நாமே தேவனுடய ஆலயம்

Sis. பி. கிறிஸ்டோபர் வாசினி
Nov 15, 2020

தேவனுக்கே மகிமையுண்டாவதாக

I கொரிந்தியர் 3: 16

நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா?

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.     அல்லேலுயா.

நாமே தேவனுடய ஆலயம்

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், விக்கிரகராதனை  என்பது தேவனுக்கு விரோதமான பகைமை என்றும் தேவன் மனுஷனை சிருஷ்டித்தார், ஆனால் மனுஷன் தேவனை உண்டாக்க முடியாது என்பதையும், ஆனால் மனுஷன் மண்ணினாலும், வெள்ளியினாலும், பொன்னினாலும், மரத்தினாலும் விக்கிரகங்களை உண்டாக்கி அவற்றை தேவனென்று சொல்லி கோவில்களில் கொண்டு வைத்து பெரிய பாவஞ்ச் செய்து விடுகிறார்கள். இவ்விதம் தங்களில் இருக்கிற ஆத்துமாவைக்  கெடுத்துக்கொள்கிறதினால் தேவன் அவர்களிடத்தில் கோபமூண்டவராகி அவர்களை வெட்கப்படுத்துகிறார். மேலும் இவ்விதமான விக்கிரகங்களைச் செய்து வழிப்பாடுச் செய்கிறவர்கள், உண்மையான தேவனை சேவிக்காமல் பிசாசை சேவிக்கிறவர்கள். அவர்களைக் குறித்து தேவன் சொல்கிறதாவது 

ஏசாயா 44:24

உன் மீட்பரும், தாயின் கர்ப்பத்தில் உன்னை உருவாக்கினவருமான கர்த்தர் சொல்லுகிறதாவது: நானே எல்லாவற்றையும் செய்கிற கர்த்தர்; நான் ஒருவராய் வானங்களை விரித்து, நானே பூமியைப் பரப்பினவர்.

நானே எல்லாவற்றையும் செய்கிற கர்த்தர் என்று சொல்கிறார்.  நான் கட்டுகதைக்காரரின் குறிகளை அபத்தமாக்குகிறவர், குறிச்சொல்லுகிறவர்களை நிர்மூடராக்கி, ஞானிகளை வெட்கப்படுத்தி, அவர்கள் அறிவை பைத்தியமாகப்பண்ணுகிறவர். கல்லாலும், மண்ணாலும் மனுஷனுடைய கைவேலையால். செய்யப்பட்ட கோவில்களில் தேவன் வாசம் பண்ணுவதில்லை. 

அப்போஸ்தலர் 17:23—30

எப்படியென்றால், நான் சுற்றித்திரிந்து, உங்கள் ஆராதனைக்குரியவைகளைக் கவனித்துப் பார்த்தபொழுது, அறியப்படாத தேவனுக்கு என்று எழுதியிருக்கிற ஒரு பலிபீடத்தைக் கண்டேன்; நீங்கள் அறியாமல் ஆராதிக்கிற அவரையே நான் உங்களுக்கு அறிவிக்கிறேன்.

உலகத்தையும் அதிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின தேவனானவர் வானத்திற்கும் பூமிக்கும் ஆண்டவராயிருக்கிறபடியால் கைகளினால் கட்டப்பட்ட கோவில்களில் அவர் வாசம்பண்ணுகிறதில்லை.

எல்லாருக்கும் ஜீவனையும் சுவாசத்தையும் சகலத்தையும் கொடுக்கிற அவர், தமக்கு யாதொன்று தேவையானதுபோல, மனுஷர் கைகளால் பணிவிடைகொள்ளுகிறதுமில்லை.

மனுஷஜாதியான சகல ஜனங்களையும் அவர் ஒரே இரத்தத்தினாலே தோன்றப்பண்ணி, பூமியின்மீதெங்கும் குடியிருக்கச்செய்து, முன் தீர்மானிக்கப்பட்ட காலங்களையும் அவர்கள் குடியிருப்பின் எல்லைகளையும் குறித்திருக்கிறார்.

கர்த்தராகிய தம்மை அவர்கள் தடவியாகிலும் கண்டுபிடிக்கத்தக்கதாகத் தம்மைத் தேடும்படிக்கு அப்படிச் செய்தார்; அவர் நம்மில் ஒருவருக்கும் தூரமானவரல்லவே.

ஏனெனில் அவருக்குள் நாம் பிழைக்கிறோம், அசைகிறோம், இருக்கிறோம்; அப்படியே உங்கள் புலவர்களிலும் சிலர்: நாம் அவருடைய சந்ததியார் என்று சொல்லியிருக்கிறார்கள்.

நாம் தேவனுடைய சந்ததியாராயிருக்க, மனுஷருடைய சித்திரவேலையினாலும் யுக்தியினாலும் உருவாக்கின பொன், வெள்ளி, கல் இவைகளுக்கு தெய்வம் ஒப்பாயிருக்குமென்று நாம் நினைக்கலாகாது.

அறியாமையுள்ள காலங்களை தேவன் காணாதவர்போலிருந்தார்; இப்பொழுதோ மனந்திரும்பவேண்டுமென்று எங்குமுள்ள மனுஷரெல்லாருக்கும் கட்டளையிடுகிறார்.

மேற்கூறப்பட்ட வசனங்களை நாம் தியானிக்கும்  போது, நீங்கள் அறியாமல் ஆராதிக்கிற. அவரை நான்  உஙகளுக்கு அறிவிக்கிறேன் என்று சொல்கிறதை வாசிக்கிறோம். நம்முடைய ஆண்டவராகிய தேவன் கைகளினால் கட்டப்பட்ட கோவில்களில்  வாசம்பண்ணுகிறதில்லை.  மனுஷர் கைகளால் பணிவிடைக் கொள்ளுகிறதில்லை என்பதும், தெரிய வருகிறது.   மேலும் மறுஜாதியான, சகல ஜனங்களையும் ஒரே இரத்தத்தாலே தோன்றப்பண்ணி, பூமியில் குடியிருக்கிற யாவருக்கும் அவர்கள் குடியிருப்பின் எல்லைகளை குறித்திருக்கிறார். அந்த குடியிருப்பின் எல்லையானது நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து  என்னவெனில்  

மத்தேயு 24: 1,2

இயேசு தேவாலயத்தை விட்டுப் புறப்பட்டுப்போகையில், அவருடைய சீஷர்கள் தேவாலயத்தின் கட்டடங்களை அவருக்குக் காண்பிக்க அவரிடத்தில் வந்தார்கள்.

இயேசு அவர்களை நோக்கி: இவைகளையெல்லாம் பார்க்கிறீர்களே, இவ்விடத்தில் ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்பட்டுப்போகும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

மேலும் இவைகள் சம்பவிக்கும் காலம் எது என்று கேட்கும் போது சில காரியங்கள் இயேசு கிறிஸ்து சொல்கிறதை பார்க்கிறோம்.  எப்படியெனில் மத்தேயு 24: 4—31 வரையிலும் நாம் வாசிக்கும் போது மனுஷகுமாரன் நம் உள்ளத்தில் தோன்றுகிறார். இதிலிருந்து புரிகிறது என்னவென்றால் இயேசு கிறிஸ்து சீஷர்களிடம் ஆலயத்தை குறித்து சொல்கிறது; இவை ஒரு கல்லின் மேல் ஒரு கல்லிராதபடி எல்லாம் இடிக்கப்படும் நாட்கள் வரும் என்று அவர் சொன்னதின் கருத்தோவெனில் அவர் தம்முடைய சரீரத்தில் ஆலயம் எழுப்புகிறார் என்பதற்கு அடையாளமாக இதை சொல்கிறார். அவற்றைப்பற்றி நாம் தியானிக்கும் போது, தேவாலயம் அருவருபபுகளால் நிறையப்பட்டிருக்கும்போது எல்லாவற்றையும் சவுக்கையால் அடித்து துரத்துகிறதை பார்க்கிறோம்.

யோவான் 2: 17 – 22

அப்பொழுது: உம்முடைய வீட்டைக்குறித்து உண்டான பக்திவைராக்கியம் என்னைப் பட்சித்தது என்று எழுதியிருக்கிறதை அவருடைய சீஷர்கள் நினைவுகூர்ந்தார்கள்.

அப்பொழுது யூதர்கள் அவரை நோக்கி: நீர் இவைகளைச் செய்கிறீரே, இதற்கு என்ன அடையாளத்தை எங்களுக்குக் காண்பிக்கிறீர் என்று கேட்டார்கள்.

இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: இந்த ஆலயத்தை இடித்துப்போடுங்கள்; மூன்று நாளைக்குள்ளே இதை எழுப்புவேன் என்றார்.

அப்பொழுது யூதர்கள்: இந்த ஆலயத்தைக் கட்ட நாற்பத்தாறு வருஷம் சென்றதே, நீர் இதை மூன்று நாளைக்குள்ளே எழுப்புவீரோ என்றார்கள்.

அவரோ தம்முடைய சரீரமாகிய ஆலயத்தைக்குறித்துப் பேசினார்.

அவர் இப்படிச் சொன்னதை அவர் மரித்தோரிலிருந்தெழுந்தபின்பு அவருடைய சீஷர்கள் நினைவுகூர்ந்து, வேதவாக்கியத்தையும் இயேசு சொன்ன வசனத்தையும் விசுவாசித்தார்கள்.

இதன் கருத்துக்களை நாம் வாசிக்கும் போது இந்த ஆலயத்தை இடித்து போடுங்கள், இதை நான் மூன்று நாளைக்குள்ளாக எழுப்புவேன் என்பதனை நாம் தியானிக்கும் போது கையால் செய்யப்பட்ட ஆலயத்தில் பலவித அருவருப்புகள் நிறைந்திருந்ததால்,  தேவன் தம்முடைய ஆவியினால் தேவலாயத்தை கட்டி எழுப்பும்படியாகவே கிறிஸ்துவை மரித்தோரிலிருந்தெழுப்பி தம்முடைய சித்தத்தை நிறைவேற்றுகிறார். இவ்விதமாக கிறிஸ்துவை மரித்தோரிலிருந்தெழுப்பினவர் தம்முடைய ஆலயத்தை அவருடைய வல்லமையினால் எழுப்புகிறார்.  மேலும் நம்மையும் அவரோடே கூட எழுப்பி, உன்னதங்களில்  அவரோடே கூட உட்கார வைக்கிறார். 

எபேசியர் 2: 6-8

கிறிஸ்து இயேசுவுக்குள் அவர் நம்மிடத்தில் வைத்த தயவினாலே, தம்முடைய கிருபையின் மகா மேன்மையான ஐசுவரியத்தை வருங்காலங்களில் விளங்கச்செய்வதற்காக,

கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை அவரோடேகூட எழுப்பி, உன்னதங்களிலே அவரோடேகூட உட்காரவும் செய்தார்.

கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு;

இவ்விதமாக தூரமாக இருந்த நம்மை  கிறிஸ்து   இயேசுவுக்குள் கிறிஸ்துவின் இரத்தத்தினால் சமீபமாக்கினார். பிரியமானவர்களே,  இவ்விதம் மனுஷஜாதியான சகல ஜனங்களையும் ஒரே இரத்தத்தினால் தோன்றப்பண்ணி, அவருடைய  ஆலயமாக விளங்கப்ண்ணுகிறார். 

இதனை வாசிக்கிற அன்பானவர்களே, இதுவரை யாராவது விக்கிரகங்களையோ மற்றும் கல்லாலும் மண்ணாலும் கட்டப்பட்ட பெரிய கட்டிடங்களின் அழகையோ கண்டு வியப்படைந்து அதில் தான் தேவன் இருக்கிறார் என்று நீங்கள் நினைத்திருந்தால்; அப்படி உள்ள எண்ணங்களை விட்டு விட்டு தேவன் என்பது அவருடைய வார்த்தை,  அந்த வார்த்தையானது கிறிஸ்து, அவர் மனுஷகுமாரனாக நம் உள்ளத்தில் தோன்றுகிறது எப்பொழுதென்றால் மத்தேயு 24: 4-31 வரையிலும் உள்ள வசனங்களை ஆவிக்குரிய அர்த்தங்களோடு நீங்கள் தியானிக்கும் போது மனுஷகுமாரன் நம் உள்ளத்தில் தோன்றுகிறது புரியும். 

தேவன் என்பது அவருடைய வார்த்தை,  அந்த வார்த்தையானது கிறிஸ்து.  பின்பு நாம் பாவத்திற்கு மரித்து,  நம் ஆத்தமா கிறிஸ்துவோடு கூட எழுந்திருக்க வேண்டும். அப்பொழுது நம் வாழ்வில் ஒரு புதிய சாயல் கிடைக்கிறது. அந்த சாயல் தான் கிறிஸ்து.  அவர்தான் அந்த ஆலயம், நாமே அந்த ஆலயம். நாம் யாவரும் தேவனுடைய ஆலயமாக பிரதீஷ்டிப்போம்.

ஜெபிப்போம். கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

 -தொடர்ச்சி நாளை.