இரக்கமுள்ளத் தேவன்

Sis. பி. கிறிஸ்டோபர் வாசினி
Nov 16, 2020

தேவனுக்கே மகிமையுண்டாவதாக

யாத்திராகமம் 33: 19

அதற்கு அவர்: என்னுடைய தயையை எல்லாம் நான் உனக்கு முன்பாகக் கடந்துபோகப்பண்ணி, கர்த்தருடைய நாமத்தை உனக்கு முன்பாகக் கூறுவேன்; எவன்மேல் கிருபையாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ, அவன்மேல் கிருபையாயிருப்பேன்; எவன்மேல் இரக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ அவன்மேல் இரக்கமாயிருப்பேன் என்று சொல்லி

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.     அல்லேலுயா.

இரக்கமுள்ளத் தேவன்

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், நாமே தேவனுடைய ஆலயமாகிறோம், தேவன் நம்மை  எப்படி தேவனுடைய ஆலயமாக மாற்றுகிறார் என்பதையும், மனுஷனுடைய கைவேலையால் பலனுமில்லை, மிருக ஜீவன்களால் பலனுமில்லை, தேவனுடைய ஆவியினால் தேவன் ஆலயத்தை கட்டுகிறார் என்பது புரிகிறது. 

ஒசியா 8:1-8  

உன் வாயிலே எக்காளத்தை வை; அவர்கள் என் உடன்படிக்கையை மீறி, என் நியாயப்பிரமாணத்துக்கு விரோதமாகத் துரோகம்பண்ணினபடியினால், கர்த்தருடைய வீட்டின்மேல் சத்துரு கழுகைப்போல் பறந்துவருகிறான்.

எங்கள் தேவனே, உம்மை அறிந்திருக்கிறோம் என்று சொல்லி இஸ்ரவேலர் கூப்பிடுவார்கள்.

ஆனாலும் இஸ்ரவேலர் நன்மையை வெறுத்தார்கள்; சத்துரு அவர்களைத் தொடருவான்.

அவர்கள் ராஜாக்களை ஏற்படுத்திக்கொண்டார்கள், ஆனாலும் என்னாலே அல்ல; அதிபதிகளை வைத்துக்கொண்டார்கள், ஆனாலும் நான் அறியேன்; அவர்கள் வேரறுப்புண்டு போகும்படித் தங்கள் வெள்ளியினாலும் தங்கள் பொன்னினாலும் தங்களுக்கு விக்கிரகங்களைச் செய்வித்தார்கள்.

சமாரியாவே, உன் கன்றுக்குட்டி உன்னை வெறுத்துவிடுகிறது; என் கோபம் அவர்கள்மேல் மூண்டது; எதுவரைக்கும் சுத்தாங்கம் அடையமாட்டாதிருப்பார்கள்?

அதுவும் இஸ்ரவேலருடைய செய்கையே; தட்டான் அதைச் செய்தான், ஆதலால் அது தேவன் அல்லவே, சமாரியாவின் கன்றுக்குட்டி துண்டுதுண்டாய்ப் போகும்.

அவர்கள் காற்றை விதைத்து, சூறைக்காற்றை அறுப்பார்கள்; விளைச்சல் அவர்களுக்கு இல்லை; கதிர் மாவைக் கொடுக்கமாட்டாது; கொடுத்தாலும் அந்நியர் அதை விழுங்குவார்கள்.

இஸ்ரவேலர் விழுங்கப்படுகிறார்கள்; அவர்கள் இனிப் புறஜாதிகளுக்குள்ளே விரும்பப்படாத பாத்திரத்தைப்போல் இருப்பார்கள்.

இந்த வசனங்களை நாம் தியானிக்கும் போது இஸ்ரவேலர் உடன்படிக்கையை மீறி நியாயப்பிரமாணத்திற்கு விரோதமாக துரோகம் பண்ணினபடியால் சத்துரு கர்த்தரின் வீட்டில் கழுகைப்போல் பறந்து வருவான். இஸ்ரவேலர் நியாய்பிரமாணத்திற்கு விரோதமாக விக்கிரகத்தை செய்தார்கள்.  சமாரியாவே உன் கன்றுக்குட்டி உன்னை வெறுத்து விடுகிறது.  என் கோபம் அவர்கள் மேல் மூண்டது என்று கர்த்தர் சொல்கிறார். இஸ்ரவேல் ஜனங்கள்  கன்றுக்குட்டியை செய்வித்தார்கள். அதனால் தேவனுடைய கோபம் அவர்கள் மேல் வந்து, அதனால் தேவன் லேவிப்புத்திரரை அழைப்பித்து வாசலுக்கு வாசல் சகோதரனையும், சிநேகிதனையும், அயலானையும் கொன்றுப் போட்டபோது ஏறக்குறைய மூவாயிரம் பேர் விழுந்தார்கள். 

அங்கு நாம் பார்க்கும் போது விக்கரகராதனை செய்ததால் சகோதரனுக்கு சகோதரன் பட்டயம் எழுப்பினார்.  இவ்விதம் தேவன் இஸ்ரவேலருக்குள் செய்து பின்பு அதிலிருந்து மனந்திரும்பினால், மனந்திரும்புகிற நாளில் கர்த்தர் அவர்களை ஆசீர்வதிக்கும்படியாக உங்களை பிரதீஷ்டைப் பண்ணுங்கள் என்று சொல்கிறார். அவர்களை ஆசீர்வதிக்கும்படியாக உங்களை பிரதீஷ்டைப் பண்ணுங்கள் என்று சொல்கிறார். 

யாத்திராகமம் 32: 29

கர்த்தர் இன்றைக்கு உங்களுக்கு ஆசீர்வாதம் அளிக்கும்படி, இன்றைக்கு நீங்கள் அவனவன் தன்தன் மகனுக்கும் சகோதரனுக்கும் விரோதமாயிருக்கிறதினால், கர்த்தருக்கு உங்களைப் பிரதிஷ்டைபண்ணுங்கள் என்று மோசே சொல்லியிருந்தான்.

இந்த வசனத்தை நாம் தியானிக்கும் போது கர்த்தருக்கு உங்களை பிரதீஷ்டை பண்ணுங்கள் என்று மோசே சொல்லியிருந்தான்.  என்னவெனில் இருதய சிந்தையை சிதறடிக்காதபடி, நம்முடைய இருதயம் தேவனுடைய வாசஸ்தலம் ஆகும் என்பதற்காகவே தேவன் திருஷ்டாந்தப்படுத்துகிறார். இஸ்ரவேல் ஜனங்கள் தங்கள் ஆபரணங்களால் கன்றுக்குட்டியை செய்வித்ததின் காரணமாக ஆரோன் அவர்களை நிர்வாணமாக்கியிருந்தான்.  தேவனுடைய கட்டளைகள் தேவனுடைய கரத்தால் எழுதிக்கொடுத்தது வந்து சேருவதற்கு முன்னால் அவர்கள் உள்ளம் சாத்தானால் வஞ்சிக்கப்பட்டு விட்டது. மேலும் அவர்கள் கட்டளைகள் கைக்கொள்வதற்கு பதிலாக கன்றுக்குட்டியை கைக்கொள்கிறார்கள்.  

இதற்கு காரணம் என்னவென்றால் அவர்கள் எல்லாரும் தங்கள் ஆபரணங்களைப் போட்டிருந்தார்கள். அதனால் அவர்கள் அவ்விதமான பாவம் செய்ய வேண்டிய. நிலைமை வந்தது என்பது தெரிகிறது. அதனால் நம்முடைய தேவனாகிய கர்த்தர் 

யாத்திராகமம் 33: 1 – 4

கர்த்தர் மோசேயை நோக்கி: நீயும், எகிப்துதேசத்திலிருந்து நீ அழைத்துக்கொண்டுவந்த ஜனங்களும் இவ்விடத்தை விட்டுப் புறப்பட்டு, உன் சந்ததிக்குக் கொடுப்பேன் என்று நான் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் ஆணையிட்டுக்கொடுத்த பாலும் தேனும் ஓடுகிற தேசத்துக்குப் போங்கள்.

நான் ஒரு தூதனை உங்களுக்கு முன்பாக அனுப்பி, கானானியனையும் எமோரியனையும் ஏத்தியனையும் பெரிசியனையும் ஏவியனையும் எபூசியனையும் துரத்திவிடுவேன்.

ஆனாலும், வழியிலே நான் உங்களை நிர்மூலம்பண்ணாதபடிக்கு, நான் உங்கள் நடுவே செல்லமாட்டேன், நீங்கள் வணங்காக் கழுத்துள்ள ஜனங்கள் என்றார்.

துக்கமான இவ்வார்த்தைகளை ஜனங்கள் கேட்டபோது, ஒருவரும் தங்கள் ஆபரணங்களைப் போட்டுக்கொள்ளாமல் துக்கித்துக்கொண்டிருந்தார்கள்.

மோசேயிடம் நீயும் எகிப்திலிருந்து அழைத்து  வந்த ஜனங்களும் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் ஆணையிட்டு கொடுத்த பாலும் தேனும் ஓடுகிற தேசத்துக்கு போங்கள் என்றும் நான் என் தூதனை உங்களுக்கு முன்பாக அனுப்பி அங்குள்ள ஜாதிகளை துரத்துவேன்  என்கிறார். முன்பாக என் தூதனை அனுப்புவேன்  என்று தேவன் சொன்னவர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து.  ஆனால் தேவன் இஸ்ரவேல் ஜனங்கள் இவ்வளவு பெரிய பாவம் செய்ததின்  காரணம் கோபமுடையவராயிருந்தும் ஜனங்கள் மேலும் கர்த்தருடைய தூதனாகிய கிறிஸ்து அங்கு இரக்கமுடையவராக வெளிப்படுகிறார். இங்கு கிறிஸ்து உள்ளத்தில்  வெளிப்படுவார் என்பதை தேவன் திருஷ்டாந்தப்படுத்துகிறார். இவ்விதமாக நாம் எவ்வளவோ தேவனுக்கு விரோதமாக நாம் துரோகம்  செய்தும் நாம் அழிந்து போகிறதை அவர் விரும்பாமல் இரக்கமுடையவராயிருக்கிறதை பார்க்கிறோம். நாம் நிர்மூலமாகிறதை தேவன் விரும்பாமல் நமக்காக கிறிஸ்துவை நம்முடைய பாவத்திற்காக ஒப்புக்கொடுத்து, பின்பு என்றென்றும் உயிரோடிருக்கிறவராகவும் செய்து, நம்மையும் அவரோடுக்கூட என்றென்றும் பிழைத்திருத்திருக்கும்படியாக செய்கிறார்.

இவ்விதமாக நாம் பிழைத்திருக்கும்படி ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம். கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

 -தொடர்ச்சி நாளை.