தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 106: 48

இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அநாதியாய் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்படத்தக்கவர். ஜனங்களெல்லாரும்: ஆமென், அல்லேலூயா என்பார்களாக.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.    அல்லேலுயா.

மணவாட்டி சபை கிறிஸ்து மூலம் எவ்விதம் கர்த்தருக்கு பலி செலுத்த வேண்டும்?

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், ஆசரிப்புக்கூடாரமாகிய மணவாட்டி சபையில் கர்த்தருக்கு பலிச் செலுத்துதலைக் குறித்து, அவை எப்படி என்றும், அவை எவ்விதம்ச் செலுத்த வேண்டும் என்றும், எதற்காக செலுத்துகிறோம் என்றும் தியானித்தோம். மேலும் திருஷ்டாந்தத்தோடு தேவன் நமக்கு விளக்கியது எப்படியென்றால், நம்மிடத்தில் இருக்கிற பொல்லாத சுபாவங்களாகிய மிருக சுபாவங்கள் நிமித்தம் நம்முடைய உள்ளத்தில் சன்மார்க்க துன்மார்க்கச் செயல்கள், நீதியின் விளைச்சலை வர்த்திக்க விடாதப்படி தடுக்கும்

அதைத்தான் நீதிமொழிகள்: 28:28

துன்மார்க்கர் எழும்பும்போது மனுஷர் மறைந்துகொள்ளுகிறார்கள்; அவர்கள் அழியும்போதோ நீதிமான்கள் பெருகுகிறார்கள்.

ஆனால் நீதிமொழிகள் 29:2

நீதிமான்கள் பெருகினால் ஜனங்கள் மகிழுவார்கள்; துன்மார்க்கர் ஆளும்போதோ ஜனங்கள் தவிப்பார்கள்.

மேலும் நாம் சிந்திக்கும்படி நீதிமொழிகள் 29:16

துன்மார்க்கர் பெருகினால் பாவமும் பெருகும்; நீதிமான்களோ அவர்கள் விழுவதைக் காண்பார்கள்.

அதனால் கர்த்தர் நம்முடைய ஆத்துமாவில் இருக்கிற துன்மார்க்க சிந்தைகளை அகற்றும்  படியாகவே தேவன் திருஷ்டாந்தத்திற்கு பழைய ஏற்ப்பாட்டில்  இஸ்ரவேல் ஜனங்களிடத்தில் மாட்டு மந்தையிலாவது ஆட்டு மந்தையிலாவது ஒரு மிருகத்தை தெரிந்தெடுத்து பலிச் செலுத்த வேண்டும் என்று சொல்கிறார்.  ஆனால் சர்வாங்க தகனபலியானால் பழுதற்ற ஒரு காளையை செலுத்த சொல்கிறார்.  ஆனால் பலி செலுத்துகிற விதத்தை குறித்து தேவன் சொல்கிறது அது அங்கிகரிக்கப்படும்படி அதனை ஆசரிப்புக கூடார வாசலில் கொண்டு வரவேண்டும் என்று சொல்கிறார். 

மேலும் லேவி 1:4-9

அது தன் பாவநிவிர்த்திக்கென்று அங்கிகரிக்கப்படும்படி தன் கையை அதின் தலையின்மேல் வைத்து,

கர்த்தருடைய சந்நிதியில் அந்தக் காளையைக் கொல்லக்கடவன்; அப்பொழுது ஆரோனின் குமாரராகிய ஆசாரியர்கள் அதின் இரத்தத்தை எடுத்து, அதை ஆசரிப்புக் கூடாரவாசலில் இருக்கிற பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்கக்கடவர்கள்.

பின்பு அவன் அந்தச் சர்வாங்க தகனபலியைத் தோலுரித்து, அதைச் சந்துசந்தாகத் துண்டிக்கக்கடவன்.

அப்பொழுது ஆசாரியனாகிய ஆரோனின் குமாரர் பலிபீடத்தின்மேல் அக்கினியைப்போட்டு, அக்கினியின்மேல் கட்டைகளை அடுக்கி,

அவன் குமாரராகிய ஆசாரியர்கள், துண்டங்களையும் தலையையும் கொழுப்பையும் பலிபீடத்திலுள்ள அக்கினியில் இருக்கிற கட்டைகளின்மேல் அடுக்கிவைக்கக்கடவர்கள்.

அதின் குடல்களையும் தொடைகளையும் அவன் தண்ணீரினால் கழுவுவானாக; அவைகளையெல்லாம் ஆசாரியன் பலிபீடத்தின்மேல் சர்வாங்க தகனபலியாகத் தகனிக்கக்கடவன்; இது கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலி.

ஆசரிப்புக்கூடாரத்தின் வாசல் என்று சொல்வது,  வாசல் என்பது கிறிஸ்து.   ஏனெனில் நாம் யாவரும் கிறஸ்து மூலம் தான்  தேவனிடத்தில் நம்முடைய பாவங்களுக்காக ஒப்புரவாக முடியும்.  அதைத்தான் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சொல்கிறார் யோவான் 10:9,10  

நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும் சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான்.

திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்.

வசனங்கள் சொல்கிறது என்னவென்றால் இயேசு கிறிஸ்துவின் வழியாக நாம் நம்முடைய பாவங்களுக்காக மரிப்போமானால் உள்ளும், புறம்பும்  நல்ல மேய்ச்சலை கண்டடைய முடியும். கிறிஸ்து நம்மை ஆசீர்வதித்து, நம்முடைய பாவத்துக்காக  நம்முடைய பழைய ஆத்துமாக் கிறிஸ்துவோடுக்கூடக் கொல்லப்பட்டு, நம்முடைய ஒவ்வொரு அவயவத்தின் பாரம்பரிய செயல்கள் எல்லாம் அக்கினியில் தகித்து சுட்டெரித்து. கிறிஸ்துவோடுக்கூட உயிர்ப்பிக்கப்பட்டால் அவருடைய இரத்தத்தினால் அவருடைய ஜீவன் நமக்குள் பிரவேசித்து நம்முடைய ஆத்துமாவில் ஜீவன் தந்து நம்மை பரிபூரணபடவும் செய்கிறார்.  அதனால் தேவனுடைய வார்த்தையில்  காளையின் இரத்தத்தை ஆசரிப்புக் கூடாரத்தில் பலிபீடத்தின் மேல் சுற்றிலும் தெளிக்கக்கடவர்கள் என்று எழுதப்பட்டிருக்கிறது.  இவற்றை தேவன் நமக்கு திருஷ்டாந்தப்படுத்தி, இவை கர்த்தருக்கு சுகந்த வாசனையான தகனபலி என்று எழுதப்பட்டிருக்கிறது.    இவ்விதமாக மூன்று காரியங்களை தேவன் நமக்கு சர்வாங்க தகனபலியாக திருஷ்டாந்தப்படுத்தி, இவை கர்த்தருக்கு சுகந்த வாசனையான பலி என்று சொல்கிறதைப் பார்க்கிறோம். இவற்றில் மூன்று விதமானவைகளை ஒன்றாக ஒப்புமைப்படுத்துகிறார்.  அவை முதலில் மாட்டு மந்தையிலிருந்து காளையும், ஆட்டு மந்தையிலிருந்து  ஆட்டு கடாவையும், பின்பு புறா குஞ்சையும், நமக்கு விளக்கி காட்டுகிறாரானால், நம்முடைய பாவம் சாபம் அக்கிரமம் என்பவைகளுக்காக த்ரியேக தேவன் (பிதா குமாரன் பரிசுத்த ஆவி) நம்மோடுக்கூட மரிக்கிறார் என்பதை தெளிவுப்படுத்துகிறது.  

அவற்றைக் குறித்து எசேக்கியல் 21:13-17

யாவையும் கண்டிக்கிற கோல் வந்தாலொழிய இனிச் சோதனையினால் தீருகிறதென்னவென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

ஆகையால் மனுபுத்திரனே, நீ தீர்க்கதரிசனம் சொல்லி, கையோடே கைகொட்டு; பட்டயம் மூன்றுதரம் இரட்டித்துவரும்; அது கொலையுண்டவர்களின் பட்டயம்; அது கொலையுண்ணப்போகிற பெரியவர்களின் உள்ளறைகளில் பிரவேசிக்கிற பட்டயம்.

அவர்களுடைய இருதயம் கரைந்து, அவர்களுடைய இடையூறுகள் திரளாகும்படி, பட்டயத்தின் கூர்மையை அவர்களுடைய எல்லா வாசல்களுக்கும் நேரிடக் கட்டளையிடுவேன்; ஆ, அது மின்னும்படியாகப் பதமிடப்பட்டது, வெட்டும்படியாகத் தீட்டிவைக்கப்பட்டது.

ஏகபலமாய் வலதுபுறமாக வெட்டு, திரும்பி இடதுபுறமாகவும் வெட்டு; உன் முகம் திரும்புகிற திக்கெல்லாம் வெட்டு.

நானும் கையோடே கைகொட்டி, என் உக்கிரத்தை ஆறப்பண்ணுவேன் என்று கர்த்தராகிய நான் சொன்னேன் என்றார்.

மனுஷர்களுக்குள் பாவம், அக்கிரமம் பெருகுகிறதினால் யாவரையும் பட்சபாதம் இல்லாமல் கண்டிக்கிற கோல் வந்தாலொளிய இவை தீராது என்று சொல்கிறார். அந்த கோல் குமாரன். அவர் கையில் பட்டயம் துலக்கப்பட்டிருக்கிறது. அது சகல விருட்சங்களையும் அலட்சியம் பண்ணும். அவர் பட்சபாதம் இல்லாமல் கிறிஸ்துவின் வசனமாகிய பட்டயம் யாவரையும் நியாயந்தீர்க்கும்.  அவற்றைக் குறித்து  மேலும் நாம் முந்தின வசனங்களில தியானிப்பது என்னவென்றால் கிறிஸ்துமூலம் நாம் தேவனிடத்தில் சேரமுடியும்.  

அதைக்குறித்துத்தான் எபிரெயர் 1:8-16  

குமாரனை நோக்கி: தேவனே, உம்முடைய சிங்காசனம் என்றென்றைக்குமுள்ளது, உம்முடைய ராஜ்யத்தின் செங்கோல் நீதியுள்ள செங்கோலாயிருக்கிறது.

நீர் நீதியை விரும்பி, அக்கிரமத்தை வெறுத்திருக்கிறீர்; ஆதலால், தேவனே, உம்முடைய தேவன் உமது தோழரைப்பார்க்கிலும் உம்மை ஆனந்த தைலத்தினால் அபிஷேகம்பண்ணினார் என்றும்;

கர்த்தாவே, நீர் ஆதியிலே பூமியை அஸ்திபாரப்படுத்தினீர்; வானங்கள் உம்முடைய கரத்தின் கிரியைகளாயிருக்கிறது;

அவைகள் அழிந்துபோம்; நீரோ நிலைத்திருப்பீர்; அவைகளெல்லாம் வஸ்திரம்போலப் பழைமையாய்ப்போம்;

ஒரு சால்வையைப்போல அவைகளைச் சுருட்டுவீர், அப்பொழுது மாறிப்போம்; நீரோ மாறாதவராயிருக்கிறீர், உம்முடைய ஆண்டுகள் முடிந்துபோவதில்லை என்றும் சொல்லியிருக்கிறது.

மேலும், நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப்போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்று தூதர்களில் யாருக்காவது எப்போதாகிலும் அவர் சொன்னதுண்டா?

இரட்சிப்பைச் சுதந்தரிக்கப்போகிறவர்களினிமித்தமாக ஊழியஞ்செய்யும்படிக்கு அவர்களெல்லாரும் அனுப்பப்படும் பணிவிடை ஆவிகளாயிருக்கிறார்களல்லவா?

ஆதலால் பிரியமானவர்களே, கர்த்தர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்தான். ஆதலால் கிறிஸ்து நமக்காக த்ரியேக தேவனாக பலியாகிறார் என்பதை தேவனுடைய பிரமாணப்புஸ்தகம் திருஷ்டாநதப்படுத்தி நம்முடைய உள்ளத்தில் தேவனுடைய ராஐ்யத்தை  நிலைநாட்டுகிறார். ஆதலால் கிறிஸ்துவினால் நம் ஆத்துமா உள்ளத்தில் உயிர்ப்பிக்கப்படடு, பின்பு நம் ஒவ்வொருவருடைய  உள்ளம்தான் தான், தேவனுக்கு ஸ்தோத்திரபலியை செலுத்த வேண்டும்.  

அதனால்தான் சங்கீதம் 50:23

ஸ்தோத்திர பலியிடுகிறவன் என்னை மகிமைப்படுத்துகிறான்; தன் வழியைச் செவ்வைப்படுத்துகிறவனுக்கு தேவனுடைய இரட்சிப்பை வெளிப்படுத்துவேன் என்று சொல்லுகிறார்.

இவ்விதமாக நாம் யாவரும் ஸ்தோத்திரபலியிட்டு தேவனை மகிமைப்படுத்தி தேவனுடைய இரட்சிப்பை பெற்றுக்கொள்வோம். ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.     கர்த்தர் ஆசீர்வதிப்பார். கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

 -தொடர்ச்சி நாளை.