தேவனுக்கே மகிமையுண்டாவதாக
ஓசியா 14:2
வார்த்தைகளைக்கொண்டு கர்த்தரிடத்தில் திரும்புங்கள்; அவரை நோக்கி: தேவரீர் எல்லா அக்கிரமத்தையும் நீக்கி, எங்களைத் தயவாய் அங்கீகரித்தருளும்; அப்பொழுது நாங்கள் எங்கள் உதடுகளின் காளைகளைச் செலுத்துவோம்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
ஆசரிப்புக்கூடாரமாகிய மணவாட்டி சபையில் கர்த்தருக்கு பலிச்செலுத்துதல்
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபை மகிமை இழந்து போகாமல் இருக்கும்படி நாம் எப்படி நடந்துக் கொள்ளவேண்டும் என்பதனையும், அப்படி நடந்தால் மாத்திரமே தேவன் நம்முடைய விசுவாச யாத்திரையில் மேகத்தின் மறைவிலே மகிமையாய் நடத்தி செல்கிறார் என்பதனை குறித்து தியானித்தோம். இவ்விதமாக தேவனோடு நாம் ஐக்கியப்படுவதற்கு அடுத்து நாம் தியானிக்க போகிற காரியம் என்ன வென்றால் நாம் எப்படி தேவனுக்கு ஆராதனை செய்ய வேண்டும் என்பதனை திருஷ்டாந்தத்தோடு விளக்கிக் காட்டுகிறார். எப்படியெனில்
லேவியராகமம் 1:1-3
கர்த்தர் ஆசரிப்புக் கூடாரத்திலிருந்து மோசேயைக் கூப்பிட்டு, அவனை நோக்கி:
நீ இஸ்ரவேல் புத்திரரிடத்தில் சொல்லவேண்டியது என்னவென்றால், உங்களில் ஒருவன் கர்த்தருக்குப் பலிசெலுத்த வந்தால்,மாட்டுமந்தையிலாவது ஆட்டுமந்தையிலாவது ஒரு மிருகத்தைத் தெரிந்தெடுத்து, பலிசெலுத்தவேண்டும்.
அவன் செலுத்துவது மாட்டுமந்தையிலிருந்து எடுக்கப்பட்ட சர்வாங்க தகனபலியானால், அவன் பழுதற்ற ஒரு காளையைச் செலுத்துவானாக; கர்த்தருடைய சந்நிதியில் தான் அங்கிகரிக்கப்படும்படி, அவன் அதை ஆசரிப்புக் கூடார வாசலில் கொண்டுவந்து,
இந்த வசனங்களில் நாம் கர்த்தருக்கு பலிச் செலுத்துவதைக் குறித்து சொல்கிறது என்னவென்றால் மாட்டு மந்தையிலாவது,ஆட்டு மந்தையிலாவது ஒரு மிருகத்தைத் தெரிந்துக்கொண்டு பலிசெலுத்த வேண்டும் ஆட்டு மந்தை, மாட்டு மந்தை என்று கர்த்தர் சொல்வது என்னவென்றால் எல்லா மனுஷர்களின் உள்ளமும் பலபல சுபாவங்கள் நிறைந்ததாக இருக்கும். அதில் நல்ல சுபாவமும், கெட்ட சுபாவமும் ஆகிய இரண்டும் உண்டு. அதைத்தான் நீதிமான் என்றும் துன்மார்க்கன் என்றும் எழுதப்பட்டிருக்கிறது.
உலகத்தில் நாம் பார்க்கும் போது, அநேக தேவனுடைய ஊழியக்காரர்களானாலும் சரி, மற்றும் விசுவாசிகளானாலும் சரி வேதப்புஸ்தகத்தை எடுத்தவர்களாகிய விசுவாசிகள் என்று சொல்லப்படுகிறவர்கள் எல்லாரும் நல்லவர்களும், உத்தமர்களும் நீதிமான்களாய் இருக்கிறோம் என்று நினைக்கிறோம், அது மிகவும் தவறு. ஒரு மனுஷனை நாம் பார்க்கும் போது அவன் உள்ளம் சமுத்திரத்தை காட்டிலும் ஆழமானது. எந்த மனுஷனுக்கும் யாருடைய உள்ளத்தையும் அலசி ஆராய்ந்து வரமுடியாது. அலசி ஆராய்கிற ஒருவர் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. அதனால் நமக்கு யாரையும் தீர்ப்பு சொல்ல முடியாது. ஏனென்றால்
நீதிமொழிகள் 24:23-25
பின்னும் ஞானமுள்ளவர்களின் புத்திமதிகள் என்னவெனில்: நியாயத்திலே முகதாட்சிணியம் நல்லதல்ல.
துன்மார்க்கனைப் பார்த்து: நீதிமானாயிருக்கிறாய் என்று சொல்லுகிறவனை ஜனங்கள் சபிப்பார்கள், பிரஜைகள் அவனை வெறுப்பார்கள்.
அவனைக் கடிந்துகொள்ளுகிறவர்கள்மேல் பிரியமுண்டாகும், அவர்களுக்கு உத்தம ஆசீர்வாதம் கிடைக்கும்.
தேனுடைய வார்த்தை என்ன சொல்லுகிறதென்றால் நீதி என்பது கிறிஸ்து, அநீதி என்பது உலகமாகிய பிசாசு. பிசாசின் கிரியைகளை அழிக்கும் படியாகவே தேவக்குமாரன் உலகிற்கு வந்தார் என்பதை தேவன் திருஷ்டாந்தப்படுத்தி, நம்முடைய உள்ளத்தில் உலகத்தை வைத்து, உள்ளத்தில் இருக்கிற உலகத்தின் அநீதியாகிய பிசாசின் கிரியைகளை தேவனுடைய வசனமான தேவக்குமாரனை நம்முடைய உலகமாகிய உள்ளத்தில் அனுப்பி, வசனமாகிய அக்கினியால் சுட்டெரித்து, நம்முடைய ஆத்துமாவை உயிர்ப்பின் ஆவியினால் உயிர்ப்பித்து, இவ்வாறு ஒவ்வொருவரிலும் அநீதியை மாற்றி நீதியின் விளைச்சலை நம்முடைய ஆத்துமாவிற்குள் வர்த்திக்க செய்து, அதற்கேற்ற நற்பலனை அடையும்படி கிருபை தருகிறார். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நீதிமானாய் இருக்கிறபடியினால் நம்மில் அநீதியை கொஞ்சம் கொஞ்சமாக அவருடைய வசனமாகிய பட்டயத்தினால் சங்கரித்து நம்மை நீதிமான்களாக மாற்றுகிறார். அதைக்குறித்து எசேக்கியல் தீர்க்கதரிசியினிடத்தில் நம்முடைய தேவன் திருஷ்டாந்தப்படுத்தும்படியாக, தீர்க்கதரிசனம் சொல்கிறது
என்னவென்றால் எசேக்கியல் 21:1-5
அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
மனுபுத்திரனே, நீ உன் முகத்தை எருசலேமுக்கு நேராகத் திருப்பி, பரிசுத்த ஸ்தலங்களுக்கு விரோதமாக உன் வசனத்தைப் பொழிந்து, இஸ்ரவேல் தேசத்துக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் உரைத்து,
இஸ்ரவேல் தேசத்தை நோக்கி, கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால்: இதோ, நான் உனக்கு விரோதமாக வந்து, என் பட்டயத்தை அதின் உறையிலிருந்து உருவி, உன்னில் சன்மார்க்கனையும் துன்மார்க்கனையும் சங்காரம்பண்ணுவேன்.
நான் உன்னில் சன்மார்க்கனையும் துன்மார்க்கனையும் சங்காரம்பண்ணப்போகிறபடியினால் தெற்குதுவக்கி வடக்குமட்டுமுள்ள எல்லா மாம்சத்துக்கும் விரோதமாய் என் பட்டயம் அதின் உறையிலிருந்து புறப்படும்.
அப்பொழுது கர்த்தராகிய நான் என் பட்டயத்தை அதின் உறையிலிருந்து உருவினேன் என்பதை எல்லா மாம்சமும் அறியும்; அது இனி உறைக்குள் திரும்புவதில்லை.
இந்த வார்த்தைகளை தியானிக்கும் போது உன்னில் சன்மார்க்கனையும் துன்மார்க்கனையும் சங்காரம் பண்ணுவேன் என்றுச்சொல்கிறார். நம்முடைய உள்ளத்திற்குள் தேவன் இந்த காரியங்களை செய்கிறார். துன்மார்க்கம் என்பது உலகத்திற்குரிய சிந்தைகள். சன்மார்க்கம் என்பது துன்மார்க்கத்திற்கு தூண்டி விடுகிற ஒருவகை பொல்லாங்கன். அதனால் தேவன் ஒரு மனுஷனுடைய உள்ளத்தில் இரண்டையும் சேரத்து அவருடைய பட்டயத்தினால் அழிக்கிறார். அதனை எப்படி செய்கிறாரென்று சொன்னால்
எசேக்கியல் 21:6-7
ஆதலால் மனுபுத்திரனே, உன் இடுப்பு நொறுங்கும்படி பெருமூச்சுவிடு; அவர்கள் கண்களுக்கு முன்பாக மனங்கசந்து பெருமூச்சுவிடு.
நீ எதினிமித்தம் பெருமூச்சுவிடுகிறாய் என்று அவர்கள் உன்னிடத்தில் கேட்டால், நீ அவர்களை நோக்கி: துர்ச்செய்தி வருகிறதினிமித்தமே; அதினால், இருதயங்களெல்லாம் உருகி, கைகளெல்லாம் தளர்ந்து, மனமெல்லாம் தியங்கி, முழங்கால்களெல்லாம் தண்ணீரைப்போல அலைவுண்ணும்; இதோ, அது வந்து சம்பவிக்கும் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.
இதனை நாம் தியானிக்கும் போது தேவனுடைய பட்டயம் அவருடைய உறையிலிருந்து உருவப்பட்டால் அது நம்மை நியாயந்தீர்த்து முடியும் வரையிலும் உறையில் போடுவதில்லை. அதனை நம்மளால் சகித்து வர மிகவும் கஷ்டமாயிருக்கும். இவ்விதம் நம்மில் அநேகருடைய வாழ்க்கையில் இருந்தாலும் நமக்கு உணர்வு வருவதில்லை. மாம்ச கிரியைகளை அழிக்க மாட்டோம். அதற்கு காரணம் என்னவென்றால் உள்ளத்தில் இருக்கிற அகங்காரம். அதனால் கர்த்தர் சொல்கிறார்
எசேக்கியல் 21:8-13
கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
மனுபுத்திரனே, நீ தீர்க்கதரிசனம் உரைத்து, சொல்லவேண்டியது என்னவென்றால்: பட்டயம் கூர்மையாக்கப்பட்டது, பட்டயம் கூர்மையாக்கப்பட்டது; அது துலக்கப்பட்டுமிருக்கிறது.
மகா சங்காரஞ்செய்வதற்கு அது கூர்மையாக்கப்பட்டிருக்கிறது; மின்னத்தக்கதாய் அது துலக்கப்பட்டிருக்கிறது; சந்தோஷப்படுவோமோ? அது என் குமாரனுடைய கோல், அது சகல விருட்சங்களையும் அலட்சியம்பண்ணும்.
அதைக் கையாடும்படி அதைத் துலக்கக் கொடுத்தார்; கொல்லுகிறவன் கையிலே கொடுக்கும்படி அந்தப் பட்டயம் கூர்மையாக்கப்பட்டிருக்கிறது; அது துலக்கப்பட்டதுமாயிருக்கிறது என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல்.
மனுபுத்திரனே, நீ ஓலமிட்டு அலறு; பட்டயம் என் ஜனத்தின்மேல் வரும்; அது இஸ்ரவேல் பிரபுக்கள் எல்லார்மேலும் வரும்; அதினிமித்தம் என் ஜனத்துக்குள்ளே திகில் உண்டாயிருக்கும்; ஆகையால் உன் விலாவிலே அடித்துக்கொள்.
யாவையும் கண்டிக்கிற கோல் வந்தாலொழிய இனிச் சோதனையினால் தீருகிறதென்னவென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
ஆதலால் பிரியமானவர்களே சன்மார்க்கம் துன்மார்க்கமும் நம்முடைய கிறிஸ்தவ வாழ்வில் இல்லாதபடி நாம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.
மேலும் நீதிமொழிகள் 28:28
துன்மார்க்கர் எழும்பும்போது மனுஷர் மறைந்துகொள்ளுகிறார்கள்; அவர்கள் அழியும்போதோ நீதிமான்கள் பெருகுகிறார்கள்.
இதனன வாசிக்கிற அன்பானவர்ளே நம் உள்ளத்தில் இருக்கிற அநீதியான எண்ணங்கள் அழிந்தால் மட்டுமே நீதியான கிரியைகள் பெருகிக்கொண்டிருக்கும். அல்லாமலும் நாம் தியானிக்கும் போது
பிரசங்கி 8:10-13
பரிசுத்த ஸ்தலத்துக்குப் போக்குவரவு செய்த துன்மார்க்கர் அடக்கம்பண்ணப்பட்டதைக் கண்டேன்; அவர்கள் அப்படிச் செய்து வந்த பட்டணத்திலேயே மறக்கப்பட்டுப்போனார்கள்; இதுவும் மாயையே.
துர்க்கிரியைக்குத் தக்க தண்டனை சீக்கிரமாய் நடவாதபடியால், மனுபுத்திரரின் இருதயம் பொல்லாப்பைச் செய்ய அவர்களுக்குள்ளே துணிகரங்கொண்டிருக்கிறது.
பாவி நூறுதரம் பொல்லாப்பைச் செய்து நீடித்து வாழ்ந்தாலும் என்ன? தேவனுக்கு அஞ்சி, அவருக்கு முன்பாகப் பயந்திருப்பவர்களே நன்றாயிருப்பார்கள் என்று அறிந்திருக்கிறேன்.
துன்மார்க்கனோ நன்றாயிருப்பதில்லை; அவன் தேவனுக்கு முன்பாகப் பயப்படாதிருக்கிறபடியால், நிழலைப்போலிருக்கிற அவனுடைய வாழ்நாள் நீடித்திருப்பதுமில்லை.
மேற்க்கூறப்பட்ட வசனங்களை தியானிக்கும் போது பரிசுத்த ஸ்தலத்திற்கு என்று தேவனிடத்தில் பெயர் பதித்தவர்கள், தங்கள் வாழ்வில் துன்மார்க்கம் சீக்கிரத்தில் மாற்றப்படாமல் இருந்த காரணத்தால் அவர்கள் வாழ்ந்த பட்டணத்திலேயே கர்த்தர் அவர்களை மறந்து விட்டார் என்று பிரசங்கி தேவ வசனம் எழதியிருக்கிறதை பார்க்கிறோம்.
ஆதலால் பிரயமானவர்களே இந்த நாட்களில் தியானிக்கிற வேதப்பகுதியில் நம்முடைய உள்ளத்தில் மேற்க்கூறிய சன்மார்க்கம் துன்மார்க்கம் என்று சொல்வதற்கு திருஷ்டாந்தம் தான் ஆட்டு மந்தை மாட்டு மந்தை, இவற்றிலிருந்து ஒரு மிருகத்தை தெரிந்தெடுத்து பலிச் செலுத்த வேண்டும் என்று கர்த்தர் சொல்வது நம்முடைய ஆத்துமாவின் செயல்பாடுகளைக் குறித்து தேவன் சொல்கிறார். ஒரு உள்ளத்தில் அநேக ஜனனங்கள் உண்டு. அவைகள் மிருகங்கள், பலவித பறவைகள் இவைகளின் பொல்லாத சுபாவங்கள் உண்டாயிருக்கும். அவற்றில் பொல்லாதவைகளை அழிக்கும்படியாக நாம் தேவ சத்தம் கேட்டு நம் ஆத்துமாவை ஒப்புக் கொடுப்பது தான் பலிச்செலுத்துதல். இவ்விதமாக ஒப்புக்கொடுக்க தேவன் திருஷ்டாந்தப்படுத்துவது தான் ஆட்டுமந்தை, மாட்டு மந்தையிலிருந்து பழுதற்றதை செலுத்த வேண்டும் என்று எழுதப்பட்டிருக்கிறது. இப்படியாக நாம் துன்மார்க்க கிரியைகள் மாற நாம் ஒப்பு்கொடுப்போம்.
ஜெபிப்போம். கர்த்தர் ஆசீர்வதிப்பார். கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.