தேவனுக்கே மகிமையுண்டாவதாக

I யோவான் 1: 7

அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். 

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.     அல்லேலுயா.

மணவாட்டி சபையை பாவத்தினின்று மீண்டெடுத்த பஸ்கா ஆட்டுக்குட்டியின் பலவித தோற்றங்கள்- திருஷ்டாந்த விளக்கம்

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையின் தேவனுடைய அபிஷேகம் பெற்று ஆசாரியத்துவம்  செய்து வருகிறவர்கள் யாராக இருந்தாலும், அறியாமையின் காரணமாகவோ அறிந்தும் தேவ கட்டளையை மீறி  நடந்தால் தேவனுடைய நியாயத்தீர்ப்பு  எவ்விதம் இருக்கும் என்பதை  சகரியா 11-ம் அதிகாரம் நமக்கு விளக்கி காட்டுகிறது. அவ்வாறு பாவம் செய்தவர்கள் எப்படி மீட்கபட வேண்டும் என்றும் நாம் தியானிக்கிறோம்.  

மேலும் இஸ்ரவேல் சபையை குறித்து தேவன்  சொல்கிறது என்னவென்றால், சபையார் அறியாமையினால் பாவஞ்செய்து அல்லது சத்தியம் அவர்களுக்கு வெளிப்படாதப்படி மறைவாய் இருந்ததினால் அவர்கள் தேவ கட்டளையை மீறி செய்யதகாததைச் செய்து பாவத்திற்குட்பட்டு குற்றவாளிகளானால், அவர்கள் செய்த பாவம் தெரிய வரும்போது, அவர்கள் கர்த்தரின் சந்நிதியில்  ஒரு இளங்காளையை ஆசரிப்பு கூடாரத்தின் வாசலில் கொண்டு வந்து பலியிட வேண்டும்  என்று கர்த்தர் திருஷ்டாந்தத்தில் கூட நம்மோடு சொல்கிறாரென்றால், நமக்காக அடிக்கப்பட்ட முதுகானது உழப்பட்டது. இவ்விதமான பாவத்தினின்று நம்மை விடுதலையாக்கும்படியாகவே என்பதை நாம் ஒவ்வொருவரும் புரிந்துக் கொண்டு,  பாவஞ் செய்த ஆத்துமா இவற்றைத் தெரிந்துக்கொண்டு, தங்கள் பாவங்களை கர்த்தருக்கு முன்பாக அறிக்கைப்பண்ணி, நமக்காக இரத்தம் சிந்தி மரித்தோரிலிருந்தெழும்பின இயேசு கிறிஸ்துவின் கல்வாரி இரத்தம் நம் பாவத்தை நீக்கி நம்மை சுத்திகரிக்கும் என்பதை வருங்காலங்களில் விளங்கபண்ணும் பொருட்டு பழைய ஏற்பாட்டு இஸ்ரவேல் சபைக்கு தேவன் இளங்காளையை ஆசரிப்புக்கூடாரத்திற்கு முன்பாக கொண்டு வந்து பலியிட வேண்டும், அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து ஆசரிப்புக்கூடாரத்தில் கொண்டு வந்து, தன் விரலை இரத்தத்தில் தோய்த்து, கர்த்தருடைய சந்நிதியில் திரைக்கு எதிரே ஏழுதரம் தெளிக்க வேண்டும் என்று சொல்கிறது நமக்கு திருஷ்டாந்தத்திற்கே என்பதை தெரிந்துக்கொள்ள வேண்டும். 

இதனை வாசிக்கிற அன்பான தேவ சபையின் பிள்ளைகள் யாரானாலும் நிர்விசாரமாயிராதபடி நம்முடைய குறைகள் என்ன இருக்கிறது என்பதை அலசி ஆராய்ந்து நம்மை பாவத்தினின்று மீண்டு எடுக்கிற கிறிஸ்துவின் இரத்தம் நம்மை கழுவி சுத்திகரிக்கும்படியாக கர்த்தரிடத்தில் குறைகளை ஏழுமுறை அறிக்கைப்பண்ணி ஒப்புக்கொடுப்போம்.  அப்பொழுது கர்த்தர் நம்மை பாவத்தினின்று விடுதலையாக்கி இரட்சிப்பார்.   

அதற்கு எடுத்துக்காட்டாக தான் சீரிய ராஜாவின் படைதலைவனாகிய நாகமானை  கர்ததர் ஏழுமுறை சுத்திகரிப்பினால் சுத்தமாக்குகிறார். அவற்றைக்குறித்துதான்

II இராஜாக்கள் 5:9-14

அப்படியே நாகமான் தன் குதிரைகளோடும் தன் இரதத்தோடும் வந்து எலிசாவின் வாசற்படியிலே நின்றான்.

அப்பொழுது எலிசா: அவனிடத்தில் ஆள் அனுப்பி, நீ போய், யோர்தானில் ஏழுதரம் ஸ்நானம்பண்ணு; அப்பொழுது உன் மாம்சம் மாறி, நீ சுத்தமாவாய் என்று சொல்லச் சொன்னான்.

அதற்கு நாகமான் கடுங்கோபங்கொண்டு, புறப்பட்டுப் போய்: அவன் வெளியே வந்து நின்று, தன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைத் தொழுது, தன் கையினால் அந்த இடத்தைத் தடவி, இவ்விதமாய்க் குஷ்டரோகத்தை நீக்கிவிடுவான் என்று எனக்குள் நினைத்திருந்தேன்.

நான் ஸ்நானம்பண்ணிச் சுத்தமாகிறதற்கு இஸ்ரவேலின் தண்ணீர்கள் எல்லாவற்றைப்பார்க்கிலும் தமஸ்குவின் நதிகளாகிய ஆப்னாவும் பர்பாரும் நல்லதல்லவோ என்று சொல்லி, உக்கிரத்தோடே திரும்பிப்போனான்.

அவன் ஊழியக்காரர் சமீபத்தில் வந்து, அவனை நோக்கி: தகப்பனே, அந்தத் தீர்க்கதரிசி ஒரு பெரிய காரியத்தைச் செய்ய உமக்குச் சொல்லியிருந்தால் அதை நீர் செய்வீர் அல்லவா? ஸ்நானம் பண்ணும், அப்பொழுது சுத்தமாவீர் என்று அவர் உம்மோடே சொல்லும் போது, அதைச் செய்யவேண்டியது எத்தனை அதிகம் என்று சொன்னார்கள்.

அப்பொழுது அவன் இறங்கி, தேவனுடைய மனுஷன் வார்த்தையின்படியே யோர்தானில் ஏழுதரம் முழுகினபோது, அவன் மாம்சம் ஒரு சிறுபிள்ளையின் மாம்சத்தைப்போல மாறி, அவன் சுத்தமானான்.

இவ்விதமாக நம்முடைய பாவத்தை ஏழு முறை சுத்திகரிப்பினால் சுத்திகரிக்கிறார்.  என்பதை திருஷ்டாந்தப்படுத்தவே 

லேவியராகம் 4:15-21

சபையின் மூப்பர் கர்த்தருடைய சந்நிதியில் தங்கள் கைகளை அதின் தலைமேல் வைக்கக்கடவர்கள்; பின்பு கர்த்தருடைய சந்நிதியில் அந்தக் காளையைக் கொல்லவேண்டும்.

அப்பொழுது, அபிஷேகம் பெற்ற ஆசாரியன் அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, ஆசரிப்புக் கூடாரத்தில் கொண்டுவந்து,

தன் விரலை இரத்தத்தில் தோய்த்து, கர்த்தருடைய சந்நிதியில் திரைக்கு எதிரே ஏழுதரம் தெளித்து,

ஆசரிப்புக் கூடாரத்தில் கர்த்தருடைய சந்நிதியில் இருக்கும் பலிபீடத்தின் கொம்புகளின்மேல் அந்த இரத்தத்தில் கொஞ்சம் பூசி, மற்ற இரத்தமெல்லாம் ஆசரிப்புக் கூடாரவாசலில் இருக்கிற தகனபலிபீடத்தின் அடியிலே ஊற்றிவிட்டு,

அதின் கொழுப்பு முழுவதையும் அதிலிருந்து எடுத்து, பலிபீடத்தின்மேல் தகனித்து,

பாவநிவாரணபலியின் காளையைச் செய்தபிரகாரம் இந்தக் காளையையும் செய்து, இவ்வண்ணமாய் ஆசாரியன் அவர்களுக்குப் பாவநிவிர்த்திசெய்யக்கடவன்; அப்பொழுது அது அவர்களுக்கு மன்னிக்கப்படும்.

பின்பு காளையைப் பாளயத்துக்குப் புறம்பே கொண்டுபோய், முந்தின காளையைச் சுட்டெரித்ததுபோலச் சுட்டெரிக்கக்கடவன்; இது சபைக்காகச் செய்யப்படும் பாவநிவாரணபலி.

இந்த வசனங்கள் கிறிஸ்து நமக்காக பஸ்கா பலியாகிறார் என்பதின் திருஷ்டாந்த விளக்கம்.  மேலும் அடுத்தது பிரபு, தன் அறியாமையின் நிமித்தம் தேவகட்டளைகளில் யாதொன்றை மீறி  செய்யதகாததை செய்து பாவத்திற்குட்பட்டு குற்றவாளியானால், தான் செய்தது பாவம் என்று தெரியவரும்போது பழுதற்ற ஒரு இளங்கடாவை கர்த்தரின் சந்நிதியில் சர்வாங்க தகனபலிக் கொல்லப்படும் இடத்தில் கொன்று அதின் இரத்தத்தை எடுத்து முந்தின பலிகளில் செய்தது போல் செய்து, பாவ  நிவிர்த்திச் செய்யக்கடவன். 

பிரபு என்று சொல்லும் போது இஸ்ரவேல் சபையில் எல்லாவிதத்திலும் முக்கிய அங்கம் வகிக்கிறவர்கள்.  இதன் அர்த்தம் என்னவென்றால் எல்லாவிதமான பாவத்திற்கும் ஒரேவித பலிச்செலுத்துதல் தான் செய்யப்படுகிறது. ஆனால் பலிகளில் வித்தியாசங்கள் உண்டு. 

மேலும்  சாதாரண ஜனங்களில் ஒருவன் தன்னுடைய அறியாமையின் காரணமாக தேவகட்டளைகளில் யாதொன்றை மீறி  செய்ய தகாததை செய்து பாவத்திற்குட்பட்டு குற்றவாளியானால், தான் செய்தது பாவம் என்று தெரிய வரும்போது அவன் ஒரு பழுதற்ற பெண் வெள்ளாட்டுக்குட்டியை  கர்த்தரின் சந்நிதியில் பலியாக முந்தினவற்றிற்கு செய்தது போல் செய்து பாவ நிவிர்த்தி செய்யக் கடவன் என்று தேவனுடைய வார்த்தை சொல்கிறது. அப்பொழுது அது அவனுக்கு மன்னிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது. 

ஆனால் இவை எல்லாமே கிறிஸ்துவின் இரத்தம்தான் என்பதை தேவன் பழைய ஏற்பாட்டில் திருஷ்டாந்தப்படுத்துகிறார். ஆனால் பலிகளில் வித்தியாசம் உண்டு என்பதற்கு அடையாளமாக, பாவஞ் செய்த அபிஷேகிக்கப்பட்ட ஆசாரியத்துவம் செய்கிறவர்களுக்கும், இஸ்ரவேல் சபையின் அங்கங்களுக்கும்   பழுதற்ற இளங்காளையையும், மற்றும் சபையின் பிரபுவுக்கு பழுதற்ற வெள்ளாட்டுக்கடாவையும், சாதாரண ஜனங்களின் பாவத்திற்கு பழுதற்ற பெண் வெள்ளாட்டுக்குட்டியையும் பலியாக்க வேண்டும் என்று தேவனுடைய வார்த்தையானதுக் கூறுகிறது.  

இவற்றின் வித்தியாசம் என்னவென்றால் நம்முடைய ஆத்துமா தேவனுடைய வார்த்தையினால் பலப்படுவதை காட்டுகிறது. அவை தான் இளங்காளை, வெள்ளாட்டு கடா, பெண்வெள்ளாட்டக்குட்டி, ஏனென்றால் நம்முடைய ஆத்துமாவைதான் தேவனுடைய வார்த்தையாகிய கிறிஸ்துவோடு ஒப்புக் கொடுக்க வேண்டும். நாம் செய்த பாவத்திற்காக நொறுங்கி ஸ்தோத்திரபலியோடே கூட  ஒப்புக்கொடுத்தல் தான் பலிச்செலுத்துதல், அதுவே தேவாராதனையின் ஒரு பகுதி.   

மேலும் குறிப்பாக ஏழு முறை சுத்திகரித்தல் யாருக்கென்றால் இளங்காளையின் தோற்றத்தோடு உள்ள அபிஷேகிக்கப்பட்ட ஆசாரியத்துவம் செய்கிறவர்களுக்கு குறிப்பாக எழுதப்பட்டிருக்கிறது.  மற்றும் நாம் பார்க்கும் போது யோபு தன்னை நீதிமான் என்று எண்ணினதால் தேவன் யோபுவை நியாயந்தீர்க்கிறார். யோபு அதிகமாக நியாயந்தீர்க்ப்பட்டதினாலே மிகவும் அதிகமாக மரணத்திற்கு ஏதுவாகப் பாதிக்கப்பட்டிருந்தான்.  அப்போது அவன் சிநேகிதர்கள் மூன்று பேர்கள் அங்கு வருகிறார்கள். அவர்கள் யோபிடத்தில் கர்த்தரைக்குறித்து நிதானமாய் பேசாததால் அவர்கள் மூன்று பேர்கள் மேலும் கர்த்தருக்கு  கோபம் மூளுகிறது. அதனால்

யோபு 42:1-17

அப்பொழுது யோபு கர்த்தருக்குப் பிரதியுத்தரமாக:

தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன்.

அறிவில்லாமல் ஆலோசனையை மறைக்கிற இவன் யார்? ஆகையால் நான் எனக்குத் தெரியாததையும், என் புத்திக்கு எட்டாததையும், நான் அறியாததையும் அலப்பினேன் என்கிறேன்.

நீர் எனக்குச் செவிகொடும், அப்பொழுது நான் பேசுவேன்; நான் உம்மைக் கேள்விகேட்பேன், நீர் எனக்கு உத்தரவு சொல்லும்.

என் காதினால் உம்மைக்குறித்துக் கேள்விப்பட்டேன்; இப்பொழுதோ என் கண் உம்மைக் காண்கிறது.

ஆகையால் நான் என்னை அருவருத்து, தூளிலும் சாம்பலிலும் இருந்து மனஸ்தாபப்படுகிறேன் என்றான்.

கர்த்தர் இந்த வார்த்தைகளை யோபோடே பேசினபின், கர்த்தர் தேமானியனான எலிப்பாசை நோக்கி: உன்மேலும் உன் இரண்டு சிநேகிதர்மேலும் எனக்குக் கோபம் மூளுகிறது; என் தாசனாகிய யோபு பேசினதுபோல், நீங்கள் என்னைக்குறித்து நிதானமாய்ப் பேசவில்லை.

ஆதலால் நீங்கள் ஏழு காளைகளையும், ஏழு ஆட்டுக்கடாக்களையும் தெரிந்துகொண்டு, என் தாசனாகிய யோபினிடத்தில் போய், உங்களுக்காகச் சர்வாங்க தகனபலிகளை இடுங்கள்; என் தாசனாகிய யோபும் உங்களுக்காக வேண்டுதல் செய்வான்; நான் அவன் முகத்தைப் பார்த்து, உங்களை உங்கள் புத்தியீனத்துக்குத்தக்கதாக நடத்தாதிருப்பேன்; என் தாசனாகிய யோபு பேசினதுபோல், நீங்கள் என்னைக்குறித்து நிதானமாய்ப் பேசவில்லை என்றார்.

அப்பொழுது தேமானியனான எலிப்பாசும் சூகியனான பில்தாதும் நாகமாத்தியனான சோப்பாரும் போய், கர்த்தர் தங்களுக்குச் சொன்னபடியே செய்தார்கள்; அப்பொழுது கர்த்தர் யோபின் முகத்தைப் பார்த்தார்.

யோபு தன் சிநேகிதருக்காக வேண்டுதல் செய்தபோது, கர்த்தர் அவன் சிறையிருப்பை மாற்றினார். யோபுக்கு முன் இருந்த எல்லாவற்றைப்பார்க்கிலும் இரண்டத்தனையாய்க் கர்த்தர் அவனுக்குத் தந்தருளினார்.

அப்பொழுது அவனுடைய எல்லாச் சகோதரரும் சகோதரிகளும், முன் அவனுக்கு அறிமுகமான அனைவரும் அவனிடத்தில் வந்து, அவன் வீட்டிலே அவனோடே போஜனம்பண்ணி, கர்த்தர் அவன்மேல் வரப்பண்ணின சகல தீங்கினிமித்தம் அவனுக்காக அங்கலாய்த்து, அவனுக்கு ஆறுதல்சொல்லி, அவரவர் ஒவ்வொரு தங்கக்காசையும், அவரவர் ஒவ்வொரு பொன் ஆபரணத்தையும் அவனுக்குக் கொடுத்தார்கள்.

கர்த்தர் யோபின் முன்னிலைமையைப் பார்க்கிலும் அவன் பின்னிலைமையை ஆசீர்வதித்தார்; பதினாலாயிரம் ஆடுகளும், ஆறாயிரம் ஒட்டகங்களும், ஆயிரம் ஏர்களும், ஆயிரம் கழுதைகளும் அவனுக்கு உண்டாயின.

ஏழு குமாரரும், மூன்று குமாரத்திகளும் அவனுக்குப் பிறந்தார்கள்.

மூத்த மகளுக்கு எமீமாள் என்றும், இரண்டாம் மகளுக்குக் கெத்சீயாள் என்றும், மூன்றாம் மகளுக்குக் கேரேனாப்புக் என்றும் பேரிட்டான்.

தேசத்தில் எங்கும் யோபின் குமாரத்திகளைப்போல் சௌந்தரியமான பெண்கள் காணப்படவில்லை; அவர்கள் தகப்பன் அவர்கள் சகோதரரின் நடுவிலே அவர்களுக்குச் சுதந்தரம் கொடுத்தான்.

இதற்குப்பின்பு யோபு நூற்றுநாற்பது வருஷம் உயிரோடிருந்து, நாலு தலைமுறையாகத் தன் பிள்ளைகளையும் தன் பிள்ளைகளுடைய பிள்ளைகளையும் கண்டான்.

யோபு நெடுநாளிருந்து, பூரணவயதுள்ளவனாய் மரித்தான்.

வசனங்களில் நாம் பார்க்கும் போது யோபின் மூன்று சிநேகிதரும் கர்த்தருக்கு விரோதமாக செய்த பாவத்தினிமித்தமாக ஏழு காளைகளையும் ஏழு ஆட்டு கடாக்களையும் தெரிந்துக்கொண்டு தாசனாகிய யோபினிட்தில் போய் சர்வாங்க தகனபலிகளை போடுங்கள் என்று சொல்கிறார். இந்த காரியங்களை மேற்கூறிய வசனங்களை ஒப்பிட்டு பார்க்கும்போது யோபுவுக்காக ஏழு காளையும், மூன்று சிநேகிதர் என்று சொல்லும் போது சபையின் முக்கிய பிரபுக்கள் என்று தெரிகிறது.  அவர்களுக்காக ஏழு ஆட்டுகடாக்கள் பலி செலுத்தப்பட்டு இருத்தரத்தாரின் பாவங்கள் மன்னிக்கப்பட்டு அவர்கள் ஆசீர்வதிக்கப்படுவதைப் பார்க்கிறோம். 

இவ்விதமாக நம்முடைய பாவங்களுக்காக நாம் ஏழுமுறை  சுத்திகரிக்கப்படுவோமானால் நம்முடைய முன்னிலைமைகளை காட்டிலும் பின்னிலைமைகளை கர்த்தர் அதிகமாக ஆசீர்வதிப்பார்.  இதனை வாசிக்கிற அன்பானவர்களே நம் எல்லோரிடத்திலும் அதிகமான பாவங்கள்  உண்டு என்பதை உணர்ந்து மேற்க்கூறிய பிரகாரம்  நம்மை தாழ்த்தி ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.     கர்த்தர் ஆசீர்வதிப்பார். கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

 -தொடர்ச்சி நாளை.