தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சகரியா 13: 1

அந்நாளிலே பாவத்தையும் அழுக்கையும் நீக்க, தாவீதின் குடும்பத்தாருக்கும் எருசலேமின் குடிகளுக்கும் திறக்கப்பட்ட ஒரு ஊற்று உண்டாயிருக்கும்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.     அல்லேலுயா.

மணவாட்டி சபை தேவகட்டளை மீறினால் உள்ள நியாயத்தீர்ப்பும், அதிலிருந்து மீட்கப்படுதலும் திருஷ்டாந்தத்தோடு விளக்கம்

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், சமாதானபலியை குறித்து அதனை நாம் எவ்விதத்தில் செலுத்த வேண்டும் என்றும், சமாதான பலியை தகன ஆகாரமாக கர்த்தர் ஏற்று கொள்கிறதையும் ,அவ்விதம் கர்த்தருக்கு கொடுக்க வேண்டியவைகளை கர்த்தருக்கு கொடுக்கிறவர்களுக்கு சமாதானம் கிடைக்கும்.  

ஆனால் இந் நாளில் தியானிக்கப்போகிற ஆவிக்குரிய வாழ்க்கை என்னவென்றால், கர்த்தர் மோசேயினிடத்தில் சொல்கிறார்,  இஸ்ரவேல் புத்திரரிடத்தில் சொல்லவேண்டுவது என்னவென்றால், அறியாமையின் காரணமாக தேவனுடைய கட்டளைகளில் யாதொன்றை மீறி செய்தால், குறிப்பாக  அபிஷேகம் பெற்ற ஆசாரியன் ஜனங்கள் குற்றத்திற்க்குட்பட தக்கதாய் பாவஞ் செய்தால், தான் செய்த பாவத்திற்கு தக்கதாய் பழுதற்ற இளங்காளையை கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவரக்கடவன் என்று எழுதப்பட்டிருக்கிறது.  இவை என்னவென்றால், ஜனங்கள் குற்றத்திற்குட்படதக்காக அபிஷேகம் பெற்ற ஆசாரியன் அறியாமலும் தேவகட்டளையை மீறிபாவஞ் செய்யக்கூடாது. அப்படி பாவஞ்செய்து விட்டால் பழுதற்ற ஒரு இளங்காளையை தேவசந்நிதியில் கர்த்தரிடத்தில் கொண்டுவரகடவன் என்று நமக்கு பழைய ஏற்பாட்டில் திருஷ்டாந்தப்படுத்தப்பட்டிருக்கிறது.  

அந்த இளங்காளையானது கிறிஸ்துவுக்கு திருஷ்டாந்தம்.  அதெப்படியெனில் காளை என்பது உதடுகளின் காளை; அவர் தேவன்; தேவன் என்பது வார்த்தை; அந்த வார்த்தையானது ஆவியாயும் ஜீவனுமாயிருக்கிறது; அந்த வார்த்தை குமாரனாகிய கிறிஸ்து. அவர்தான் இளங்காளை;அவர் நிலத்தை ஏர்பூட்டி உழுகிறவர். அந்த நிலம் என்பது நாம் ஒவ்வொருவரும்.  முதலாவது தேவன் வாங்கிய நிலம் கிறிஸ்து. இந்த நிலம் முதலாவது உழப்பட்டு, பயிரிடுவதற்கு உகந்த நிலமாக மாற்றப்பட்டது. 

சங்கீதம் 129: 1-5

என் சிறுவயது தொடங்கி அநேகந்தரம் என்னை நெருக்கினார்கள்.

என் சிறுவயது தொடங்கி அநேகந்தரம் என்னை நெருக்கியும், என்னை மேற்கொள்ளாமற்போனார்கள்.

உழுகிறவர்கள் என் முதுகின்மேல் உழுது, தங்கள் படைச்சால்களை நீளமாக்கினார்கள்.

கர்த்தரோ நீதியுள்ளவர்; துன்மார்க்கருடைய கயிறுகளை அவர் அறுத்தார் என்று, இஸ்ரவேல் இப்பொழுது சொல்வதாக.

சீயோனைப் பகைக்கிற அனைவரும் வெட்கிப் பின்னிட்டுத் திரும்பக்கடவர்கள்.

மேலும் நீதிமொழிகள் 14: 3,4

மூடன் வாயிலே அவன் அகந்தைக்கேற்ற மிலாறுண்டு; ஞானவான்களின் உதடுகளோ அவர்களைக் காப்பாற்றும்.

எருதுகளில்லாத இடத்தில் களஞ்சியம் வெறுமையாயிருக்கும்; காளைகளின் பெலத்தினாலோ மிகுந்த வரத்துண்டு.

இந்த வசனங்களை நாம் தியானிக்கும் போது  ஞானவான்களின் உதடுகள் அவர்களை காப்பாற்றும். ஞானவான்கள் என்று சொல்லும்போது கிறிஸ்துவின் ஆவியினால் உயிர்ப்பிக்கப்பட்டவர்கள். அவர்கள் உதடுகளில் எப்பொழுதும் அருள் பொழிந்துக்கொண்டிருக்கும்.  அவர்கள் உதடுகளின் காளைகளை தேவனுக்கு செலுத்துவார்கள். அதென்னவெனில் அவர் ஸ்தோத்தரிக்கப்படதக்கவர். ஸ்தோத்திரபலியை தேவனுக்குச் செலுத்தி அபிஷேகம் பெற்ற கர்த்தருடைய ஊழியக்காரர்கள் ஜனங்கள் குற்றம் செய்வதற்கான பாவத்தை செய்ததினால் அவர்கள் ஒன்றுக்கு ஏழுதரம் பாவஅறிக்கைச்செய்து மன்னிப்புப்பெற்று கர்த்தரிடத்தில் தங்களை ஒப்புக்கொடுத்து மீண்டும் பாவம் செய்யாதபடியும், தேவ கட்டளை மீறாதபடியும், தங்களைக் காத்துக்கொண்டால் அது யாவருக்கும் நன்மையாகயிருக்கும்.  

ஆனால் லேவியராகமம் 4:3-12  

அபிஷேகம் பெற்ற ஆசாரியன், ஜனங்கள் குற்றத்திற்கு உட்படத்தக்கதாகப் பாவஞ்செய்தால், தான் செய்த பாவத்தினிமித்தம் பழுதற்ற ஒரு இளங்காளையை பாவநிவாரண பலியாகக் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவரக்கடவன்.

அவன் அந்தக் காளையை ஆசரிப்புக் கூடாரவாசலிலே கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்து, அதின் தலைமேல் தன் கையை வைத்து, கர்த்தருடைய சந்நிதியில் அதைக் கொல்லக்கடவன்.

அப்பொழுது, அபிஷேகம் பெற்ற ஆசாரியன் அந்தக் காளையின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, அதை ஆசரிப்புக் கூடாரத்தில் கொண்டுவந்து,

தன் விரலை இரத்தத்தில் தோய்த்து, பரிசுத்த ஸ்தலத்தின் திரைக்கு எதிரே கர்த்தருடைய சந்நிதியில் ஏழுதரம் தெளிக்கக்கடவன்.

பின்பு, ஆசாரியன் அந்த இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, ஆசரிப்புக் கூடாரத்திலே கர்த்தருடைய சந்நிதியில் இருக்கும் சுகந்த தூபபீடத்துக் கொம்புகளின்மேல் பூசி, காளையினுடைய மற்ற இரத்தம் முழுவதையும் ஆசரிப்புக் கூடாரவாசலுக்கு முன்பாக இருக்கிற தகனபலிபீடத்தின் அடியிலே ஊற்றிவிட்டு,

பாவநிவாரணபலியான காளையின் எல்லாக் கொழுப்புமாகிய குடல்களை மூடிய கொழுப்பையும், அவைகள்மேல் இருக்கிற கொழுப்பு முழுவதையும்,

இரண்டு குண்டிக்காய்களையும், அவைகள்மேல் சிறு குடல்களினிடத்தில் இருக்கிற கொழுப்பையும், குண்டிக்காய்களோடேகூடக் கல்லீரலின்மேல் இருக்கிற ஜவ்வையும்,

சமாதானபலியின் காளையிலிருந்து எடுக்கிறதுபோல அதிலிருந்து எடுத்து, அவைகளைத் தகனபலிபீடத்தின்மேல் தகனிக்கக்கடவன்.

காளையின் தோலையும், அதின் மாம்சம் முழுவதையும், அதின் தலையையும், தொடைகளையும், அதின் குடல்களையும், அதின் சாணியையும்,

காளை முழுவதையும் பாளயத்துக்குப் புறம்பே சாம்பல் கொட்டுகிற சுத்தமான இடத்திலே கொண்டுபோய், கட்டைகளின்மேல் போட்டு, அக்கினியாலே சுட்டெரிக்கக்கடவன்; சாம்பல் கொட்டியிருக்கிற இடத்திலே அதைச் சுட்டெரிக்கக்கடவன்.

வசனங்கள் நாம் தியானிக்கும் போது அநேக கர்த்தரின் ஊழியக்காரர்கள் அறிந்தும், அறியாமலும் தேவ கட்டளையை மீறி நடக்கிறார்கள். தேவகட்டளையாகிய சத்தியம் முழுமையாகத் தெரிந்துக் கொள்ளாதவர்கள், தெரிந்துக்கொள்ளும் வரையிலும்  லூக்கா 24:45-49

அப்பொழுது வேதவாக்கியங்களை அறிந்துகொள்ளும்படி அவர்களுடைய மனதை அவர் திறந்து அவர்களை நோக்கி:

எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து பாடுபடவும், மூன்றாம்நாளில் மரித்தோரிலிருந்தெழுந்திருக்கவும் வேண்டியதாயிருந்தது;

அன்றியும் மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும் எருசலேம் தொடங்கிச் சகல தேசத்தாருக்கும் அவருடைய நாமத்தினாலே பிரசங்கிக்கப்படவும் வேண்டியது.

நீங்கள் இவைகளுக்குச் சாட்சிகளாயிருக்கிறீர்கள்.

என் பிதா வாக்குத்தத்தம்பண்ணினதை, இதோ, நான் உங்களுக்கு அனுப்புகிறேன். நீங்களோ உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும்வரைக்கும் எருசலேம் நகரத்தில் இருங்கள் என்றார்.

இவ்விதமாக கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சொல்கிறார். அவர்  சீஷர்களின் மனதை திறந்து உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கம்படும் வரையிலும் எருசலேம் நகரத்தில் இருங்கள் என்று சொல்கிறார். ஆனால் அநேக கர்த்தரின் வேலைக்காரர்கள் தங்கள் மனம் போன போக்கில் ஜனங்களை நடத்தி செல்வார்கள். 

பிரியமானவர்களே இதனை தியானிக்கிறவர்களே தங்களில் யாராவது அப்படி இருப்போமானால் இப்பொழுதே கர்த்தரின் சந்நிதியில் விழுந்து ஒன்றுக்கு ஏழுதடவை ஒப்புக்கொடுப்போம்.  மேலும் கர்த்தருடைய சந்நிதியை விட்டு வெளியிலும் நாம் நடந்த தேவசித்தம் இல்லாத சகலத்தையும் மாற்றும்படியாக ஒப்புக்கொடுப்போம். கர்ததர் நாம் நடக்கிற சகல பாதையையும் கண்ணோக்குகிறார். 

கர்த்தர் ஊழியக்காரர்களைக் குறித்து சகரியா 11:1-12

  லீபனோனே, அக்கினி உன் கேதுருமரங்களைப் பட்சிக்கும்படி உன் வாசல்களைத் திற.

தேவதாரு விருட்சங்களே, புலம்புங்கள்; கேதுருமரங்கள் விழுந்ததே; பிரபலமானவைகள் பாழாக்கப்பட்டன. பாசானின் கர்வாலிமரங்களே, புலம்புங்கள்; அரணுள்ள சோலை கீழே தள்ளப்பட்டது.

மேய்ப்பர்களின் மகிமை அழிந்துபோனபடியால், அவர்கள் அலறுகிற சத்தம் கேட்கப்படுகிறது; யோர்தானின் பெருமை அழிந்துபோனபடியால், பாலசிங்கங்கள் கர்ச்சிக்கிற சத்தம் கேட்கப்படுகிறது.

என் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், கொலையுண்கிற ஆடுகளை மேய்க்கக்கடவாய்.

அவைகளை உடையவர்கள், அவைகளைக் கொன்றுபோட்டுத் தங்களுக்குக் குற்றமில்லையென்று எண்ணுகிறார்கள். அவைகளை விற்கிறவர்கள், கர்த்தருக்கு ஸ்தோத்திரம், நாங்கள் ஐசுவரியமுள்ளவர்களானோம் என்கிறார்கள்; அவைகளை மேய்க்கிறவர்கள், அவைகள்மேல் இரக்கம் வைக்கிறதில்லை.

நான் இனி தேசத்துக் குடிகளின்மேல் இரக்கம்வையாமல் மனுஷரில் யாவரையும் அவனவனுடைய அயலான் கையிலும் அவனவனுடைய ராஜாவின் கையிலும் அகப்படப்பண்ணுவேன்; அவர்கள் தேசத்தை அழித்தும், நான் இவர்களை அவர்கள் கைக்குத் தப்புவிப்பதில்லையென்று கர்த்தர் சொல்லுகிறார்.

கொலையுண்கிற மந்தையாகிய சிறுமைப்பட்ட உங்களை நான் மேய்ப்பேன்; நான் இரண்டு கோல்களை எடுத்து, ஒன்றிற்கு அநுக்கிரகம் என்றும், ஒன்றிற்கு நிக்கிரகம் என்றும் பேரிட்டு மந்தையை மேய்த்து,

ஒரே மாதத்திலே மூன்று மேய்ப்பரையும் அதம்பண்ணினேன்; என் ஆத்துமா அவர்களை அரோசித்தது; அவர்கள் ஆத்துமா என்னையும் வெறுத்தது.

இனி நான் உங்களை மேய்ப்பதில்லை; சாகிறது சாகட்டும், அதமாகிறது அதமாகட்டும்; மீதியானவைகளோவென்றால், ஒன்றின் மாம்சத்தை ஒன்று தின்னக்கடவது என்று நான் சொல்லி,

அநுக்கிரகம் என்னப்பட்ட என் கோலை எடுத்து, நான் அந்த ஜனங்களெல்லாரோடும் பண்ணியிருந்த என் உடன்படிக்கை அற்றுப்போகும்படிக்கு அதை முறித்துப்போட்டேன்.

அந்நாளிலே அது அற்றுப்போயிற்று; அப்படியே மந்தையில் எனக்குக் காத்திருந்த சிறுமைப்பட்டவைகள் அது கர்த்தருடைய வார்த்தையென்று அறிந்துகொண்டன.

உங்கள் பார்வைக்கு நன்றாய்க் கண்டால், என் கூலியைத் தாருங்கள்; இல்லாவிட்டால் இருக்கட்டும் என்று அவர்களோடே சொன்னேன்; அப்பொழுது எனக்குக் கூலியாக முப்பது வெள்ளிக்காசை நிறுத்தார்கள்.

தேவன் சகரியா தீர்க்கதரிசியோடு சொன்ன வார்த்தையில் கரத்தருக்கு காத்திருந்தவர்கள் இது தேவனுடைய வார்த்தை என்று அறிந்துக்கொண்டார்கள். அதற்கு பின்பு கர்த்தர் அவ்விதமான மேய்ப்பர்களை  இரட்சிக்கும் படியாக ஒரு மேய்ப்பனை ஏற்ப்படுத்துகிறார். அதற்குதான் சகரியா11:13-17

கர்த்தர் என்னை நோக்கி: அதைக் குயவனிடத்தில் எறிந்துவிடு என்றார்; இதுவே நான் அவர்களால் மதிக்கப்பட்ட மேன்மையான மதிப்பு; நான் அந்த முப்பது வெள்ளிக்காசை எடுத்து, அவைகளைக் குயவனுக்கென்று கர்த்தருடைய ஆலயத்திலே எறிந்துவிட்டேன்.

நான் யூதாவுக்கும் இஸ்ரவேலுக்கும் இருக்கிற சகோதரக்கட்டை அற்றுப்போகப்பண்ணும்படிக்கு, நிக்கிரகம் என்னப்பட்ட என் இரண்டாம் கோலையும் முறித்தேன்.

கர்த்தர் என்னை நோக்கி: நீ மதியற்ற ஒரு மேய்ப்பனுடைய ஆயுதங்களை இன்னும் எடுத்துக்கொள்.

இதோ, நான் தேசத்திலே ஒரு மேய்ப்பனை எழும்பப்பண்ணுவேன்; அவன் அதமாகிறவைகளைப் பராமரிக்காமலும், சிதறுண்டதைத் தேடாமலும், நொறுங்குண்டதைக் குணமாக்காமலும், இளைத்திருக்கிறதை ஆதரிக்காமலும், கொழுத்ததின் மாம்சத்தைத் தின்று, அவைகளுடைய குளம்புகளை உடைத்துப்போடுவான்.

மந்தையைக் கைவிடுகிற அபத்தமான மேய்ப்பனுக்கு ஐயோ! பட்டயம் அவன் புயத்தின்மேலும் அவன் வலதுகண்ணின்மேலும் வரும்; அவன் புயமுழுதும் சூம்பிப்போம்; அவன் வலதுகண் முற்றிலும் இருள் அடையும் என்றார்.

இதனை தியானிக்கும் போது இங்கு எழும்பபண்ணுகிற மேய்ப்பன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, அதுதான் அவர் சொல்கிறார் நானே நல்ல மேய்ப்பன், நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காக தன் ஜீவனை கொடுக்கிறான். அவரை வைத்து கர்த்தர் உண்மையில்லாதவர்களுக்கு நியாயத்தீர்ப்புக் கொடுக்கிறார். இதனை வாசிக்கிற அன்பானவர்களே நம்மை இப்போது அலசி ஆராய்ந்து ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.     கர்த்தர் ஆசீர்வதிப்பார். கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

 -தொடர்ச்சி நாளை.