படி உருவமாக்குகிறான்; அதைக் கோவிலிலே நாட்டி வைக்கிறான்.

அவன் தனக்குக் கேதுருக்களை வெட்டுகிறான்; ஒரு மருதமரத்தையாவது ஒரு கர்வாலிமரத்தையாவது, தெரிந்துகொண்டு, காட்டுமரங்களிலே பெலத்த மரத்தைத் தன் காரியத்துக்காக வளர்க்கிறான்; அல்லது அசோகமரத்தை நடுகிறான், மழை அதை வளரச்செய்யும்.

மனுஷனுக்கு அவைகள் அடுப்புக்காகும்போது, அவன் அவைகளில் எடுத்துக் குளிர்காய்கிறான்; நெருப்பைமூட்டி அப்பமும் சுடுகிறான்; அதினால் ஒரு தெய்வத்தையும் உண்டுபண்ணி, அதைப் பணிந்துகொள்ளுகிறான்; ஒரு விக்கிரகத்தையும் அதினால் செய்து, அதை வணங்குகிறான்.

அதில் ஒரு துண்டை அடுப்பில் எரிக்கிறான்; ஒரு துண்டினால் இறைச்சியைச் சமைத்துப் புசித்து, பொரியலைப் பொரித்து திருப்தியாகி, குளிருங்காய்ந்து: ஆஆ, அனலானேன்; நெருப்பைக் கண்டேன் என்று சொல்லி;

அதில் மீதியான துண்டைத் தனக்கு விக்கிரகதெய்வமாகச் செய்து, அதற்குமுன் விழுந்து, அதை வணங்கி: நீ என் தெய்வம், என்னை இரட்சிக்கவேண்டும் என்று அதை நோக்கி மன்றாடுகிறான்.

அறியாமலும் உணராமலும் இருக்கிறார்கள்; காணாதபடிக்கு அவர்கள் கண்களும், உணராதபடிக்கு அவர்கள் இருதயமும் அடைக்கப்பட்டிருக்கிறது.

அதில் பாதியை அடுப்பில் எரித்தேன்; அதின் தழலின்மேல் அப்பத்தையும் சுட்டு, இறைச்சியையும் பொரித்துப் புசித்தேன்; அதில் மீதியான துண்டை நான் அருவருப்பான விக்கிரகமாக்கலாமா? ஒரு மரக்கட்டையை வணங்கலாமா என்று சொல்ல, தன் மனதில் அவனுக்குத் தோன்றவில்லை; அம்மாத்திரம் அறிவும் சொரணையும் இல்லை.

இதனைக்குறித்து கர்த்தர் சொல்கிறார், அதை தோளின் மேல் தூக்கிச்  சென்று கோவிலில் நாட்டுகிறார்கள். நாம் சிந்திக்க வேண்டுவது என்னவென்றால், தேவன் நம்மை சிருஷ்டித்து, உருவாக்கியிருக்க,  நாம்  அவரை உருவாக்க முடியுமா? முடியாது. அவர் ஒருவரே நம்முடைய தேவன் என்பதை நாம் ஒவ்வொருவரும்  நிச்சயித்துக்கொண்டு, தேவன் என்பது வார்த்தை. அந்த வார்த்தையை நாம் ஒவ்வொருவரும் முழு மனதோடு விசுவாசித்து, அதனை ஏற்றுக்கொண்டு, ஆவியாயிருக்கிற கிறிஸ்துவினால் நாம் பிழைப்போம்.

ஜெபிப்போம். கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

 -தொடர்ச்சி நாளை.