தேவனுக்கே மகிமையுண்டாவதாக
எசேக்கியேல் 10: 4
கர்த்தருடைய மகிமை கேருபீனின் மேலிருந்து எழும்பி, ஆலயத்தின் வாசற்படியிலே வந்தது; ஆலயம் மேகத்தினாலே நிறைந்திருந்தது, பிராகாரமும் கர்த்தருடைய மகிமையின் பிரகாசத்தினால் நிரம்பிற்று.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மகிமையான மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமாவில் அந்நிய அக்கினிக்கு இடமில்லை
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், கர்த்தர் எவ்விதம் நம்மை மகிமையின் ஆலயமாக மாற்றுகிறார் என்பதனை குறித்து தியானித்தோம். அதனைக்குறித்து கர்த்தர் திருஷ்டாந்தப்படுத்திய காரியம் என்னவெனில் கர்த்தருடைய மகிமை நம்மளில் விளங்க வேண்டுமானால், கர்த்தர் மோசே மூலம் ஆரோனுக்கு ஆசாரியத்துவ பட்டம் கொடுத்து, பாவ நிவிர்த்தியையும், சுத்திகரிப்பையும் பாவ நிவாரண பலியையும், குற்ற நிவாரண பலியையும், சர்வாங்க தகன பலியையும், போஜன பலியையும், நமக்கு திருஷ்டாந்தத்திற்காக செய்து காட்டி, நாம் செலுத்த வேண்டிய அத்தனை பலிகளுக்கும் ஒரே பலியாக நமக்காக கிறிஸ்து பலியாகினார். அவருடைய இரத்தம் நம்முடைய சகல பாவங்களையும் நீக்கி சுத்திகரிக்கும் என்பதில் மாற்றமில்லை. நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துதான் மெல்கிசேதேக்கின் முறைமையின் படி என்றென்றும் ஆசாரியராயிருக்கிறார். இதனை திருஷ்டாந்தப்படுத்தவே கர்த்தருடைய தாசனாகிய மோசேயையும் ஆரோனையும் வைத்து நமக்கு விளக்கி காட்டுகிறார்.
என்னவெனில் லேவியராகமம் 9: 23,24
பின்பு மோசேயும் ஆரோனும் ஆசரிப்புக் கூடாரத்துக்குள் பிரவேசித்து, வெளியே வந்து, ஜனங்களை ஆசீர்வதித்தார்கள்; அப்பொழுது கர்த்தருடைய மகிமை சகல ஜனங்களுக்கும் காணப்பட்டது.
அன்றியும் கர்த்தருடைய சந்நிதியிலிருந்து அக்கினி புறப்பட்டு, பலிபீடத்தின்மேல் இருந்த சர்வாங்க தகனபலியையும் கொழுப்பையும் எரித்துவிட்டது; ஜனங்களெல்லாரும் அதைக் கண்டபோது ஆரவாரித்து முகங்குப்புற விழுந்தார்கள்.
அவர்கள் ஜனங்களை ஆசீர்வதிக்கையில் கர்த்தருடைய மகிமை சகல ஜனங்களுக்கும் காணப்பட்டது. அந்த மகிமை தான் கிறிஸ்து. அதனால் தான் யோவான் 17:10
என்னுடையவைகள் யாவும் உம்முடையவைகள், உம்முடையவைகள் என்னுடையவைகள்; அவர்களில் நான் மகிமைப்பட்டிருக்கிறேன்.
இதிலிருந்து நாம் அறிந்நு கொள்ள வேண்டுவது நம்முடைய உ ள்ளத்தில் கிறிஸ்து மகிமைப்பட்டிருக்கிறார். அவற்றை குறித்து கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சொல்கிறது யோவான் 17:22
நாம் ஒன்றாயிருக்கிறதுபோல அவர்களும் ஒன்றாயிருக்கும்படி, நீர் எனக்குத்தந்த மகிமையை நான் அவர்களுக்குக் கொடுத்தேன்.
இவ்விதமாக கிறிஸ்துவின் மகிமை நம்மளில் பிரகாசிக்கிறது. அதைக் குறித்து தான் கர்த்தருடைய சந்நிதியிலிருந்து அக்கினி புறப்பட்டு, பலிபீடத்தின்மேல் இருந்த சர்வாங்க தகனபலியையும் கொழுப்பையும் எரித்து விட்டது. கர்த்தரின் சந்நிதியிலிருந்து புறப்படுகிற அக்கினி நதி என்றால், நம்முடைய உள்ளம் பரிசுத்த உள்ளமாக மாற்றப்பட்டு, அதிலிருந்து கிறிஸ்துவின் வார்த்தையாகிய அக்கினி புறப்பட்டு நம்முடைய இருதயமாகிய பலிபீடம் சுத்திகரிக்கிறது. அந்த வார்ததையாகிய அக்கினிதான், நம்முடைய இருதயத்தில் விளங்குகிற அந்நிய அக்கினியை பட்சித்து போடும்.
அதைதான் லேவியராகமம் 10:1-3
பின்பு ஆரோனின் குமாரராகிய நாதாபும் அபியூவும் தன்தன் தூபகலசத்தை எடுத்து, அவைகளில் அக்கினியையும் அதின்மேல் தூபவர்க்கத்தையும் போட்டு, கர்த்தர் தங்களுக்குக் கட்டளையிடாத அந்நிய அக்கினியை அவருடைய சந்நிதியில் கொண்டுவந்தார்கள்.
அப்பொழுது அக்கினி கர்த்தருடைய சந்நிதியிலிருந்து புறப்பட்டு, அவர்களைப் பட்சித்தது; அவர்கள் கர்த்தருடைய சந்நிதியில் செத்தார்கள்.
அப்பொழுது மோசே ஆரோனை நோக்கி: என்னிடத்தில் சேருகிறவர்களால் நான் பரிசுத்தம்பண்ணப்பட்டு, சகல ஜனங்களுக்கும் முன்பாக நான் மகிமைப்படுவேன் என்று கர்த்தர் சொன்னது இதுதான் என்றான்; ஆரோன் பேசாமலிருந்தான்.
மேற்க்கூறிய வசனங்களை நாம் தியானிக்கும் போது அக்கினியில் இரண்டு வகை. தேவனுடைய வார்த்தையானது பரிசுத்த அக்கினி, பிசாசின் வார்த்தை அந்நிய அக்கினி. தேவன் கட்டளையிடாமல் ஆரோனின் குமாரர்களாகிய நாதாபும் அபியூவும் கர்த்தரின் சந்நிதியில் அக்கினியை கொண்டு வந்தார்கள். அவர்கள் கர்த்தரின் சந்நிதியில் செத்தார்கள் என்றால் அந்நிய ஆராதனையில் பங்குக்கொண்டால் நம்முடைய ஆத்துமா சாகும் என்பதில் சந்தேகமில்லை.
ஆதலால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து விண்ணப்பிக்கிற ஜெபம்
யோவான் 17: 1-10
இயேசு இவைகளைச் சொன்னபின்பு தம்முடைய கண்களை வானத்துக்கு ஏறெடுத்து:
பிதாவே, வேளை வந்தது, நீர் உம்முடைய குமாரனுக்குத் தந்தருளின யாவருக்கும் அவர் நித்தியஜீவனைக் கொடுக்கும்பொருட்டு மாம்சமான யாவர்மேலும் நீர் அவருக்கு அதிகாரங்கொடுத்தபடியே, உம்முடைய குமாரன் உம்மை மகிமைப்படுத்தும்படிக்கு நீர் உம்முடைய குமாரனை மகிமைப்படுத்தும்.
ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.
பூமியிலே நான் உம்மை மகிமைப்படுத்தினேன்; நான் செய்யும்படி நீர் எனக்கு நியமித்த கிரியையைச் செய்துமுடித்தேன்.
பிதாவே, உலகம் உண்டாகிறதற்கு முன்னே உம்மிடத்தில் எனக்கு உண்டாயிருந்த மகிமையினாலே இப்பொழுது நீர் என்னை உம்மிடத்திலே மகிமைப்படுத்தும்.
நீர் உலகத்தில் தெரிந்தெடுத்து எனக்குத் தந்த மனுஷருக்கு உம்முடைய நாமத்தை வெளிப்படுத்தினேன். அவர்கள் உம்முடையவர்களாயிருந்தார்கள், அவர்களை எனக்குத் தந்தீர், அவர்கள் உம்முடைய வசனத்தைக் கைக்கொண்டிருக்கிறார்கள்.
நீர் எனக்குத் தந்தவைகளெல்லாம் உம்மாலே உண்டாயினவென்று இப்பொழுது அறிந்திருக்கிறார்கள்.
நீர் எனக்குக் கொடுத்த வார்த்தைகளை நான் அவர்களுக்குக் கொடுத்தேன்; அவர்கள் அவைகளை ஏற்றுக்கொண்டு, நான் உம்மிடத்திலிருந்து புறப்பட்டுவந்தேன் என்று நிச்சயமாய் அறிந்து, நீர் என்னை அனுப்பினீர் என்று விசுவாசித்திருக்கிறார்கள்.
நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்; உலகத்துக்காக வேண்டிக்கொள்ளாமல், நீர் எனக்குத் தந்தவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்; அவர்கள் உம்முடையவர்களாயிருக்கிறார்களே.
என்னுடையவைகள் யாவும் உம்முடையவைகள், உம்முடையவைகள் என்னுடையவைகள்; அவர்களில் நான் மகிமைப்பட்டிருக்கிறேன்.
இவ்விதமாக கர்த்தராகிய இயேசுவின் வார்த்தைகளை நாம் ஏற்றுகொண்டால், அவர் நம்மளில் இருந்து மகிமைபடுகிறவராயிருப்பார். இவ்விதம் நாம் யாவரும் மாறும்படியாக ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம். கர்த்தர் ஆசீர்வதிப்பார். கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.