தேவனுக்கே மகிமையுண்டாவதாக
எரேமியா 31:14
ஆசாரியர்களின் ஆத்துமாவைக் கொழுமையானவைகளினால் பூரிப்பாக்குவேன்; என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபை சமாதானம் பெற்றுகொள்ள செய்ய வேண்டுவது என்ன? திருஷ்டாந்தமும் விளக்கங்களும்
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், முதற்பலனின் போஜனபலி எவ்விதம் செலுத்த வேண்டும், அந்த பலியின் கிரியைகள் எவ்விதம் உண்டாயிருக்கும் என்பதை குறித்து தியானித்தோம். மேலும் இந்த நாளில் நாம் தியானிப்பது சமாதான பலி.
லேவியராகமம் 3:1-17
ஒருவன் சமாதான பலியைப் படைக்கவேண்டுமென்று, மாட்டுமந்தையில் எடுத்துச் செலுத்துவானாகில், அது காளையானாலும் சரி, பசுவானாலும் சரி, பழுதற்றிருப்பதை கர்த்தருடைய சந்நிதியில் செலுத்தக்கடவன்.
அவன் தன் பலியின் தலைமேல் தன் கையை வைத்து, ஆசரிப்புக் கூடாரவாசலுக்கு முன்பாக அதைக் கொல்லக்கடவன்; அப்பொழுது ஆரோனின் குமாரராகிய ஆசாரியர் அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்கக்கடவர்கள்.
பின்பு சமாதான பலியிலே குடல்களை மூடிய கொழுப்பையும், குடல்களிலுள்ள கொழுப்பு முழுவதையும்,
இரண்டு குண்டிக்காய்களையும், அவைகளின்மேல் சிறு குடல்களினிடத்தில் இருக்கிற கொழுப்பையும், குண்டிக்காய்களோடேகூடக் கல்லீரலின்மேல் இருக்கிற ஜவ்வையும் எடுத்து, கர்த்தருக்குத் தகனபலியாகச் செலுத்துவானாக.
அதை ஆரோனின் குமாரர் பலிபீடத்து அக்கினியிலுள்ள கட்டைகளின்மேல் போட்டிருக்கும் சர்வாங்க தகனபலியின்மீதில் போட்டுத் தகனிக்கக்கடவர்கள்; இது கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலி.
அவன் கர்த்தருக்குச் சமாதான பலியைப் படைக்கவேண்டுமென்று ஆட்டு மந்தையிலிருந்து எடுத்துச் செலுத்துவானாகில், அது ஆண் ஆனாலும் சரி, பெண் ஆனாலும் சரி, பழுதற்றிருப்பதைச் செலுத்துவானாக.
அவன் ஆட்டுக்குட்டியைப் பலியாகச் செலுத்தவேண்டுமானால், அதைக் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்து,
தன் பலியின் தலைமேல் தன் கையை வைத்து, ஆசரிப்புக் கூடாரத்துக்கு முன்பாக அதைக் கொல்லக்கடவன்; அப்பொழுது ஆரோனின் குமாரர் அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்கக்கடவர்கள்.
பின்பு அவன் சமாதான பலியிலே அதின் கொழுப்பையும், நடுவெலும்பிலிருந்து எடுத்த முழு வாலையும், குடல்களை மூடிய கொழுப்பையும், அவைகளின்மேல் இருக்கிற கொழுப்பு முழுவதையும்,
இரண்டு குண்டிக்காய்களையும், அவைகளின்மேல் சிறு குடல்களினிடத்தில் இருக்கிற கொழுப்பையும், குண்டிக்காய்களோடேகூடக் கல்லீரலின்மேல் இருக்கிற ஜவ்வையும் எடுத்து, கர்த்தருக்குத் தகனபலியாகச் செலுத்தக்கடவன்.
அதை ஆசாரியன் பலிபீடத்தின்மேல் தகனிக்கக்கடவன்; இது கர்த்தருக்கு இடும் தகன ஆகாரம்.
அவன் செலுத்துவது வெள்ளாடாயிருக்குமானால், அவன் அதை கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்து,
அதின் தலைமேல் தன் கையை வைத்து, ஆசரிப்புக் கூடாரத்துக்கு முன்பாக அதைக் கொல்லக்கடவன்; அப்பொழுது ஆரோனின் குமாரர் அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்கக்கடவர்கள்.
அவன் அதிலே குடல்களை மூடிய கொழுப்பையும், அவைகள்மேலிருக்கிற கொழுப்பு முழுவதையும்,
இரண்டு குண்டிக்காய்களையும், அவைகளின்மேல் சிறு குடல்களினிடத்தில் இருக்கிற கொழுப்பையும், குண்டிக்காய்களோடேகூடக் கல்லீரலின்மேல் இருக்கிற ஜவ்வையும் எடுத்து, கர்த்தருக்குத் தகனபலியாகச் செலுத்தக்கடவன்.
ஆசாரியன் பலிபீடத்தின்மேல் அவைகளைத் தகனிக்கக்கடவன்; இது சுகந்த வாசனையான தகன ஆகாரம்; கொழுப்பு முழுவதும் கர்த்தருடையது.
கொழுப்பையாவது இரத்தத்தையாவது நீங்கள் புசிக்கலாகாது; இது உங்கள் வாசஸ்தலங்கள் எங்கும் உங்கள் தலைமுறைதோறும் நித்திய கட்டளையாயிருக்கும் என்று சொல் என்றார்.
வசனங்களை நாம் வாசிக்கும் போது மாட்டு மந்தையிலிருந்து காளை அல்லது பசுவோ எடுத்து ஆசரிப்பு கூடார வாசலுக்கு முன் பக்கம் கொண்டு வந்து ஆசாரியன் தலையில் கையை வைத்து கொல்லகடவன், என்று எழுதப்பட்டிருப்பது நம்முடைய பழைய ஆத்துமா, நம்முடைய ஆசாரியராகிய கிறிஸ்துவோடு கொல்லப்பட்டு பின்பு நம்முடைய இருதயம் இரத்தத்தால் சுத்திகரித்து பின்பு நம்முடைய சரீரத்தின் உள் அவயவங்கள் எல்லாமே கர்த்தருக்கு தகனபலியாக செலுத்த வேண்டும்.
நம்முடைய வாழ்க்கையில் வியாதியில்லாதபடி நாம் சீராக சமாதானமாக வாழும்படியாக நம்முடைய உள்அவயவங்களோடு சேர்த்து பலிபீடத்தின் மேல் முன்பு ஒப்புக் கொடுத்த பலியோடுகூட இதனையும் கர்த்தருக்கென்று தகனபலியாக செலுத்த வேண்டும், அதனை ஆசாரியர்கள் முதலில் போட்ட பலியோடு சேர்த்து பலிபீடத்தின் மேல் தகனிப்பார்கள். இது கர்த்தருக்கு சுகந்த வாசனையான தகனபலி.
அடுத்தபடியாக ஆட்டு மந்தையிலிருந்து ஆட்டுகுட்டியானாலும் பலிசெலுத்துவது முந்தின பிரகாரமே செய்ய வேண்டும். இது கர்த்தருக்கு இடும் தகன ஆகாரம். அடுத்ததான வசனங்களை நாம் தியானிக்கும் போது வெள்ளாடைக் குறித்து கர்த்தர் சொல்கிறார். இதனை நாம் சமாதான பலிக்காக கொடுக்கும் போது முந்தின பலியைப்போல் தான் தகனமாக செலுத்த வேண்டும். இது சுகந்த வாசனையான தகன ஆகாரம்.
பிரியமானவர்களே ஆட்டுகுட்டியின் கொழுப்பும் ஜவ்வும், வெள்ளாட்டுகுட்டியின் கொழுப்பும் ஜவ்வும் மட்டும் தான் கர்த்தருக்கு தகன ஆகாரமாயிருக்கிறது என்பதை நாம் இப்போது தியானிக்கிறோம். என்னவெனில் ஆட்டுகுட்டி என்பது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு திருஷ்டாந்தமும், வெள்ளாடு என்பது இஸ்ரவேலராக்கப்பட்ட ஒவ்வொரு ஆத்துமாக்களும். நாம் ஒவ்வொருவருடைய ஆத்துமாவும் வசனமாகிய கிறிஸ்துவின் இரத்தத்தினால் கழுவி சுத்துகரிக்கப்பட்டு, பின்பு அவருடைய வசனமாகிய அவருடைய ஆவியினால் உயிர்பிக்கபட்டு, அதன் பின்பு பரலோக ஆகாரமாகிய அவருடைய ஆகாரத்தினால் பரிசுத்தமாக்கப்பட்டு, அனுதினம் நம்முடைய ஆத்துமா கிறிஸ்துவினால் இணைக்கபட்டால் நம்மை உயிர்தெழுதலினால் இரட்சிக்கிறது.
பிரியமானவர்களே இப்படியாக நம்முடைய பரிசுத்த வாழ்க்கை இருக்குமானால் நம்முடைய ஆத்துமா நற்கிரியைகளாகிய நற்பலன்கள் உண்டாயிருக்கும். அப்போது நம் ஆத்துமா பரலோக ஆகாரமாகிய கொழுப்பான பதார்த்தங்களாயிருக்கும். அவ்விதம் நம்முடைய ஆத்துமாவை தகன ஆகாரமாக ஏற்றுக்கொள்கிறார். நம் ஆத்துமாவின் பரலோகாகாரம் என்னவென்றால் அல்லேலூயா, இரட்சணியம், மகிமை,கனம், வல்லமை இவையெல்லாம் கர்த்தருக்கே உரியது. இவைகள்தான் பழைய ஏற்பாட்டில் திருஷ்டாந்தப்படுத்தப்படுகிறது.
மேலும் நாம் கிறிஸ்துவினால் முழுமையும் பழைய வாழ்க்கை அத்தனையும் வசனமாகிய அக்கினியால் பலிபீடத்தில் தகனித்து அதன்பின் நம்முடைய கிறிஸ்துவோடு உள்ள புதிய வாழ்க்கை தேவன் ஏற்றுக்கொள்கிறார். நாம் இரட்சிக்கபடுவதற்கு முன்பு உள்ள எந்த காரியங்களும் நம்முடைய வாசஸ்தலமாகிய உள்ளத்திலோ வீட்டிலோ இருக்கக்கூடாது என்று கர்த்தர் நித்திய கட்டளையாக சொல்கிறார். அதற்கு தான்
லேவியராகமம் 3:17-ம் வசனம் நமக்கு கூறுகிறது
கொழுப்பையாவது இரத்தத்தையாவது நீங்கள் புசிக்கலாகாது; இது உங்கள் வாசஸ்தலங்கள் எங்கும் உங்கள் தலைமுறைதோறும் நித்திய கட்டளையாயிருக்கும் என்று சொல் என்றார்.
இவ்விதமாக நாம் யாவரும் கர்த்தருக்குரியவைகளை கர்த்தருக்கு கொடுப்போம். இவ்விதமாக நாம் கர்த்தருக்கு கொடுக்க வேண்டியவற்றை சரியாக அனுதினம் செலுத்துவோமானால் (அல்லேலூயா இரட்சணியம் கனம் மகிமை வல்லமை) நமக்கு சமாதானம் நல்கும்படியாக சமாதான பலியாக ஏற்றுக்கொள்கிறார். நம்மை ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம். கர்த்தர் ஆசீர்வதிப்பார். கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.