தேவனுக்கே மகிமையுண்டாவதாக

எபிரெயர் 3: 6

கிறிஸ்துவோ அவருடைய வீட்டிற்கு மேற்பட்டவரான குமாரனாக உண்மையுள்ளவராயிருக்கிறார்; நம்பிக்கையினாலே உண்டாகும் தைரியத்தையும் மேன்மைபாராட்டலையும் முடிவுபரியந்தம் உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருப்போமாகில், நாமே அவருடைய வீடாயிருப்போம்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.     அல்லேலுயா.

மணவாட்டி சபை தேவனுடைய வீடாக பிரதீஷ்டிக்கப்படுவோம்

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபை பரிசுத்தத்தோடு தேவனை ஆராதிக்க வேண்டும் என்றும் எந்த விதமான அரவருப்புகளோ, தீட்டான காரியங்களோ நம்முடைய உள்ளத்தில் இருக்கக் கூடாது என்றும், அவ்விதம் அருவருப்புகளோடு ஆராதனை செலுத்தினால் அவர்கள் இஸ்ரவேலில் இல்லாதபடி அறுப்புண்டு போவார்கள் என்று கர்த்தர சொல்கிறார்.  கர்த்தர் மோசேயினிடம் சொல்கிறதாவது சபையின் ஆசாரியத்துவம் கிறிஸ்துவுக்கு திருஷ்டாந்தத்துக்கு ஆரோனையும், அவன் குமாரரையும்  வரவழைத்து 

லேவியராகமம் 8 :2,3

நீ ஆரோனையும் அவன் குமாரரையும் வரவழைத்து, வஸ்திரங்களையும், அபிஷேகதைலத்தையும், பாவநிவாரணபலிக்கு ஒரு காளையையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும், ஒரு கூடையில் புளிப்பில்லா அப்பங்களையும் கொண்டுவந்து,

சபையையெல்லாம் ஆசரிப்புக் கூடார வாசலுக்கு முன்பாகக் கூடிவரச்செய் என்றார்.

வசனங்களில் எழுதப்பட்டிருக்கிறவைகள் கிறிஸ்து ஆசாரியர் என்பதற்கு திருஷ்டாந்த படுத்தியும், இஸ்ரவேல் சபை எந்தந்த அடிஸ்தானத்தில்  எழும்ப வேண்டும் என்பதை 

லேவியராகமம் 8: 6-12  

கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே, மோசே ஆரோனையும் அவன் குமாரரையும் வரவழைத்து, அவர்களை ஜலத்தினால் ஸ்நானம்பண்ணுவித்து,

அவனுக்கு உள்ளங்கியைப் போட்டு, இடைக்கச்சையைக் கட்டி, மேலங்கியை உடுத்தி, ஏபோத்தைத் தரித்து, அதின்மேல் ஏபோத்தின் விசித்திரமான கச்சையைக் கட்டி,

அவனுக்கு மார்ப்பதக்கத்தை அணிந்து, மார்ப்பதக்கத்திலே ஊரீம் தும்மீம் என்பவைகளையும் வைத்து,

அவன் தலையிலே பாகையைத் தரித்து, பாகையின்மேல் அவன் நெற்றியிலே பரிசுத்த கிரீடம் என்னும் பொற்பட்டத்தைக் கட்டினான்.

பின்பு மோசே, அபிஷேகதைலத்தை எடுத்து, வாசஸ்தலத்தையும் அதிலுள்ள யாவற்றையும் அபிஷேகம்பண்ணி, பரிசுத்தப்படுத்தி,

அதில் கொஞ்சம் எடுத்து, பலிபீடத்தின்மேல் ஏழுதரம் தெளித்து, பலிபீடத்தையும் அதின் சகல பணிமுட்டுகளையும், தொட்டியையும் அதின் பாதத்தையும் பரிசுத்தம்படுத்தும்படிக்கு அபிஷேகம்பண்ணி,

அபிஷேகதைலத்திலே கொஞ்சம் ஆரோனுடைய சிரசின்மேல் வார்த்து, அவனைப் பரிசுத்தப்படுத்தும்படி அபிஷேகம்பண்ணினான்.

இந்த வசனங்களை நாம் தியானிக்கும் போது ஆசாரியத்துவம் உள்ளவர்கள் ஜலத்தினால் ஞானஸ்நானம் பெற்றவர்களாக இருக்க வேண்டும்.  உள்ளான மனுஷன் பெலனடைய வேண்டும்.   சத்தியம் என்னும் இடைகச்சை கட்டியிருக்க வேண்டும்.   மேலங்கி தரிக்குதல்(கிறிஸ்துவை தரிக்குதல்).   மேலும் பாவத்தை குறித்தும் நீதியை குறித்தும், நியாயதீர்ப்பை குறித்தும் பரிசுத்த ஆவியானவர் கண்டித்து உணர்த்துகிறதின் திருஷ்டாந்தம் என்பது புரிய வருகிறது.  

மேலும் தலையில் பாகையும், அந்த பாகையின் மேல் நெற்றியிலே பரிசுத்த கிரீடம் என்னும் பொற்பட்டத்தை கட்டினான்.  இதன் விளக்கங்கள் ஒவ்வொன்றும் கழிந்த சில நாட்களுக்கு முன்பாக தியானித்தோம். பின்பு எழுதப்பட்டிருக்கிறது பரிசுத்த ஆவியானவராகிய மணவாட்டியை காட்டுகிறது.  பின்பு மணவாட்டி சபையாகிய நாம் எப்படி தேவன் வாசம்பண்ணும் வாசஸ்தலமாக மாறும்படி ஒப்புக்கொடுக்க வேண்டுமென்று எழுதப்பட்டிருக்கிறது என்பதையும், நம்முடைய சகல அவயவங்களும் தேவனுக்கென்று ஒப்புக்கொடுத்து, கர்த்தர் ஏற்றுக் கொள்வாரானால் மட்டுமே  நம்மை தேவனுக்கென்று பிரதீஷ்டிக்க முடியும்.  

அவற்றைக் குறித்துத்தான் லேவியராகமம் 8:15-22

அப்பொழுது அது கொல்லப்பட்டது; மோசே அதின் இரத்தத்தை எடுத்து, தன் விரலினால் பலிபீடத்தின் கொம்புகளின்மேல் சுற்றிலும் பூசி, பலிபீடத்திற்காகப் பிராயச்சித்தஞ்செய்து, மற்ற இரத்தத்தைப் பலிபீடத்தின் அடியில் ஊற்றிவிட்டு, அதின்மேல் பாவநிவிர்த்தி செய்யும்பொருட்டு அதைப் பரிசுத்தப்படுத்தினான்.

பின்பு மோசே, கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே, குடல்கள்மேல் இருந்த கொழுப்பு முழுவதையும், கல்லீரலின்மேல் இருந்த ஜவ்வையும், இரண்டு குண்டிக்காய்களையும், அவைகளின் கொழுப்பையும் எடுத்து, பலிபீடத்தின்மேல் தகனித்து,

காளையையும் அதின் தோலையும் மாம்சத்தையும் சாணியையும் பாளயத்துக்குப் புறம்பே அக்கினியிலே சுட்டெரித்தான்.

பின்பு அவன் சர்வாங்க தகனபலிக்கு ஆட்டுக்கடாவைக் கொண்டுவந்தான்; அதின் தலையின்மேல் ஆரோனும் அவன் குமாரரும் தங்கள் கைகளை வைத்தார்கள்.

அப்பொழுது அது கொல்லப்பட்டது; மோசே அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளித்தான்.

ஆட்டுக்கடா சந்து சந்தாகத் துண்டிக்கப்பட்டது; கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே, மோசே அதின் தலையையும் துண்டங்களையும் கொழுப்பையும் தகனித்தான்.

குடல்களையும் தொடைகளையும் தண்ணீரால் கழுவினபின், மோசே ஆட்டுக்கடா முழுவதையும் பலிபீடத்தின்மேல் கர்த்தருக்குச் சுகந்த வாசனைக்கான சர்வாங்க தகனபலியாகத் தகனித்தான்.

பின்பு பிரதிஷ்டைப்படுத்துவதற்குரிய மற்ற ஆட்டுக்கடாவைக் கொண்டுவந்தான்; அதின் தலையின்மேல் ஆரோனும் அவன் குமாரரும் தங்கள் கைகளை வைத்தார்கள்.

மேற்க்கூறிய வசனங்கள் நாம் தேவனுக்காக நம்மை பிரதீஷ்டிப்பதை காட்டுகிறது.  நம்முடைய பிரதீஷ்டையை கர்த்தர் அங்கீகரித்தால் அவர் நம்மை ஆசீர்வதிப்பார். அப்போது நாம் தேவனுடைய வீடாக மாறுவோம். ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.     கர்த்தர் ஆசீர்வதிப்பார். கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

 -தொடர்ச்சி நாளை.