தேவனுக்கே மகிமையுண்டாவதாக
I நாளாகமம் 16: 23
பூமியின் சகல குடிகளே, கர்த்தரைப்பாடி, நாளுக்குநாள் அவருடைய ரட்சிப்பைச் சுவிசேஷமாய் அறிவியுங்கள்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
தினந்தோறும் தேவனுக்கு ஆராதனை
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், பலிபீடமாகிய கிறிஸ்துவாகிய நம்முடைய இருதயம் தேவனுடைய வார்த்தையாகிய அக்கினியானது பற்றியெரிந்துக்கொண்டிருக்க வேண்டும். அவ்விதம் பற்றியெரிந்தால் நாம் அனுதினம் சுத்திகரிக்கப்படுவோம். அப்போது நாம் ஆத்மாவில் தேவனை ஆராதிப்போம், அப்போது நம்முடைய பழைய பாரம்பரியம் எல்லாம் களைந்துப் போட்டு புதிய உடனபடிக்கையாகிய கிறிஸ்துவின் இரத்தத்தால் புதிய சாயலை அணிந்து தேவனுக்கு ஆராதனை செய்ய வேண்டும் என்று தியானித்தோம். அடுத்தபடியாக நாம் தியானிப்பது
லேவியராகமம் 7: 6
ஆசாரியரில் ஆண்மக்கள் யாவரும் அதைப் புசிப்பார்களாக; அது பரிசுத்த ஸ்தலத்தில் புசிக்கப்படவேண்டும்; அது மகா பரிசுத்தமானது.
பலிபீடத்தில் கர்த்தருக்கு படைத்த பலிகளில் ஆண்மக்கள் யாவரும் புசிப்பார்களாக;அது பரிசுத்த ஸ்தலத்தில் புசிக்கப்பட வேண்டும். அது மகா பரிசுத்தமானது. இதன் பொருள் என்னவெனில் ஆண் மக்கள் என்று குறிக்கபபடுகிறது நம்முடைய ஆத்மாவின் வளர்ச்சியை காட்டுகிறது. அது என்னவெனில் விசுவாசத்தில் பலமுள்ளவைகளாக தேவனோடுக்கூட வாழ்வதைக் காட்டுகிறது.
வெளி 21: 5-7
சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தவர்: இதோ, நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன் என்றார். பின்னும், அவர்: இந்த வசனங்கள் சத்தியமும் உண்மையுமானவைகள், இவைகளை எழுது என்றார்.
அன்றியும், அவர் என்னை நோக்கி: ஆயிற்று, நான் அல்பாவும் ஒமெகாவும், ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன். தாகமாயிருக்கிறவனுக்கு நான் ஜீவத்தண்ணீரூற்றில் இலவசமாய்க் கொடுப்பேன்.
ஜெயங்கொள்ளுகிறவன் எல்லாவற்றையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்; நான் அவன் தேவனாயிருப்பேன், அவன் என் குமாரனாயிருப்பான்.
ஆண்மக்கள் யாவரும் புசிக்கிறது என்றாலே நாம் யாவரும் கிறிஸ்துவின் சாயலை தரித்து ஆத்மாவில் தேவனை ஆராதிப்பதற்கு பழைய ஏற்பாட்டில் திருஷ்டாந்தப்படுத்தப்படுகிறது. அல்லாமலும்
லேவியராகமம் 7:7-10
பாவநிவாரணபலி எப்படியோ, குற்றநிவாரணபலியும் அப்படியே; அவ்விரண்டிற்கும் பிரமாணம் ஒன்றே: அதினாலே பாவநிவிர்த்திசெய்த ஆசாரியனை அது சேரும்.
ஒருவனுடைய சர்வாங்க தகனபலியைச் செலுத்தின ஆசாரியன் தான் செலுத்தின தகனபலியின் தோலைத் தனக்காக வைத்துக்கொள்ளவேண்டும்.
அடுப்பிலே பாகம்பண்ணப்பட்டதும், சட்டியிலும் தட்டின்மேலும் சமைக்கப்பட்டதுமான போஜனபலி யாவும் அதைச் செலுத்துகிற ஆசாரியனுடையவைகளாயிருக்கும்.
எண்ணெயிலே பிசைந்ததும் எண்ணெயிலே பிசையாததுமான சகல போஜனபலியும் ஆரோனுடைய குமாரர் யாவருக்கும் சரிபங்காகச் சேரவேண்டும்.
இந்த வசனங்களை நாம் தியானிக்கும்போது மேலே கூறபட்டுள்ள பாவ நிவாரணபலியும்,குற்றநிவாரணபலிக்கும் பிரமாணம் ஒன்றே. பலியோடுகூட தேவனை ஒரே போல் தேவனை மகிமைப்படுத்த வேண்டும். அதினாலே பாவநிவிர்த்தி செய்த ஆசாரியத்துவம் செய்தவர்களை சாரும். நாம் கர்த்தருக்கு செலுத்துகிற ஆராதனையை கர்த்தர் அங்கீகரித்தால் தேவ சமாதானம் விளங்கும். இவற்றைக்குறித்து
லேவியராகமம் 7: 14, 15
அந்தப் படைப்பு முழுவதிலும் வகைக்கு ஒவ்வொன்றை எடுத்துக் கர்த்தருக்கு ஏறெடுத்துப்படைக்கும் பலியாகச் செலுத்துவானாக; அது சமாதான பலியின் இரத்தத்தைத் தெளித்த ஆசாரியனுடையதாகும்.
சமாதானபலியாகிய ஸ்தோத்திரபலியின் மாம்சமானது செலுத்தப்பட்ட அன்றைத்தினமே புசிக்கப்படவேண்டும்; அதில் ஒன்றும் விடியற்காலமட்டும் வைக்கப்படலாகாது.
நாம் அனுதினம் ஸ்தோத்திரபலியோடுக்கூட கர்த்தருக்கு ஆராதனை செய்ய வேண்டும் என்பதின் திருஷ்டாந்த வசனம் தான்
லேவியராகமம்7: 18—21
சமாதானபலியின் மாம்சத்தில் மீதியானது மூன்றாம் நாளில் புசிக்கப்படுமானால், அது அங்கிகரிக்கப்படாது; அதைச் செலுத்தினவனுக்கு அது பலிக்காது; அது அருவருப்பாயிருக்கும்; அதைப் புசிக்கிறவன் தன் அக்கிரமத்தைச் சுமப்பான்.
தீட்டான எந்த வஸ்துவிலாவது அந்த மாம்சம் பட்டதானால் அது புசிக்கப்படாமல் அக்கினியிலே சுட்டெரிக்கப்படக்கடவது; மற்ற மாம்சத்தையோ சுத்தமாயிருக்கிறவனெவனும் புசிக்கலாம்.
ஒருவன் தீட்டுள்ளவனாயிருக்கையில் கர்த்தருடைய சமாதானபலியின் மாம்சத்தைப் புசித்தால், அவன் தன் ஜனத்தாரில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான்.
மனுஷருடைய தீட்டையாவது, தீட்டான மிருகத்தையாவது, அருவருக்கப்படத்தக்க தீட்டான மற்ற எந்த வஸ்துவையாவது ஒருவன் தொட்டிருந்து, கர்த்தருடைய சமாதானபலியின் மாம்சத்திலே புசித்தால், அவன் தன் ஜனங்களில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான் என்றார்.
தினந்தோறும் தேவனுக்கு ஸ்தோத்திர பலியோடுக்கூட ஆராதனை செய்ய வேண்டும் என்பதையும், மேலும் பரிசுத்த உள்ளத்தோடு தேவனுக்கு ஆராதனை செய்ய வேண்டும் என்றும், நம்முடைய உள்ளத்தில் எந்த அருவருப்புகளோ, எந்தவிதமான தீட்டுகளோடே சேர்ந்து நின்று ஸ்தோத்திரபலியிட்டு தேவனை ஆராதித்தால் அவர்கள் இஸ்ரவேலில் இல்லாதபடி அறுப்புண்டு போவார்கள் என்று கர்த்தர் சொல்கிறார்.
ஆதலால் பிரியமானவர்களே, நாம் யாவரும் பரிசுத்த உள்ளத்தோடு தேவனுக்கு ஆராதனை செய்யும்படியாக ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம். கர்த்தர் ஆசீர்வதிப்பார். கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.