தேவனுக்கே மகிமையுண்டாவதாக

யோவான் 6: 27

அழிந்துபோகிற போஜனத்திற்காக அல்ல, நித்தியஜீவன்வரைக்கும் நிலைநிற்கிற போஜனத்திற்காகவே கிரியை நடப்பியுங்கள்; அதை மனுஷகுமாரன் உங்களுக்குக் கொடுப்பார்; அவரைப் பிதாவாகிய தேவன் முத்திரித்திருக்கிறார் என்றார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.     அல்லேலுயா.

போஜனபலியாக நம்முடைய ஆத்துமா அறுவடைக்காக நம்மை சுத்தம் செய்து ஆயத்தப்படுத்தி தேவனிடத்தில் ஒப்படைத்தல்

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், நாம் கர்த்தருக்கு பலிபீடத்தின் மேல் போஜனபலி செலுத்துவது குறித்து தியானித்தோம்.  தியானித்த பகுதியில் போஜனபலி என்பது நம்முடைய ஆத்துமாவின் அறுவடையை குறித்துச் சொல்கிறார்.  நாம் நம்முடைய ஆத்துமாவில் உள்ள நற்பலனை தேவன் உட்கொள்ளும்படியாக அவர் தம்முடைய குமாரனை பரிபூரண கிருபையுள்ளவராக நம்மிடத்தில் அனுப்பும் போது, அவர் பாவத்தைகுறித்தும், நீதியை குறித்தும், நியாயத்தீர்ப்பை குறித்தும் கண்டித்து உணர்த்துகிறார்

இவ்விதமாக கண்டித்து உணர்த்தும்போது, தங்களில் அநேகம் பேர் தங்கள் பாவம் அக்கிரமம் உணர்ந்து மனந்திரும்பி பாவமன்னிப்பு பெற்று, முந்தின நாளில் நாம் தியானித்துப்போல், தங்களில் இருந்த பொல்லாத சுபாவங்களை எல்லாம் கிறிஸ்துவினிடத்தில் அறிக்கைப்பண்ணி, பின்பு தங்கள் ஆத்துமாவை முழுமையும் ஒப்புக்கொடுத்து வரும்போது, அந்த ஆத்துமாவில்  உள்ள நற்பலனை நம் தேவன் புசிக்கும்படியாக, கிறிஸ்துவின் பலிபீடமாகிய களத்தில் அதனை நன்றாய் விளக்கி, நம்முடைய உள்ளத்தில் எவ்வளவு உலகமாகிய பதர் இருக்கிறது என்பதை தனியே வேறுப்படுத்திக் கொண்டு கோதுமையை அவருடைய களத்தில் சேர்க்கிறார்.  அப்படி சேர்க்கப்பட்ட ஆத்துமா பின்பு எப்படி ஆயத்தம் செய்ய வேண்டும் என்பதனை நாம்  சிலகாரியங்கள் மட்டும் தியானித்தோம். 

நாம் கர்த்தருக்கு பலிபீடத்தின் மேல் போஜனபலி செலுத்துவது குறித்து தியானித்தோம். மேலும் நம்முடைய ஆத்துமாவாகிய மணவாட்டி சபை எவ்விதம் மணவாளனாகிய கிறிஸ்துவோடு ஐக்கியப்படுவதற்கு, எவ்விதம் பக்குவபடவண்டும் என்பதை லேவியராகமம் புஸ்தகத்தில் திருஷ்டாந்தப்படுத்தியிருக்கிறது.  அவற்றில் நம்முடைய ஆத்துமாவின் பக்குவபடுத்துதலைக் குறித்தும், தேவனிடத்தில் ஒப்புக்கொடுத்துதலைக் குறித்தும் சொல்லப்படுகிறது என்னவென்றால்  முதலில் அடுப்பில், தட்டையான சட்டி, பொரிக்கும் சட்டி, இவ்விதம் மூன்று விதமான பக்குவபடுத்துதலை தேவன் நமக்கு திருஷ்டந்தப்படுத்துகிறார்.  

இதனை நாம் சிந்திக்கும் போது  தேவனுடைய வார்த்தைகளாகிய ஆகமங்கள், தீர்க்கதரிசிகள் மூலம் தேவன் நம்மோடு பேசிய வார்த்தைகளை நம் உள்ளத்தில் ஏற்றுக்கொண்டவர்களாகவும், பின்பு கர்த்தராகிய இயேசுக் கிறிஸ்து நமக்கு செய்துகாட்டிய மாதிரியின்படி செய்கிறவர்களாகவும், மேலும் மூன்றாவது என்று எழுதப்பட்டிருப்பது பரிசுத்த ஆவியானவரால் நாம் அபிஷேகம் பண்ணப்பட்டு தேவனுக்கு ஸ்தோத்திரபலியிட்டு அவரை நாம் மகிமை படுத்தும் போது,  நம்முடைய ஆத்துமாவை தேவனுக்கு முன்பாக ஒப்புக்கொடுக்கிறோம்.  அப்படி நாம் செய்யும் போது நம்மிடத்தில் எல்லா செயல்களும் நற்கிரியைகளாகிய நல்ல கனிகளாக இருக்குமானால் அதனை அவர் புசித்து (ஏற்றுக் கொண்டு)நம்மை தேவராஜ்யத்திற்கு தகுதியாக்குகிறார்.   இவற்றைக்குறித்து தேவன் நமக்கு காட்டிய விளக்கம் என்னவெனில் 

லூக்கா 24:41-44

ஆனாலும் சந்தோஷத்தினால் அவர்கள் இன்னும் விசுவாசியாமல் ஆச்சரியப்படுகையில்: புசிக்கிறதற்கு ஏதாகிலும் இங்கே உண்டா என்று அவர்களிடத்தில் கேட்டார்.

அப்பொழுது பொரித்த மீன்கண்டத்தையும் தேன்கூட்டுத் துணிக்கையையும் அவருக்குக் கொடுத்தார்கள்.

அவைகளை அவர் வாங்கி அவர்களுக்கு முன்பாகப் புசித்து,

அவர்களை நோக்கி: மோசேயின் நியாயப்பிரமாணத்திலும் தீர்க்கதரிசிகளின் ஆகமங்களிலும் சங்கீதங்களிலும் என்னைக்குறித்து எழுதியிருக்கிறவைகளெல்லாம் நிறைவேறவேண்டியதென்று, நான் உங்களோடிருந்தபோது உங்களுக்குச் சொல்லிக்கொண்டுவந்த விசேஷங்கள் இவைகளே என்றார்.

நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உயிர்தெழுந்த பின்பு சீஷர்களுக்கு தன்னை காண்பிக்கையில் சீஷர்களிடம் புசிக்கிறதற்கு ஏதாகிலும் இங்கே உண்டா என்று கேட்கிறார். அப்பொழுது அவர்கள் பொரித்த மீன் கண்டத்தையும், தேன் கூட்டு துணிக்கையையும் அவருக்குக் கொடுத்தார்கள்.  அவைகளை அவர் வாங்கி அவர்களுக்கு முன்பாக புசித்தார்கள். இவ்விதம் கிறிஸ்து நமக்கு காட்டிய திருஷ்டாந்தம் என்னவென்றால் நம் ஆத்துமா சரியாக தேவனுக்காக பக்குவப்படுத்துவதை காட்டுகிறார். நாம் தேனுக்காக பக்குவப்பட்டால் மட்டுமே கர்த்தர் நம்மை ஏற்றுக்கொள்வார். அல்லாமலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து  நம்மை எப்படி தேவ ராஜ்யத்திற்காக  ஆயத்தப்படுத்துகிறாரென்றால் 

யோவான் 21:5-13

இயேசு அவர்களை நோக்கி: பிள்ளைகளே, புசிக்கிறதற்கு ஏதாகிலும் உங்களிடத்தில் உண்டா என்றார். அதற்கு அவர்கள்: ஒன்றுமில்லை என்றார்கள்.

அப்பொழுது அவர்: நீங்கள் படவுக்கு வலதுபுறமாக வலையைப் போடுங்கள், அப்பொழுது உங்களுக்கு அகப்படும் என்றார். அப்படியே அவர்கள் போட்டு, திரளான மீன்கள் அகப்பட்டதினால், அதை இழுக்கமாட்டாதிருந்தார்கள்.

ஆதலால் இயேசுவுக்கு அன்பாயிருந்த சீஷன் பேதுருவைப் பார்த்து: அவர் கர்த்தர் என்றான். அவர் கர்த்தர் என்று சீமோன்பேதுரு கேட்டவுடனே, தான் வஸ்திரமில்லாதவனாயிருந்தபடியினால், தன் மேற்சட்டையைக் கட்டிக்கொண்டு கடலிலே குதித்தான்.

மற்றச் சீஷர்கள் கரைக்கு ஏறக்குறைய இருநூறுமுழத் தூரத்தில் இருந்தபடியினால் படவிலிருந்துகொண்டே மீன்களுள்ள வலையை இழுத்துக்கொண்டுவந்தார்கள்.

அவர்கள் கரையிலே வந்திறங்கினபோது, கரிநெருப்புப் போட்டிருக்கிறதையும், அதின்மேல் மீன் வைத்திருக்கிறதையும், அப்பத்தையும் கண்டார்கள்.

இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் இப்பொழுது பிடித்த மீன்களில் சிலவற்றைக் கொண்டுவாருங்கள் என்றார்.

சீமோன்பேதுரு படவில் ஏறி, நூற்றைம்பத்துமூன்று பெரிய மீன்களால் நிறைந்த வலையைக் கரையில் இழுத்தான்; இத்தனை மீன்கள் இருந்தும் வலை கிழியவில்லை.

இயேசு அவர்களை நோக்கி: வாருங்கள், போஜனம்பண்ணுங்கள் என்றார். அவரைக் கர்த்தரென்று சீஷர்கள் அறிந்தபடியினால் அவர்களில் ஒருவனும்: நீர் யார் என்று கேட்கத் துணியவில்லை.

அப்பொழுது இயேசு வந்து, அப்பத்தையும் மீனையும் எடுத்து, அவர்களுக்குக் கொடுத்தார்.

இதனை நாம் தியானிக்கும் போது நம் ஆத்துமாவை அவர் எப்படி தேவனுடைய ராஐ்யத்திற்காக தகுதி படுத்துகிறார் என்பதை ஆகமங்களில் எழுதியிருக்கிறது போல் அடுப்பில் கரிநெருப்புப் போட்டு மீன் ஆயத்தப்படுத்தி, அப்பமுமாக புசிக்க சீஷர்களுக்குக் கொடுக்கிறார்.  இவை தேவன் நமக்கு காட்டுகிற திருஷ்டாந்தம் என்னவென்றால் நம் ஆத்தமா நன்றாக கழுவி, பின் அதன் உள்ளும் புறம்பும் அருவருப்புகளை அகற்றி சுத்திகரித்து, அதன் பின் சபையில் நின்று சத்திய வசனத்தால்  அதனை பக்குவபடுத்தினால், தேவராஜ்யம் நம்மளில் வரும் என்பதற்கு திருஷ்டாந்தம்.  

இவ்விதமாக இதனை வாசிக்கிற அன்பானவர்களே நாம் யாவரும் நம்முடைய ஆத்துமாவின் அறுவடைக்காக நம்மை சுத்தம் செய்து ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.     கர்த்தர் ஆசீர்வதிப்பார். கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

 -தொடர்ச்சி நாளை.